Home /News /technology /

வாட்ஸ்அப்பில் அட்டகாசமான 5 அப்டேட்கள்....

வாட்ஸ்அப்பில் அட்டகாசமான 5 அப்டேட்கள்....

whatsapp

whatsapp

WhatsApp Update | லேட்டஸ்ட் பீட்டா அப்டேட் வழியாக வாட்ஸ்அப் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.

    பிரபல இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப், தனது சமீபத்திய அப்டேட்டில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளது. வழக்கம் போல இந்த புதிய வாட்ஸ்அப் அம்சங்களும், அனைவரையும் சென்றடையும் முன், அதாவது அனைத்து வகையான பயனர்களுக்குமான பொது தளத்திற்கு செல்லும் முன் சோதனைக்காக வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் - பீட்டா பதிப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!

    அறியாதோர்களுக்கு, புதிய அம்சங்கள் சரியாகச் செயல்படுகின்றனவா என்பதை உறுதிசெய்ய வாட்ஸ்அப் நிறுவனம் அவைகளை பீட்டா பதிப்பின் கீழ் சோதனைக்கு உட்படுத்தும். பீட்டா சோதனைக் காலத்தில் வெற்றிகரமாக இயங்கிய பிறகுதான் புதிய அம்சங்கள் அனைவருக்குமான வாட்ஸ்அப் செயலிக்குள் சேர்க்கப்படும்.

    இப்படியாக சோதனை செய்யப்படும் வாட்ஸ்அப் அம்சங்களை கண்டறிந்து, அது சார்ந்த அறிக்கைகளை வெளியிடுவதில் கில்லாடியான வாட்ஸ்ஆப்பீட்டாஃஇன்போவின் (WABetaInfo) கூற்றுப்படி, லேட்டஸ்ட் பீட்டா அப்டேட் வழியாக வாட்ஸ்அப் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.

    Also Read : போலி வாடிக்கையாளர் சேவை மையத்தால் 16 லட்சம் இழந்த பெண்... ஆன்லைன் ஸ்கேம்களில் இருந்து பாதுகாப்பது எப்படி?

    அப்படி என்னென்ன அம்சங்கள் அறிமுகமாகி உள்ளன?

    1. நீங்கள் டெஸ்க்டாப்பில் டார்க் தீம்-ஐ பயன்படுத்தும் போது, சாட் பபிள்ஸ்களுக்கான புதிய வண்ணங்களை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தப் போகிறது.

    2. மெசேஜ் ரியாக்ஷன்களை இயக்குவதற்கும் முடக்குவதற்கும் ஐஓஎஸ் பீட்டாவில் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ்அப் சோதிக்கிறது. இந்த அம்சத்தை நீங்கள் செட்டிங்ஸ் > நோட்டிஃபிக்கேஷன்ஸ் என்பதன் கீழ் காணலாம்.

    3. வாட்ஸ்அப் பீட்டா வழியாக ஐஓஎஸ் பதிப்பிற்கு வரும் மற்றொரு புதிய அம்சம், உலகளாவிய வாய்ஸ் நோட் பிளேயர் ஆகும். இந்த அம்சம், நீங்கள் வேறு சாட்டிற்கு மாறினாலும் கூட தொடர்ந்து வாய்ஸ் நோட்களை கேட்க உங்களை அனுமதிக்கும். இந்த அம்சம் விரைவில் ஆண்ட்ராய்டுக்கும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போது ஐஓஎஸ்-க்கான பீட்டாவில் கிடைக்கிறது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும்.

    4. வாட்ஸ்அப் பிசினஸ் பீட்டாவை, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-இல் பயன்படுத்துபவர்களுக்காக மேம்பட்ட சேர்ச் பில்டர்களை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் காண்டாக்ஸ், நான்-காண்டாக்ஸ் மற்றும் அன்ரீட் உள்ளிட்ட ஸ்பெஷல் சேர்ச் பில்டர்கள் உங்கள் சாட்டில் அணுக கிடைக்கும்.

    5. ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரண்டிற்குமே, ட்ராயிங் எடிட்டர் அப்டேட் மற்றும் ப்ளர் இமேஜஸ் அம்சம் போன்ற அம்சங்கள் இன்னும் சோதனையில் உள்ளன. இருப்பினும் இவைகள் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை.

    Also Read : உங்கள் ஸ்மார்ட்போன் தொலைந்து போனால் அதை கண்டுபிடித்து லாக் செய்து, தரவுகளை நீக்குவது எப்படி?

    பீட்டாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வாட்ஸ்அப் அம்சங்களை பெறுவது எப்படி?

    01. உங்கள் ஆண்ட்ராய்டில் உள்ள கூகுள் ப்ளேவிற்கு சென்று வாட்ஸ்அப்பை தேடவும்.
    02. பின்னர் "Become a Beta Tester" (பீட்டா டெஸ்டராகுங்கள்) என்கிற விருப்பத்தை பார்க்கும் வரை கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்யவும்.
    03. பின்னர் I'm In (நான் இணைகிறேன்) என்கிற பட்டனை கிளிக் செய்து "ஜாயின்" என்பதைக் கிளிக் செய்யவும்.
    04. இப்போது வாட்ஸ்அப் பீட்டாவைப் பதிவிறக்கம் செய்யவும் அல்லது ஏற்கனவே இருக்கும் வாட்ஸ்அப் பீட்டா ஆப்பிற்கான லேட்டஸ்ட் வெர்ஷனை பதிவிறக்கம் செய்யவும்.
    05. அது முடிந்ததும், வாட்ஸ்அப் பீட்டாவிற்கான அனைத்து புதிய அம்சங்களையும் நீங்கள் பார்க்கலாம்.
    Published by:Selvi M
    First published:

    Tags: Technology, WhatsApp, Whatsapp Update

    அடுத்த செய்தி