சாட்டிங், வீடியோ கால், வாய்ஸ் கால், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை பகிர்ந்து கொள்வது போன்ற பல்வேறு தகவல் பரிமாற்றத்திற்கான முக்கிய செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்திவரும் நிலையில், அடுத்தடுத்த அப்டேட்கள் மூலம் தன்னுடைய சேவையை வாட்ஸ்அப் மேம்படுத்திவருகிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, வாட்ஸ்அப் காலில் 30 பேர் வரை இணைத்து பேசக்கூடிய வசதி, குழு அட்மின்களுக்கு குழுவில் பகிரப்படும் எந்த ஒரு செய்தியையும் நீக்கும் சிறப்பு அதிகாரம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டன. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போல் மெசேஜ்களுக்கு இமோஜிக்கள் மூலமாக எதிர்வினை ஆற்றும் வசதியும் வழங்கப்பட்டது.
இப்படி நாளோரு வண்ணமும் பொழுதோறு விதமுமாக அப்டேட் ஆகி வரும் வாட்ஸ்அப் நிறுவனம், தனது யூஸர்களுக்கு புது அப்டேட்டை வெளியிட்டுள்ளது.வாட்ஸ்அப் குரூப் வீடியோ கால் அழைப்புகளில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப் குரூப் வீடியோ கால் சேவையின் ஒட்டுமொத்த அனுபவமும் இனிமையாக இருப்பதை உறுதிசெய்ய அழைப்பின் ஹோஸ்டுக்கு அதிக அதிகாரத்தை வழங்கியுள்ளது. வாட்ஸ்அப் குரூப் வீடியோ காலில் இருக்கும் போதே அழைப்பில் இருக்கும் ஒரு நபரை முடக்கவோ அல்லது குரூப் வீடியோ கால் இணைப்பில் இருந்து கொண்டே நடந்து கொண்டிருக்கும் போது தனித்தனியாக செய்தி அனுப்பும் வசதியை வழங்கியுள்ளது.
இந்த அப்டேட்டை கடந்த வியாழன் அன்று வாட்ஸ்அப்பின் தலைவரான வில் கேத்கார்ட் பகிர்ந்துள்ளார். வாட்ஸ்அப் குரூப் வீடியோ காலில் இணைந்துள்ளவர்கள் சில சமயங்களில் தங்கள் ஆடியோவை மியூட் செய்ய மறந்துவிடுவது உண்டு. இது மீட்டிங்கில் உள்ள அனைவருக்கும் பெரிய தொல்லையாக அமைய உள்ளது. இனி வாட்ஸ்அப் குரூப் வீடியோ காலில் உறுப்பினர்கள் இணைந்திருக்கும் போது யாராவது மியூட் செய்ய மறுந்துவிட்டால், அதனை செய்யக்கூடிய அதிகாரம் அட்மினுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Also Read : Gmail யூஸர்களே உஷார்... மெயில் மூலம் நடக்கும் ஆன்லைன் மோசடிகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிகள்!
கூடுதலாக, வாட்ஸ்அப் இப்போது குழு வீடியோ அழைப்பில் புதிய நபர் இணைந்தால், அழைப்பில் அவர்கள் இருப்பதைப் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் வசதியும் அறிமுகமாகியுள்ளது. இந்த அம்சங்களுடன், அலுவலகம், தனிப்பட்ட மற்றும் பிற மெய்நிகர் சந்திப்புகளுக்கான ஜூம், கூகுள் மீட் மற்றும் மைக்ரோசாஃப்ட் டீம்களுக்கு சிறந்த மாற்றாக வாட்ஸ்அப் மாறியுள்ளது.
Also Read : ஐரோப்பிய ஒன்றியத்தின் நுகர்வோர் நல சட்டங்களை ஏற்க வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு கால அவகாசம்
Android மற்றும் iOS பதிப்புகளுக்கு வாட்ஸ் அப் இந்த சேவையை படிப்படியாக கொண்டு வர உள்ளது. எனவே இதுவரை உங்கள் ஸ்மார்ட் போனில் இந்த சேவை அப்டேட் ஆகவில்லை எனில் சில நாட்கள் ஆகலாம். கடந்த சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் குழுவில் உள்ள அட்மின்கள் இனி தங்களது குழுவில் 512 உறுப்பினர்கள் வரை சேர்த்துக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்னதாக 256 உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கையை வாட்ஸ்அப் இரட்டிப்பாக்கியது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.