முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ஐபோனுக்கு பிஐபி வீடியோ கால் வசதியை அறிமுகப்படுத்த உள்ள வாட்ஸ்அப்..?

ஐபோனுக்கு பிஐபி வீடியோ கால் வசதியை அறிமுகப்படுத்த உள்ள வாட்ஸ்அப்..?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

2020 ஆம் ஆண்டில் ஐஓஎஸ் 14 இயங்குதலும் பயன்பாட்டிற்கு வந்த பிறகு தான் ஐபோன் யூசர்களால் சோதனை முறையிலான PIP வசதியை பயன்படுத்த முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிக்சரின் இன் பிக்சர்(PiP) வீடியோ கால் வசதியை தற்போது ஐ போன் யூசர்களுக்கும் அறிமுகப்படுத்தப் போவதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலியானது ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு என இரண்டு இயங்குதளங்களிலும் யூசர்களுக்கு தங்கள் சேவைகளை அளித்து வருகிறது. அவ்வப்போது இரண்டு இயங்குதளங்களுக்கும் புதுப்புது வசதிகளை சேர்த்தும் புதிய அப்டேட்டுகளை வெளியிட்டும் வருகிறது. அதில் பெரும்பாலும் புதிய அப்டேட்டுகள் அனைத்தும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு வழக்கத்திற்கு வந்த பின்னரே ஐபோன் யூசர்களுக்கு அப்டேட்டுகள் அளிக்கப்படுகிறது.

அதேபோலவே எந்தவித மாற்றமும் இல்லாமல் தற்போதும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிக்சரின் இன் பிக்சர் வீடியோ கால் எனப்படும், வீடியோ கால் பேசிக்கொண்டே செயலியையும் பயன்படுத்தும் வசதியை ஐபோன் யூசர்களுக்கு அறிமுகப்படுத்தப் போவதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.

Read More : கைகோர்க்கும் டாடா குரூப் - ஆப்பிள் நிறுவனம்.. விரைவில் நாடு முழுவதும் சிறிய ஆப்பிள் ஸ்டோர்ஸ்..

சுருக்கமாக பிஐபி என அழைக்கப்படும் இந்த வசதியின் மூலம் நீங்கள் வீடியோ கால் பேசிக்கொண்டே வாட்ஸ் அப்பில் மற்றவர்களுக்கு மெசேஜ் அனுப்புவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவெனில் ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு சில வருடங்கள் முன்னதாகவே இந்த வசதி பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. ஆனால் 2020 ஆம் ஆண்டில் ஐஓஎஸ் 14 இயங்குதலும் பயன்பாட்டிற்கு வந்த பிறகு தான் ஐபோன் யூசர்களால் சோதனை முறையிலான இந்த வசதியை பயன்படுத்த முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் எவ்வாறு யூடியூப், பேஸ்புக் போன்ற லிங்குகளை வாட்ஸ்அப்பில் இருந்து கொண்டே மினி ஸ்கிரீனில் அவற்றைப் பார்ப்பதற்கு உதவி செய்கிறதோ, அதுபோலவே இந்த வீடியோ கால் பிஐபி மூலம் வீடியோ காலை மினி ஸ்க்ரீனில் பார்த்து கொண்டே மற்ற செயல்களை மேற்கொள்ள முடியும். ஆனால் ஐபோன் யூசர்களுக்கு தற்போது வரை சோதனை முறையிலேயே இந்த வசதி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள பீட்டா வெர்ஷன் ஆனது 2023 ஆம் ஆண்டில் முழுமையாக்கப்பட்டு அப்டேட் முழுவதுமாக பயன்பாட்டிற்கு வரும் என்று வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.

தற்போது யூடியுப் செயலியும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த பிஐபி வசதியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்த வசதியை பெற வேண்டுமெனில் நீங்கள் யுடியூபில் பிரீமியம் யூஸராக இருந்தால் மட்டுமே இதை பெற இயலும். ஆனால் வாட்ஸ் அப் இலவசமாக தன்னுடைய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த வசதியை அளிக்க உள்ளது.

கூடுதலாக, 32 நபர்கள் வரை ஒரே நேரத்தில் வீடியோ காலில் இணைவதற்கான வசதியையும் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தி உள்ளது மேலும் அதில் குறிப்பிட்ட ஒருவரை மியூட் செய்யும் வசதியும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ கால், ஆடியோ கால் ஆகியவற்றின் அதிக கவனம் செலுத்தி வரும் வாட்ஸ்அப்பின் இந்த செயல்முறையால் தனிப்பட்ட நபர்கள் முதல் அலுவலக ரீதியான நடவடிக்கைகள் வரை அனைத்திற்கும் வாட்ஸ்அப்பை பயன்படுத்தவே பலர் விரும்பும் சூழ்நிலை உண்டாகியுள்ளது.

First published:

Tags: Apple iphone, Technology