ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

நமக்கு நாமே மெசேஜ் செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ள வாட்ஸ்அப்!

நமக்கு நாமே மெசேஜ் செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ள வாட்ஸ்அப்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

முதலில் வாட்ஸ்அப் இந்த வசதியை அறிமுகப்படுத்துவதற்கான அறிவிப்பை செய்தவுடன் பலரும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

முன்னர் பீட்டா வெர்ஷனில் சோதனை முறையில் இருந்த இந்த வசதி தற்போது அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டிற்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக அளவு மக்களால் விரும்பி பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலியானது தொடர்ந்து தன்னுடைய சேவைகளிலும் வசதிகளிலும் பல முக்கிய மாற்றங்களை செய்து கொண்டு வருகிறது. மேலும் அந்தந்த காலத்திற்கேற்ப யூசர்களின் தேவைகளை அறிந்து புதுப்புது அம்சங்களை புகுத்தி யூசர்களை வாட்ஸ்அப்புடன் ஒருங்கிணைத்து வருகிறது.

அந்த வகையில் தற்போது “மெசேஜ் யுவர்செல்ப்” என அழைக்கப்படும் புதிய வசதியை வரப்போகும் அப்டேட்டில் அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது வாட்ஸ்அப். இந்த அப்டேட் ஆனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு இயங்குதளங்களுக்கும் பொருந்தும் எனவும், இந்த அப்டேட்டை பயன்படுத்தி யூசர்கள் தங்களுக்கென சில குறிப்புகளை எடுத்துக் கொள்ளவும் தினசரி தகவல்களை இதில் பகிர்ந்து கொள்ளவும் உதவும் என்றும் வாட்ஸ்அப் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புதிய வசதியானது அனைவருக்கும் ஒரே நேரத்தில் கிடைக்காது எனவும் சிலருக்கு உடனடியாகவும் சிலருக்கு வரும் வாரங்களில் வேலை செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சில காலம்வரை பீட்டா வெர்ஷனில் அறிமுகப்படுத்தப்பட்டு சோதனை முறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More : வாட்ஸ்அப் டெஸ்க்டாப் யூஸர்களுக்கு ஹேப்பி நியூஸ் - விரைவில் வருகிறது புதிய அப்டேட்.!

எப்படி இந்த வசதியை பெறுவது?

உங்க வாட்ஸ்அப் செயலியானது லேட்டஸ்ட் வேர்ஷனுக்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொண்ட பின்பு கீழ்க்கண்ட படிநிலைகளை பின்பற்ற வேண்டும்.

  • வாட்ஸ்அப்பை ஓபன் செய்யவும்
  • நியூ சாட் என்பதை கிளிக் செய்ய வேண்டும்
  • உங்களுடைய காண்டாக்ட் லிஸ்ட் மொத்தமும் திரையில் தோன்றும்
  • அந்த லிஸ்டில் உங்களுடைய மொபைல் நம்பரும் மெசேஜ் செய்வதற்கு உண்டான லிஸ்டில் தோன்றும்.
  • உங்களுடைய மொபைல் எண்ணை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான செய்திகளை பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம்.

இதனை ஒரு குறிப்புகள் போலவும் அல்லது டைரியை போலவும் நம்மால் பயன்படுத்த முடியும்.

Read More : வாட்ஸ்அப்பில் இப்படி எல்லாம் கூட ட்ரிக்ஸ் இருக்கா..! இது தெரியாமா போச்சே

முதலில் வாட்ஸ்அப் இந்த வசதியை அறிமுகப்படுத்துவதற்கான அறிவிப்பை செய்தவுடன் பலரும் எதற்காக இந்த வசதி என்று கேலி செய்து கொண்டிருந்தனர். ஆனால் இதனால் பல பயன்கள் உண்டு. நாம் விரும்பிய அவ்வப்போது தேவைப்படும் வலைத்தளங்களை குறித்து வைத்துக் கொள்ளவும், முக்கிய சில செய்தி குறிப்புகளை சேகரித்துக் கொள்ளவும், நாம் மறந்துவிடக் கூடிய பல்வேறு விஷயங்களையும் நமக்கு நாமே செய்தியாக அனுப்பி பதிவு செய்து வைத்துக் கொள்ளவும் முடியும். இதனால் நோட்ஸ் எடுப்பதற்கு என்று தனியாக எந்த ஒரு செயலியையும் இன்ஸ்டால் செய்ய வேண்டிய தேவை இல்லை.

First published:

Tags: Technology, WhatsApp