வாட்ஸ்அப் நிறுவனம் தனது மெசேஜிங் App-ஐ பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு யூசர்களுக்காக குளோபல் ஆடியோ பிளேயர் (global audio player) அம்சத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. WhatsApp நீண்ட காலமாக global audio player என்ற இந்த தனித்துவ அம்சத்தை உருவாக்கி வருகிறது. இந்த அம்சத்தின் மூலம் யூஸர்கள் App-ல் எங்கு வேண்டுமானாலும் இருந்து கொண்டே வாய்ஸ் மெசேஜ்களை கேட்கலாம்.
வாட்ஸ்அப் ஆப்பில் நீங்கள் எந்த ஆப்ஷனை பயன்படுத்தி கொண்டிருந்தாலும் அந்த ஆப்ஷனில் இருந்தபடியே வாய்ஸ் மெசேஜ்களை கேட்க யூஸர்களை WhatsApp global audio player அம்சம் அனுமதிக்கிறது. அதாவது இந்த global audio player அம்சத்தின் மூலம் நீங்கள் அந்த வாய்ஸ் மெசேஜ் தவிர வேறு எதை இயக்கினாலும் அல்லது நீங்கள் பிற சேட் விண்டோஸ்களை (chat windows) ஓபன் செய்து இருந்தாலும் கூட WhatsApp-ல் எங்கும் வாய்ஸ் மெசேஜ்களை யூஸர்கள் கேட்கலாம். நிறுவனம் விரைவில் இந்த அம்சத்தை தான் ஆண்ட்ராய்டு யூஸர்களுக்கு கொண்டு வரவுள்ளது.
முதன்மையாக இந்த புதிய அம்சம் iOS பிளாட்ஃபார்மில் குறிப்பிட்ட பீட்டா டெஸ்ட்டர்களுக்கு வெளியிடப்படுகிறது. மெட்டாவிற்கு சொந்தமான உலகின் பிரபல இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்-ஆக இருந்து வரும் வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் அம்சத்தை மிகவும் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக இருக்க தொடர்ந்து பல அம்சங்களை உருவாக்கி அப்டேட்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இதனிடையே வாட்ஸ்அப்பின் சமீபத்திய இந்த புதிய அம்சம் WABetaInfo என்ற ட்ராக்கரால் கவனிக்கப்பட்டு ஊடக வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.
The global audio player can be used to listen to voice notes wherever you are in the application. It has been recently released to certain iOS beta testers, and it's coming to WhatsApp beta for Android soon. pic.twitter.com/Cvf45CyQ8I
— WABetaInfo (@WABetaInfo) January 29, 2022
இது தொடர்பாக WABetaInfo சோஷியல் மீடியாவில் தகவல் வெளியிட்டு உள்ளது. தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பேஜில் WABetaInfo செய்துள்ள ட்விட்டில், " நீங்கள் WhatsApp அப்ளிகேஷனில் எங்கிருந்தாலும் வாய்ஸ் மெசேஜ்களை கேட்க குளோபல் ஆடியோ பிளேயரை (global audio player) பயன்படுத்தலாம். இது சமீபத்தில் சில iOS பீட்டா டெஸ்ட்டர்களுக்கு வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த லேட்டஸ்ட் அம்சமான குளோபல் ஆடியோ பிளேயர் விரைவில் Android-க்கான WhatsApp பீட்டாவிற்கு அறிமுகப்படுத்த WhatsApp நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று கூறப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள் : ஸ்மார்ட்போன் கீபோர்டுகளை ஈஸியாக இயக்குவது, மாற்றுவது எப்படி?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: WhatsApp, WhatsApp Audio, Whatsapp Update