ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இனி யாருக்கும் தொந்தரவு இல்லை... வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் புதிய அப்டேட்..!

இனி யாருக்கும் தொந்தரவு இல்லை... வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் புதிய அப்டேட்..!

வாட்சாப் மாதிரிப்படம்

வாட்சாப் மாதிரிப்படம்

பல்வேறு தளங்களில் செய்திகளை சேகரிக்கும் மாணவர்கள், முக்கிய ஆவணங்களை சேமித்து வைக்க விரும்பும் நபர்கள் போன்றோருக்கு இந்த வசதி மிகவும் உதவிகரமாக அமையும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கையில் ஸ்மார்ட்ஃபோன் ஒன்று இருக்கிறது என்றால், அதில் நிச்சயமாக வாட்ஸ்அப் இல்லாமல் இருக்க முடியாது. பொதுவாக மற்ற ஆப்கள் சமூக வலைதளங்களாகக் கருதப்படுகின்ற நிலையில், வாட்ஸ்அப் ஒரு அத்தியாவசியமான மெசேஜிங் ஆப்-ஆக கருதப்படுகிறது.

தொடக்கத்தில் சாதாரணமாக டெக்ஸ்ட் மெசேஜ், ஃபோட்டோ, வீடியோக்களை ஷேர் செய்ய மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த வாட்ஸ்அப்-பில் இன்று பல அப்டேட்டுகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆவணங்களை அனுப்பும் வசதி, யூபிஐ பேமெண்ட் வசதி என்று பல அப்டேட்டுகள் வந்துள்ளன.

அதே சமயம், நம்மில் பெரும்பாலானோர் அனுபப்பட்ட ஒரு விஷயம் அல்லது சிலர் கவனித்திடாத ஒரு விஷயம் என்னவென்றால், வாட்ஸ்அப்-பில் நமக்கு நாமே மெசேஜ் அனுப்ப இயலாது. மெசேஜ் என்றாலே அடுத்தவருக்கு தகவல் தெரிவிக்கும் தளம்தானே! நமக்கு, நாமே தகவல் அனுப்பிக் கொள்ள என்ன இருக்கிறது என்று சிலருக்கு தோன்றலாம்.

Read More : எலான் மஸ்கின் ஒரே நம்பிக்கை.. ட்விட்டரே நம்பி இருக்கும் இந்திய பொறியாளர்.. யார் இந்த ஸ்ரீராம்?

ஆனால், பொதுவாக உங்களுக்கு மிகவும் வேண்டப்பட்ட ஆவணங்கள், டெக்ஸ்ட் விவரங்கள் போன்றவற்றை, உடனுக்குடன் எடுத்துப் பயன்படுத்தும் வகையில் வாட்ஸ் அப்-பில் எப்படி ஸ்டோர் செய்து வைத்துக் கொள்வது என்று யோசித்தது உண்டா? அதை விடுங்கள் சில இணையதள லிங்க்-கள் நமக்கு பின்னாளில் பயன்படும் என்றால், அதை எங்கே நாம் சேமித்து வைப்பது?

இதுபோன்று, நமக்கு தேவைப்படும் தகவல்களை சேமிக்க, இதுவரையிலும் பல யூசர்கள் ஒரு குறுக்க வழியை தான் பின்பற்றி வந்தனர். அதாவது, நமக்கு வேண்டப்பட்ட உறவினர்கள் அல்லது நண்பர்களுக்கு அதை ஃபார்வேர்டு செய்து வைப்பார்கள். சில சமயம், இது எதற்கென்று புரியாத போது, எதிர் முனையில் இருந்து, “இதை ஏன் எங்களுக்கு அனுப்பினீர்கள்? என்ன விவரம்” என்ற கேள்வி வரும். நாமும், அதை எனக்காக அனுப்பி வைத்தேன், அதை விட்டு விடுங்கள் என்று விளக்கம் சொல்லிக் கொண்டிருப்போம்.

அது மட்டுமல்லாமல், எதிர் முனையில் இருப்பவர்களுக்கு தொந்தரவு தருவதாகக் கூட இது அமையும். இனி இதுபோன்ற கவலைகளை விட்டுத் தள்ளுங்கள். உங்களுக்கு ஏதேனும் ஆவணங்கள், தகவல்களை சேமித்து வைக்க விரும்பினால், இனி அதை உங்களுக்கே நீங்கள் அனுப்பிக் கொள்ளலாம்.

ஆண்டிராய்டு வெர்சன் 2.22.24.2 வரவிருக்கும் நிலையில், அதில் இந்த அப்டேட் இடம்பெறும் என்று WABetainfo இணையதளம் தெரிவிக்கிறது.தற்போது, வாட்ஸ்அப் ப்ரீமியம் யூசர்களுக்கு இந்த வசதி கிடைக்கப் பெறுகிறதாம். இதில் உள்ள குறைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்பட்ட பிறகு, பொதுவான யூசர்களின் பயன்பாட்டிற்கும் இந்த அப்டேட் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு தளங்களில் செய்திகளை சேகரிக்கும் மாணவர்கள், முக்கிய ஆவணங்களை சேமித்து வைக்க விரும்பும் நபர்கள் போன்றோருக்கு இந்த வசதி மிகவும் உதவிகரமாக அமையும்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Technology, WhatsApp