Home /News /technology /

வெப் யூஸர்களுக்காக Code Verify அம்சத்தை அறிமுகப்படுத்திய WhatsApp! எவ்வாறு செயல்படுகிறது

வெப் யூஸர்களுக்காக Code Verify அம்சத்தை அறிமுகப்படுத்திய WhatsApp! எவ்வாறு செயல்படுகிறது

WhatsApp Web

WhatsApp Web

WhatsApp Web Update | ஒருவேளை யூஸர்கள் பயன்படுத்தும் WhatsApp வெர்ஷனை எக்ஸ்டென்ஷனால் சரிபார்க்க முடியவில்லை என்றால் அது நெட்வொர்க் டைம்ஸ் அவுட், பாசிபிள் ரிஸ்க் டிடெக்டட் மற்றும் வேலிடேஷன் ஃபெயிலியர் உள்ளிட்ட மூன்று மெசேஜ்களை காட்டும்.

மேலும் படிக்கவும் ...
மெட்டாவுக்கு சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்ஃபார்மான வாட்ஸ்அப், தனது வாட்ஸ்அப் வெப் யூஸர்களுக்காக புதிய பாதுகாப்பு அம்சம் ஒன்றை அறிவித்துள்ளது. வெப் யூஸர்களுக்காக கோட் வெரிஃபை (Code Verify)எனப்படும் பிரவுசர் எக்ஸ்டென்ஷனை (extension) வாட்ஸ்அப் தற்போது புதிதாக அறிமுகம் செய்து உள்ளது. கோட் வெரிஃபை என்பது யூஸர்களின் WhatsApp Web-ல் ரன்னாகும் கோடின் நம்பகத்தன்மையை சரிபார்க்க ரியல் டைம், தேர்ட் பார்ட்டிவெரிபிகேஷனை வழங்குகிறது.

இதன் மூலம் யூஸர்கள் பயன்படுத்தும் WhatsApp Web-ன் வெர்ஷன் அங்கீகரிக்கப்பட்டதா என்பதை புதிய Code Verify அம்சம் தெரிவிக்கும். இந்த பிரவுசர் எக்ஸ்டென்ஷன் அம்சம் யூஸர்களுக்கு வழங்கப்படும் வாட்ஸ்அப் வெப் குறியீட்டின் நம்பகத்தன்மையை தானாகவே சரிபார்த்து, அவர்களின் சேட்கள் பாதுகாப்பானவை மற்றும் கண்காணிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. Cloudfare உடன் இணைந்து WhatsApp இந்த எக்ஸ்டென்ஷனை உருவாக்கி இருக்கிறது.

இது ஒரு ஓபன்-சோர்ஸ் ப்ராஜக்ட் ஆகும், இது மற்ற நிறுவனங்களை தங்கள் ஆப்ஸ்களில் ஒருங்கிணைக்க அனுமதிக்கிறது. Chrome, Firefox மற்றும் Microsoft Edge பிரவுசர்களுக்கு கிடைக்கும் இந்த எக்ஸ்டென்ஷன், பிரவுசர்களுக்கு வழங்கப்படும் WhatsApp வெப் கோடின் நம்பகத்தன்மையை யூஸர்கள் சரிபார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்டென்ஷனை ரன் செய்வது பிரைவஸி வேண்டும் என்ற உணர்வுள்ள யூஸர்களுக்கு கூடுதல் பாதுகாப்பையும், ஆப்-பின் வெப் வெர்ஷன் மாற்றப்படவில்லை என்பதால் மன அமைதியையும் தரும் என்று WhatsApp கூறி இருக்கிறது.



ஏற்கனவே சொன்னது போல இந்த கோட் வெரிஃபை வாட்ஸ்அப் எக்ஸ்டென்ஷன் Chrome, Firefox மற்றும் Microsoft Edge ஆகியவற்றில் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது. யூஸர்கள் வாட்ஸ்அப் வெப்-ஐ ஓபன் செய்யும் போது குறியீட்டின் நம்பகத்தன்மையை சரிபார்க்க முழு வெப் பேஜிலும் உள்ள ரிசோர்ஸஸ்களை (resources) இது சரிபார்க்கிறது. குறியீடு நம்பகமானதா என சரிபார்க்கப்பட்டதும், இந்த எக்ஸ்டென்ஷன் அம்சம் அதை யூஸர்களுக்கு தெரிவிக்கிறது. யூஸர்கள் தங்கள் வெப் பிரவுசரில் எக்ஸ்டென்ஷனை இன்ஸ்டால் செய்திருந்தால், அவர்கள் WhatsApp Web-ஐ பயன்படுத்தும் போது அது தானாகவே இயங்கும். யூஸர்கள் பயன்படுத்தும் WhatsApp Web-ன் குறியீடு முழுமையாக சரிபார்க்கப்பட்டதை பிரதிபலிக்கும் வகையில் இது ஒரு வட்டத்தில் பச்சை நிற செக் மார்க்கை (green check-mark) காட்டும்.

Also Read : டெலிகிராமின் முக்கிய அம்சத்தை காப்பி அடிக்கப்போகும் வாட்ஸ் அப்

ஒருவேளை யூஸர்கள் பயன்படுத்தும் WhatsApp வெர்ஷனை எக்ஸ்டென்ஷனால் சரிபார்க்க முடியவில்லை என்றால் அது நெட்வொர்க் டைம்ஸ் அவுட், பாசிபிள் ரிஸ்க் டிடெக்டட் மற்றும் வேலிடேஷன் ஃபெயிலியர் உள்ளிட்ட மூன்று மெசேஜ்களை காட்டும். யூஸர்கள் தங்கள் டூல்பார் பச்சை, ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும் போது Code Verify extension icon-ஐ கிளிக் செய்வதன் மூலம் இவற்றைப் பற்றி மேலும் அறியலாம். வாட்ஸ்அப்பின் புதிய எக்ஸ்டென்ஷன் அறிமுகம் செய்யப்பட முதன்மைக் காரணம், யூஸர்கள் வாட்ஸ்அப் வெப்பின் தீங்கிழைக்கும் பதிப்பை பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கமே.
Published by:Selvi M
First published:

Tags: Technology, WhatsApp, Whatsapp Update

அடுத்த செய்தி