WhatsApp : கால் செய்யும் வசதியை அப்டேட் செய்கிறது வாட்ஸ் அஃப் நிறுவனம்
WhatsApp : கால் செய்யும் வசதியை அப்டேட் செய்கிறது வாட்ஸ் அஃப் நிறுவனம்
வாட்ஸ்அப்
WhatsApp : நம்மில் பலர் மெசேஜ், போட்டோ, வீடியோ மற்றும் டாக்குமண்ட் போன்றவற்றை அனுப்புவதற்கு, ஆடியோ, வீடியோ கால் பேசுவதற்கும் வாட்ஸ் அப் பயன்படுத்தி வந்தாலும், அதில் இருக்கு யூபிஐ பேமெண்ட் வசதியை பலரும் பயன்படுத்துவதில்லை.
மெடா நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும், உடனடி மெசேஜ் ஆப்-பான வாட்ஸ் அப்பில் பயனாளர்கள் வாய்ஸ் கால் பேசும் வசதி அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில், ஆண்டிராய்ட் பேடா 2.22.5.4 வெர்சனில் இந்த அப்டேட் செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் குறித்த தகவல்களை அவ்வபோது வெளியிட்டு வரும் டபிள்யூ.ஏ. பேடா இன்ஃபோ தெரிவித்துள்ளது.
இதேபோன்று ஆண்டிராய்டு பேடா 2.22.5.3 வெர்சன் பயன்படுத்தும் ஒரு சில வாடிக்கையாளர்களுக்கும் இந்தப் புதிய வசதி கிடைக்கப் பெறுகிறது. மேம்படுத்தப்பட்ட வசதி மூலமாக வாட்ஸ் அப்பில் புதிய இண்டர்பேஸ் (காட்சி அமைப்பு) வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். அதே சமயம், ஐஓஎஸ் ஆப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி இன்னும் மேம்படுத்தப்படவில்லை.
வாட்ஸ் அப்பில் குரூப் காலில் நாம் பேசும்போது, எதிரே யார் பேசுகின்றனர் என்பதை அறிந்து கொள்வதற்கான வேவ்ஃபார்ம் வசதியை மேம்படுத்தும் முயற்சியை வாட்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், வாட்ஸ் அப்பில் தடை செய்யப்படும் அக்கவுண்ட்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் பயனாளர்களுக்கு பதில் அளிப்பதற்கான ஸ்க்ரீன் ஒன்றையும் வாட்ஸ் அப் நிறுவனம் உருவாக்கி வருகிறது.
வாட்ஸ் அப்பில் யூபிஐ( upi payment) வசதியை இணைத்து விட்டீர்களா?
நம்மில் பலர் மெசேஜ், போட்டோ, வீடியோ மற்றும் டாக்குமண்ட் போன்றவற்றை அனுப்புவதற்கு, ஆடியோ, வீடியோ கால் பேசுவதற்கும் வாட்ஸ் அப் பயன்படுத்தி வந்தாலும், அதில் இருக்கும் யூபிஐ பேமெண்ட் வசதியை பலரும் பயன்படுத்துவதில்லை.
கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற யூபிஐ மூலமாக பணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பிலும் இருக்கிறது. இதை எப்படி செயல்படுத்துவது?
உங்கள் வாட்ஸ் நம்பர் இருக்கும் அதே நம்பரில் பேங்க் அக்கவுண்ட் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்யவும்.
வாட்ஸ் அப் மேல் வலது கார்னரில் உள்ள மூன்று வெர்டிகள் புள்ளிகளை கிளிக் செய்யவும்.
அதில் உள்ள பேமெண்ட்ஸ் ஆப்சனை டேப் செய்யவும்.
4 நியூ பேமெண்ட் என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது யூபிஐ ஐடி என்பதை தேர்வு செய்யவும்.
இப்போது பணம் பெற இருப்பவரின் யூபிஐ ஐடியை குறிப்பிடவும்.
இதை வெரிஃபை செய்த பிறகு, எவ்வளவு தொகை அனுப்ப உள்ளீர்கள் என்பதை குறிப்பிடவும்.
பணம் செலுத்தும் முன்பாக உங்கள் யூபிஐ பின் நம்பரை உள்ளிடவும்.
நீங்கள் குறிப்பிட்ட பின் நம்பர் சரியானதாக இருந்தால், ரீசிவருக்கு உங்கள் பணம் சென்று சேர்ந்து விடும்.
இப்போது உங்கள் பரிவர்த்தனை வெற்றிகரமாக நிறைவடைந்தது என்பதை தெரிவிக்கும் மெசேஜ் உங்கள் ஸ்கிரீனில் தோன்றும்.
வங்கியில் உள்ள உங்கள் பணத்தின் பாதுகாப்பு கருதி, அக்கவுண்ட் விவரங்கள், டெபிட் கார்டு விவரங்கள் மற்றும் யூபிஐ பின் நம்பர் போன்றவற்றை யாரிடமும் பகிர்ந்து கொள்ள கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.