Googleல் யூசர்களின் பப்ளிக் குரூப்களில் காட்டும் பிழையை சரிசெய்யும் WhatsApp!
"மார்ச் 2020 முதல், வாட்ஸ்அப் அனைத்து டீப் லிங்க் பேஜ்களிலும் "நொன்டெக்ஸ்" குறிச்சொல்லை ("noindex" tag) உள்ளடக்கியுள்ளது. இது கூகுளின் கூற்றுப்படி, குறிப்பிட்டவற்றை அட்டவணையிடுவதிலிருந்து விலக்கும் செயல்முறையாகும்.

கோப்புப் படம்
- News18
- Last Updated: January 12, 2021, 7:32 PM IST
Google தனது டெஸ்க்டாப் Chrome பிரௌசர்களில் சமீபத்திய பாதுகாப்பு இணைப்பு அப்டேட்டை சில மாதங்களுக்கு முன்பு வெளியிடத் தொடங்கியது. புதிய பாதுகாப்பு இணைப்பு அம்சங்கள் பிரௌசரில் மொத்தம் 10 பிழைகளை சரிசெய்துள்ளது.
மேலும் கூகுள் நிறுவனம் ஜீரோ-டே வல்னேரபிலிட்டி (zero-day vulnerability) பாதிப்புகளையும் சரி செய்துள்ளது என்று சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தது. இது கூகுளின் TAG குழு கவனித்த இரண்டாவது அச்சுறுத்தல் பிழையாகும். வழக்கம்போல், பிழையின் விவரங்களைக் கூகுள் வெளியிடாமல் காத்திருக்கும் என்பது பலரும் அறிந்த ஒன்றே.
ஆனால் இந்த முறையோ செய்தி வேறுவிதத்தில் வெளிவந்துள்ளது. இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ராஜ்ஷேகர் ராஜாஹாரியா (Internet Security Researcher Rajshekhar Rajaharia) ஒரு பெரிய பிழையை இப்போது அறிவித்துள்ளார். இது கூகுள் தேடல்கள் (Google searches) மூலம் உங்கள் வாட்ஸ்அப் (WhatsApp) பப்ளிக் குரூப்களில் யாரை வேண்டுமானாலும் அணுக அனுமதிக்கிறது. இந்த பிரச்சனை இப்போதொன்றும் புதிதல்ல 2019ம் ஆண்டிலும் இதேபோன்றதொரு சிக்கல் எழுந்தது. ஜனவரி 11ம் தேதி அதிகாலை 1 மணியளவில், கூகுளில் (Google) ஏற்பட்ட சிக்கலை சரிசெய்தது மட்டுமல்லாமல் கூகுளில் (Google) காண்பிக்கப்படும் அனைத்து குரூப் லிங்க்ஸ்களையும் (group links) வாட்ஸ்அப் (WhatsApp) அகற்றியது. WhatsApp robot.txt ஐப் பயன்படுத்தவில்லை என்றும், எனவே சர்ச் கிராலர்கள் (search crawlers) Googleல் உள்ளடக்கத்தைக் குறியிட்டதாகவும் (indexed the content on Google) ராஜஹாரியா கூறினார்.
Also read... Signal app பயன்படுத்துமாறு Paytm நிறுவனர் பரிந்துரை - பெருகும் ஆதரவால் ஆப் பதிவிறக்கம் அதிகரிப்பு!
இது பற்றி WhatsAppன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "மார்ச் 2020 முதல், வாட்ஸ்அப் அனைத்து டீப் லிங்க் பேஜ்களிலும் "நொன்டெக்ஸ்" குறிச்சொல்லை ("noindex" tag) உள்ளடக்கியுள்ளது. இது கூகுளின் கூற்றுப்படி, குறிப்பிட்டவற்றை அட்டவணையிடுவதிலிருந்து விலக்கும் செயல்முறையாகும். இந்த சாட்களை குறியிட வேண்டாம் (not index these chats) என்று கூகுளுக்கு எங்கள் கருத்தை நாங்கள் வழங்கியுள்ளோம். நினைவூட்டலாக, யாராவது ஒரு குழுவில் சேரும்போதெல்லாம், அந்தக் குழுவில் உள்ள அனைவருக்கும் ஒரு அறிவிப்பு வரும், மேலும் அட்மின் எந்த நேரத்திலும் குரூப் இன்வைட் லிங்க்கை (group invite link) திரும்பப் பெறலாம் அல்லது மாற்றலாம் ". தேடக்கூடிய, பப்ளிக் சேனல்களில் பகிரப்பட்ட அனைத்து உள்ளடக்கங்களை போலவே, இன்டர்நெட்டில் பொதுவில் போஸ்ட் செய்யப்படும் இன்வைட் லிங்குகளை (invite link) மற்ற வாட்ஸ்அப் யூசர்கள் காணலாம். யூசர்கள் தங்களுக்குத் தெரிந்த மற்றும் நம்பும் நபர்களுடன் தனிப்பட்ட முறையில் பகிர விரும்பும் லிங்க்குகள் பப்ளிக் அணுகக்கூடிய வெப்சைட்டுகளில் (publicly accessible website) வெளியிடப்படக்கூடாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
மேலும் கூகுள் நிறுவனம் ஜீரோ-டே வல்னேரபிலிட்டி (zero-day vulnerability) பாதிப்புகளையும் சரி செய்துள்ளது என்று சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தது. இது கூகுளின் TAG குழு கவனித்த இரண்டாவது அச்சுறுத்தல் பிழையாகும். வழக்கம்போல், பிழையின் விவரங்களைக் கூகுள் வெளியிடாமல் காத்திருக்கும் என்பது பலரும் அறிந்த ஒன்றே.
ஆனால் இந்த முறையோ செய்தி வேறுவிதத்தில் வெளிவந்துள்ளது. இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ராஜ்ஷேகர் ராஜாஹாரியா (Internet Security Researcher Rajshekhar Rajaharia) ஒரு பெரிய பிழையை இப்போது அறிவித்துள்ளார். இது கூகுள் தேடல்கள் (Google searches) மூலம் உங்கள் வாட்ஸ்அப் (WhatsApp) பப்ளிக் குரூப்களில் யாரை வேண்டுமானாலும் அணுக அனுமதிக்கிறது.