Forward மெசேஜ்களுக்கு ப்ரேக் போட்ட வாட்ஸ்அப்! - புதிய அப்டேட்

வாட்ஸ்அப் பயனாளர்கள் இனி preview உடன் மெசேஞ் அல்லது லிங்க் தகவல்களை பகிர முடியும்.

Web Desk | news18
Updated: December 2, 2018, 3:48 PM IST
Forward மெசேஜ்களுக்கு ப்ரேக் போட்ட வாட்ஸ்அப்! - புதிய அப்டேட்
கோப்புப் படம்
Web Desk | news18
Updated: December 2, 2018, 3:48 PM IST
வாட்ஸ்அப் மூலம் இனி பகிரப்படும் மெசேஜ்களை preview பார்ப்பதற்கான வசதி அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

மெசேஜ் அல்லது மீடியா பைல்களை வாட்ஸ்அப் மூலம் ஷேர் செய்யும் போது அதற்கான preview பார்க்கும் வகையில் வாட்ஸ்அப் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. முதலில் இந்த வசதி ஆண்ட்ராய்டு மொபைல்களில் beta வெர்ஷன்-ல் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கூடுதலாக GIF ஸ்டிக்கர்ஸ் அனுப்புவதற்கான கூடுதல் வசதியையும் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்காக அப்டேட் செய்யத் தயாராகி வருகிறது வாட்ஸ்அப். மற்ற apps-ல் இருந்து அனுப்பப்படும் தகவல்களைப் பகிரும் போது அதற்கான preview -ஐ பயனாளர்கள் பார்த்துக்கொள்ளலாம். android பயனாளர்கள், மெசேஜ் அல்லது லிங்க் எது அனுப்பினாலும் preview பார்க்கலாம்.

இதன் மூலம் பயனாளர் ஒரு செய்தியை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டோரிடம் பகிர்ந்தாலும் Preview பார்த்துக்கொள்ளலாம். இந்த feature, வாட்ஸ்அப் மூலம் பரவும் பொய் செய்திகளைத் தடுக்க உதவி செய்யும்.

இந்தப் புதிய அப்டேட் உடன் கூடிய வாட்ஸ்அப், Google play beta programme மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அடுத்து GIF stickers பயன்பாட்டை எளிதாக்கும் முயற்சியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது.

மேலும் பார்க்க: கஜா புயல்: மத்திய அரசு ரூ.353.70 கோடி இடைக்கால நிவாரணம்
First published: December 2, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...