வாட்ஸ்அப் செயலியில் தேவையில்லாத ’சாட்’கள்...? இந்த புதிய அம்சம் உங்களுக்கு தெரியுமா...?

வாட்ஸ்அப் செயலியில் தேவையற்ற சாட்கள் என்று நீங்கள் கருதுபவற்றை நிரந்தரமாக அமைதியாக்க புதிய அம்சம் இணைக்கப்பட உள்ளது

வாட்ஸ்அப் செயலியில் தேவையில்லாத ’சாட்’கள்...? இந்த புதிய அம்சம் உங்களுக்கு தெரியுமா...?
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: July 30, 2020, 5:17 PM IST
  • Share this:
வாட்ஸ்அப் செயலியானது உலகம் முழுவதும் அதிகம் பேர் பயன்படுத்தக் கூடிய முதன்மை தகவல் தொடர்பு செயலியாக உள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் வசமுள்ள வாட்ஸ்அப் செயலியில் அவ்வப்போது பயனர்களின் வசதிக்காக புதிய அம்சங்கள் இணைக்கப்படும்.

சமீபத்தில் QR கோடு மூலம் புதியவர்களை உள்ளே இணைக்கும் அம்சம் கொண்டுவரப்பட்டது. மேலும், பெரிதும் எதிர்பார்க்கப்படும் பணப்பறிமாற்ற வசதியும் விரைவில் கொண்டு வரப்பட இருக்கிறது.

இந்த நிலையில், தேவையற்ற அல்லது முக்கியத்துவம் இல்லாத சாட்களை நிரந்தரமாக மியூட் செய்து வைக்கும் அம்சம் புதிதாக இணைக்கப்பட உள்ளது. தற்போது, 8 மணிநேரம், ஒரு வாரம் மற்றும் ஓராண்டுக்கு ஒரு சாட்-ஐ மியூட் செய்து வைக்கலாம்.


மியூட் வசதி


மியூட் செய்வதால் அந்த சாட்டில் புதிய மெசேஜ் வரும் போது, நோடிபிகேஷன் காட்டாது. குரூப் சாட்டிங்கிற்கும் இந்த மியூட் வசதி இருந்தது.


படிக்க: முழு ஊரடங்கு நீட்டிப்பு - எவற்றுக்கெல்லாம் தடை தொடர்கிறது...?

படிக்க: கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் அமெரிக்காவில் படுகொலை - கணவன் வெறிச்செயல்


படிக்க: ’ஆண் குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்’ ஹர்திக் பாண்டியாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்
தற்போது, ஓராண்டு என்பதற்கு பதிலாக நிரந்தரமாக என்று புதிய அம்சம் சேர்க்கப்பட உள்ளது. இந்த அம்சம் தற்போது பீட்டா வெர்சன் பரிசோதனையில் உள்ளது. இதற்கான அப்டேட், விரையில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ் பயனர்களுக்கு அளிக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
First published: July 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading