• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • இனி 24 மணி நேரத்தில் மறையும் மெசேஜ்கள் விருப்பத்தை தேர்வு செய்யலாம்: வாட்ஸ் அப் புதிய அப்டேட்

இனி 24 மணி நேரத்தில் மறையும் மெசேஜ்கள் விருப்பத்தை தேர்வு செய்யலாம்: வாட்ஸ் அப் புதிய அப்டேட்

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

யூசர்கள் தேர்வு செய்ய பல விருப்பங்களை வழங்கும் டெலிகிராம் போன்ற போட்டி செயலிகளுடன் வாட்ஸ்அப் மீண்டும் போட்டியிட உள்ளது.

  • Share this:
பேஸ்புக்கிற்குச் சொந்தமான உடனடி மெசேஜ் தளமான வாட்ஸ்அப் கடந்த ஆண்டு மிகவும் பிரபலமான "டிஸ்சப்பியரிங் மெசேஜ்" அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் ஒரு யுசரால் அனுப்பப்பட்ட மெசேஜ் ஏழு நாட்களுக்குப் பிறகு தானாகவே மறைய செய்யும். தற்போது, இந்த அம்சத்தில் நிறுவனம் வேறொரு மாற்றத்தை கொண்டு வர உள்ளது. அதாவது, வாட்ஸ்அப் அண்ட்ராய்டு, வாட்ஸ்அப் iOS மற்றும் வாட்ஸ்அப் வெப் டெஸ்க்டாப் ஆகிய தளங்களில் 'டிஸ்ஸப்பியரிங் மெசேஜ்' சேவைகளுக்கான கால அவகாசத்தை 24 மணிநேரத்திற்கு குறைக்கும்படியான ஒரு புதிய விருப்பத்தை வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது சோதனை செய்து வருகிறது.

இந்த விருப்பத்தின் மூலம், யூசர்கள் தேர்வு செய்ய பல ஆப்சன்களை வழங்கும் டெலிகிராம் போன்ற போட்டி செயலிகளுடன் வாட்ஸ்அப் மீண்டும் போட்டியிட உள்ளது. வரவிருக்கும் அம்சத்தை வாட்ஸ்அப் புதுப்பிப்புகளைக் கண்காணிக்கும் வலைத்தளமான WABetaInfo கண்டறிந்தது. அதேபோல வாட்ஸ்அப் 7 நாட்கள் விருப்பத்தை மாற்றாது என்றும் 24 மணிநேர விருப்பம் பயனர்களுக்கு கூடுதல் தேர்வாக இருக்கும் என்றும் WABetaInfo வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் WABetaInfo பகிர்ந்த ஸ்கிரீன் ஷாட் அடிப்படையில் யூசர்கள் தனிப்பட்ட மற்றும் குரூப் சாட்களுக்கான மறைந்துபோகும் செய்தி அம்சத்தை இயக்குதல் அல்லது முடக்கும் பிரிவில் 7 நாட்கள் தவிர, 24 மணிநேர விருப்பத்தையும் பெறலாம் என்பதைக் காட்டுகிறது.

வாட்ஸ்அப் குரூப் சாட்களைப் பொறுத்தவரை, முன்னதாக குரூப் அட்மின்கள் மட்டுமே மறையும் செய்திகள் அம்சத்தை கட்டுப்படுத்த முடியும். சமீபத்தில், ஒரு குரூப்பில் இருக்கும் அனைவரும் டிஸ்சப்பியரிங் மெசேஜ் அமைப்பை இயல்பாக மாற்றுவதற்கான அம்சம் iOS பயன்பாட்டில் புதுப்பிக்கப்பட்டது. அதேபோல ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களில் "டிஸ்சப்பியரிங் இமேஜ்" அம்சத்தை கொண்டு வருவதற்காக வாட்ஸ்அப் நிறுவனம் சோதனை நடத்தி வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இதுதவிர சமீபத்தில், WABetaInfo-ல் வெளியான ஒரு அறிக்கையில் பேஸ்புக்கிற்குச் சொந்தமான தளம் ஒரு புதிய அம்சத்தை சோதித்து வருவதாகக் கூறப்பட்டது.

இது யூசர் குரல் குறிப்புகளின் பின்னணி வேகத்தை மாற்ற அனுமதிக்கும். கடந்த வாரம் வந்த அறிக்கையின்படி, வாட்ஸ்அப் மூன்று பின்னணி வேக விருப்பங்களை சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. அவை, 1x, 1.5x மற்றும் 2x ஆகியவை ஆகும். குறிப்பிடத்தக்க வகையில், குரல் செய்திகளுக்கான மெதுவான பின்னணி வேகத்திற்கு இன்னும் எந்த அம்சமும் அறிமுகப்படுத்தவில்லை. இதற்கிடையில், COVID-19 தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கான நிறுவனத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக பேஸ்புக்கிற்கு சொந்தமான உடனடி செய்தி தளம் ‘அனைவருக்கும் தடுப்பூசிகள்’ என்ற புதிய ஸ்டிக்கர் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: