ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

செப்டம்பர் மாதத்தில் 26 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகளை முடக்கிய வாட்ஸ் அப்

செப்டம்பர் மாதத்தில் 26 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகளை முடக்கிய வாட்ஸ் அப்

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

WhatsApp Account Banned | மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பிரபல இன்ஸ்டன்ட் மெசேஜிங் சர்விஸ் ஆப்-ஆன வாட்ஸ்அப், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்க செப்டம்பர் 2022-க்கான வாட்ஸ்அப்பின் மாதாந்திர அறிக்கையை வெளியிட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்த கடுமையான IT விதிகளின் படி, 50 லட்சத்திற்கும் அதிகமான யூஸர்களை கொண்ட பெரிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்கள் மாதாந்திர அறிக்கைகளை வெளியிட வேண்டும். மேலும் பெறப்பட்ட புகார்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களை பற்றியும் அந்த அறிக்கையில் குறிப்பிட வேண்டும். இதன்படி  அறிக்கை வாட்ஸ்அப் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், “ ஐடி விதிகள் 2021 இன் படி, செப்டம்பர் 2022க்கான எங்கள் அறிக்கையை நாங்கள் வெளியிட்டுள்ளோம். செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் 26 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் அக்கவுண்ட்ஸ்களை தடை செய்துள்ளோம்” என கூறப்பட்டுள்ளது. ஸ்பேம், கொள்கை மீறல் மற்றும் பிற காரணங்களுக்காக நாட்டில் சுமார் 26.85 லட்சம் அக்கவுண்ட்ஸ்களை வாட்ஸ்அப் தடை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் சுமார் 8.72 லட்சம் அக்கவுண்ட்ஸ்கள் யூஸர்களால் Flagged செய்வதற்கு (எந்த புகாரும் வருவதற்கு முன்பே) முன்கூட்டியே தடை செய்யப்பட்டதாக நிறுவனம் தனது மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் தடை செய்யப்பட்ட அக்கவுண்ட்ஸ்களை விட செப்டம்பர் மாதத்தில் வாட்ஸ்அப் தடை செய்த அக்கவுண்ட்ஸ்களின் எண்ணிக்கை 15% அதிகமாகும். தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 இன் விதி 4(1)(d) இன் கீழ் 26.85 லட்சம் வாட்ஸ்அப் அக்கவுண்ட்ஸ்கள் தடை செய்யப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே செப்டம்பர் மாதத்தில் தடை செய்யப்பட்ட இந்த அக்கவுண்ட்ஸ்களின் எண்ணிக்கை, கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 3 லட்சம் அதிகம் ஆகும். வாட்ஸ்அப்பின் புகார் வழிமுறைகள் (grievance mechanism) மூலம் இந்திய யூஸர்களிடமிருந்து புகார் அறிக்கைகளை பெற்ற பிறகு பெரும்பாலான அக்கவுண்ட்ஸ்களை நாங்கள் தடை செய்துள்ளோம் என்று அறிக்கையில் வாட்ஸ்அப் குறிப்பிட்டுள்ளது.

தீவிர புகார்களையடுத்து சுமார் 23 அக்கவுண்ட்ஸ்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மொத்தத்தில் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30 வரைவிலான காலகட்டத்தில் 26,85,000 இந்திய அக்கவுண்ட்ஸ்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ்அப் தனது சமீபத்திய அறிக்கையில், யூஸர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு நிறுவனம் முன்னுரிமை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளது. அதன் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட மெசேஜிங் சிஸ்டம் துஷ்பிரயோகத்தைத் தடுக்கவும் எதிர்த்துப் போராட உருவாக்கப்பட்டது.

Also Read : உஷார்..! கூகுளில் இந்த விஷயங்களைத் தேடினால் கண்டிப்பாக சிறைதான்!

இதுபோன்ற அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் சாஃப்ட்வேர் என்ஜினியர்ஸ், டேட்டா சயின்டிஸ்ட்ஸ், ரிசர்ச்சர்ஸ், சட்ட அமலாக்கம், ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு வல்லுநர்கள் அடங்கிய பிரத்யேக குழுவும் யூஸர்களின் பாதுகாப்பை தொடர்ந்து மானிட்டர் செய்து வருவதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

Also Read : உஷார்.! உங்க அக்கவுண்ட் பணம் இப்படியும் திருடப்படும்.. பாதுகாப்பா இருக்க சில முக்கிய டிப்ஸ்!

ஸ்பேம் மெசேஜ்களை அனுப்புவது குறித்த புகார்கள் அல்லது நிறுவனம் விதித்துள்ள நிபந்தனைகளை மீறுவதாக கண்டறியப்பட்டால், அந்த யூஸர்களின் அக்கவுண்ட்ஸ்களுக்கு வாட்ஸ்அப் தடை விதிக்கிறது. எனவே தெரியாத நபர்களுக்கு ஸ்பேம் மெசேஜ் அல்லது நார்மல் மெசேஜ் அனுப்புவதை தவிர்க்க எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.

Published by:Selvi M
First published:

Tags: Tamil News, Technology, WhatsApp