இன்ஸ்டன்ட் மெசேஜிங் உலகில் மிக பிரபலமான App-ஆக இருக்கும் வாட்ஸ்அப்பை, நாள்தோறும் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் ஆர்வமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே யூஸர்கள் மேம்பட்ட அனுபவத்தை பெற பல புதிய அம்சங்களையும், அப்டேட்ஸ்களையும் whatsApp அவ்வப்போது வழங்கி கொண்டே இருக்கிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது யூசபிலிட்டி, பிரைவஸி மற்றும் பிற விஷயங்களுக்கான புதிய அம்சங்களில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
நிறுவனம் சமீபத்தில் வாட்ஸ்அப் வெப்-ற்கான கஸ்டம் ஸ்டிக்கர் உருவாக்கும் டூலை கொண்டு வந்துள்ளது. இது விரைவில் மொபைல் மற்றும் டெஸ்க்டாப் ஆப்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே WhatsApp-ல் விரைவில் வரவிருக்கும் சில முக்கிய அம்சங்களை பற்றியும் கீழே பார்க்கலாம்.
மெசேஜ்களை டெலிட் செய்வதற்கான டைம் லிமிட்..
தற்செயலாக அல்லது தெரியாமல் தனிப்பட்ட நபர் அல்லது குரூப்பிற்கு அனுப்பப்பட்ட மெசேஜை யூஸர்கள் டெலிட் செய்து கொள்வதற்கான டைம் லிமிட் தற்போது 1 மணிநேரம், 8 நிமிடங்கள் மற்றும் 16 வினாடிகளாக உள்ள நிலையில், மிக சமீபத்தில் யூஸர்கள் தங்கள் மெசேஜ்களை டெலிட் செய்து கொள்வதற்கான டைம் லிமிட்டை அதிகரிக்க உள்ளதாக வாட்ஸ்அப் அறிவித்தது. இப்போது நிறுவனம் 7 நாட்கள் மற்றும் 8 நிமிடங்கள் என்ற டைம் லிமிட்டை டெஸ்ட் செய்து வருவதாக கூறப்படுகிறது.
ப்ளேபேக் கன்ட்ரோல்ஸ்..
ஆடியோ மெசேஜஸ் அல்லது வாய்ஸ் நோட்ஸ்களின் ப்ளேபேக் ஸ்பீடை மேலும் அட்ஜஸ்ட் செய்ய யூஸர்களை WhatsApp விரைவில் அனுமதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஃபார்வர்டு வாய்ஸ் நோட்ஸ்களை ஸ்பீடிங் அப் செய்வதற்கான சாத்தியக்கூறுகளில் WhatsApp செயல்படுகிறது. தற்போது யூஸர்கள் 2X ஸ்பீடை அதிகரிப்பதன் மூலம் நேரடி வாய்ஸ் மெசஜ்களை ஸ்பீடாக கேட்டு வரும் நிலையில், சமீபத்திய அப்டேட்களின் படி ஃபார்வர்டு செய்யப்பட்ட வாய்ஸ் நோட்ஸ்களை ஸ்பீட்அப் செய்யும் வசதியையும் யூஸர்கள் பெறுவார்கள்.
லாஸ்ட் சீன், ப்ரொஃபைல் ஃபோட்டோவிற்கான ப்ரைவஸி செட்டிங்ஸ்..
யூஸர்கள் தங்கள் கடைசியாக வாட்ஸ்அப் வந்தது, ப்ரொஃபைல் ஃபோட்டோ மற்றும் ஸ்டேட்டஸை குறிப்பிட்ட தொடர்புகளிலிருந்து மறைக்க அனுமதிக்கும் அம்சத்தையும் whatsapp டெஸ்ட் செய்கிறது. WhatsApp தற்போது யூஸர்களுக்கு 3 ஆப்ஷன்களை வழங்குகிறது. அவர்களின்ப்ரொஃபைல் ஃபோட்டோ மற்றும் லாஸ்ட் சீன் ஆகியவற்றுக்கு "Everyone," "Nobody" மற்றும் "My Contacts." உள்ளிட்ட ப்ரைவஸி செட்டிங்ஸை அளிக்கிறது. விரைவில் இதோடு சேர்த்து “My Contacts…Except"என்ற ஆப்ஷனை விரைவில் சேர்க்க உள்ளது WhatsApp.
ஃபோட்டோ எடிட்டர்..
இந்த மாத தொடக்கத்தில் வாட்ஸ்அப் இந்த அம்சத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஃபோட்டோ எடிட்டரை வாட்ஸ்அப் வெப்பில் கொண்டு வரும் வேலையில் இருப்பதாக நிறுவனம் கூறியது. இதன் மூலம் யூஸர்கள் எந்த வாட்ஸ்அப் ஸ்கிரீனில் இருந்தும் ஸ்டிக்கர்கள் மற்றும் டெக்ஸ்ட்களை சேர்க்கலாம் அல்லது தங்கள் ஃபோட்டோக்களை க்ராப் மற்றும் ரொட்டேட் செய்யலாம்.
Also read... 2021 ஆம் ஆண்டு அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்டு OS எது தெரியுமா?
மொபைல் ஆப்-பிற்கான ஸ்டிக்கர் மேக்கர்..
தற்போது யூஸர்கள் ப்ரீ லோடட் அல்லது தேர்ட் பார்ட்டி ஸ்டிக்கர் பேக்ஸ்களை பயன்படுத்தி ஸ்டிக்கர்களை அனுப்ப மட்டுமே வாட்ஸ்அப் அனுமதிக்கிறது. எனினும் விரைவில் iOS மற்றும் Android யூஸர்கள் தங்கள் சொந்த ஸ்டிக்கர்களை விரைவில் உருவாக்க நிறுவனம் அனுமதிக்கும் என்று சமீபத்திய அறிக்கைகள் கூறுகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Whatsapp Update