வாட்ஸ்அப் சமீபத்தில் ஒரு புதிய அம்சம் ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளது. அதன்படி பயனர்கள் வீடியோ காலில், ஜாலியாகப் பேசும் அம்சத்தை இணைத்துள்ளது.
அன்றாட வாழ்க்கையில் செல்போன் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ்அப் செயலி பல்வேறு விதமான உரையாடல்கள் மற்றும் பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சில சேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளர்களுக்கு அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. அதன்படி ஒரே சமயத்தில் 8 பேருடன் வீடியோ காலில் பேசும் வகையிலான புதிய ஜாயின் கால் (Join call) வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியின் மூலம் பயனாளி ஒருவர் உரையாடலின் நடுவே வெளியேறினால் மீண்டும் இணைந்து கொள்ள முடியும். இந்தப் புதிய அப்டேட் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த புதிய அப்டேட் வாட்ஸ்அப் பயனாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதன்படி, குரூப் வீடியோ கால் அழைக்கப்பட்ட போது அதில் இணையவில்லை என்றாலும், அதற்கான அழைப்பு வெயிட்டிங்கில் இருக்கும். அதன் பிறகு குரூப் காலில் நாம் இணைந்து கொள்ளலாம். ஆனால், அந்த குறிப்பிட்ட குரூப் அப்போது இயக்கத்தில் இருக்க வேண்டும். இது ஜூம் மற்றும் கூகுள் மீட் போன்றதே.
முன்னதாக, ஐஓஎஸ் குரூப் கால் வசதியில் புதிய அப்டேட்டை சோதனை முறையில் கொண்டு வந்தது. ஒரு வெயிட்டிங் கால் ஆப்ஷனைப் போலவே, இது கொடுக்கப்பட்டது. யாராவது உங்களுக்கு குரூப் கால் அழைப்பு கொடுத்தால் உங்களது ஸ்கிரீனில் இது தெரியும், ஸ்கிரீனின் கீழ் பகுதியில் ரிங் பட்டனும் உள்ளது. குறிப்பிட்ட குரூப் கால் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தால் நீங்கள் மறுபடியு எப்போது வேண்டுமானாலும் மீண்டும் இணையலாம். அங்கு கொடுக்கப்பட்டிருக்கம் “Top to join” மூலம் இணைந்து கொள்ளலாம். வேண்டுமானால் வீடியோ காலை தவிர்க்க ‘Ignore’ ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.
Must Read : டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்வி... ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது - மத்திய அமைச்சர் விளக்கம்
இந்த புது பேடேட்டால் பயனாளர்கனின் பிரைவசிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப்பின் இந்த புதிய அப்டேட்டால் இனி குரூப் அழைப்புகளை பயனர்களை மிஸ்பண்ண மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த நேரத்திலும் வாட்ஸ்அப் குரூப் அழைப்பில் இணைந்து கொள்ளலாம் என்பதால் அதிக பயனர்களை உள்ளடக்கி இனி குரூப் அழைப்புகள் இருக்கும். வீடியோ அழைப்புகளுக்கு மட்டுமின்றி வாய்ஸ் அழைப்புகளுக்கும் இந்த அப்டேட் பயனுடையதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Video calls, WhatsApp