• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • அனுப்புற படத்தை பார்த்தா மட்டும் போதும்... வாட்ஸ் அப் புது அப்டேட்

அனுப்புற படத்தை பார்த்தா மட்டும் போதும்... வாட்ஸ் அப் புது அப்டேட்

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

WhatsApp Update: ‘வியூ ஒன்ஸ்’ என்ற அம்சத்தைப் பயன்படுத்தி நீங்கள் புகைப்படம் அல்லது வீடியோ அனுப்பினால், அதை பெறுபவரின் கேலரியில் அல்லது ஃபோனில் அந்த புகைப்படமோ அல்லது வீடியோவோ சேமிக்கப்படாது.

  • Share this:
கடந்த சில மாதங்களாக வாட்ஸ்அப் பல்வேறு புதிய அப்டேட்களை வழங்கி வருகின்றது. அதில், மிகவும் முக்கியமான அம்சம், மறையும் புகைப்படங்கள். ‘வியூ ஒன்ஸ்’ என்று கூறப்படும் இந்த அம்சம், இன்ஸ்டாகிராமில் இருக்கும் அம்சத்தைப் போன்றது. இந்த அம்சம் தற்போது வாட்ஸ்ஆப்பின் அனைத்து யூசர்களுக்கும் கிடைக்கிறது. ‘வியூ ஒன்ஸ்’ என்ற அம்சத்தைப் பயன்படுத்தி நீங்கள் வாட்ஸ்அப்பில் புகைப்படம் அனுப்பும்போது, அதை, ரிசீவர் பார்த்துவிட்டு, ‘சாட்’ விட்டு வெளியேறினால், அந்த புகைப்படம் மறைந்துவிடும்.

ஆனால், நீங்கள் ‘வியூ ஒன்ஸ்’ என்ற தேர்வை ஒவ்வொரு முறை புகைப்படம் அல்லது வீடியோ அனுப்பும் போதும் தேர்வு செய்யவேண்டும். மேலும் தகவல் இங்கே:

வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய அம்சத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை ‘வியூ ஒன்ஸ்’ என்ற அம்சத்தைப் பயன்படுத்தி நீங்கள் புகைப்படம் அல்லது வீடியோ அனுப்பினால், அதை பெறுபவரின் கேலரியில் அல்லது ஃபோனில் அந்த புகைப்படமோ அல்லது வீடியோவோ சேமிக்கப்படாது. ஒரு முறை அதைப் பார்த்து விட்டால், வாட்ஸ்அப் அதனை மறுமுறை காட்டாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அது மட்டுமின்றி, இந்த அம்சம், நீங்கள் ஃபோட்டோ அல்லது வீடியோக்களை மற்றவர்களுடன் பகிரவோ, சேமிக்கவோ, ஃபார்வார்ட் செய்யவோ அனுமதிக்காது. நீங்கள் புகைப்படத்தை அனுப்பினால், யாருக்கு அனுப்புகிரீர்களோ அவர்கள் அதனை பார்த்துவிட்டார்களா இல்லையா என்பது மட்டுமே உங்களால் தெரிந்து கொள்ள முடியும்.

‘வியூ ஒன்ஸ்’ பயன்படுத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நீங்கள் அனுப்பினால். பெறுபவர் அதனை 14 நாட்களுக்குள் பார்க்க வேண்டும். பிறகு, அந்த செய்தி தானாகவே ‘சாட்’ இல் இருந்து மறைந்து விடும். ஆனால், வாட்ஸ்அப் பேக்கப் எடுக்கும் போது, இதைப் போல படிக்காத செய்திகள் இருந்தால், மொபைல் பேக்கப்பில் ‘வியூ ஒன்ஸ் மீடியா’ என்ற ஃபோல்டரில் சேமிக்கப்பட்டிருக்கும். மறையும் புகைப்படங்களை ஏற்கனவே பார்த்திருந்தால், பேக்கப்பில் சேமிக்கப்படாது, உங்களால் அதனை ரீஸ்டோர் செய்ய முடியாது.

‘நம்பகமான’ யூசர்களுக்கு ஏன் ‘வியூ ஒன்ஸ்’ பயன்படுத்தி புகைப்படத்தை அனுப்ப வேண்டும்?

எந்த மீடியாவாக இருந்தாலும், வியூ ஒன்ஸ் பயன்படுத்தி அனுப்பியிருந்தாலும், வாட்ஸ்அப் அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுக்கவோ அல்லது ஸ்க்ரீன் ரிக்கார்டிங் செய்யவோ அனுமதிக்கிறது. கூடுதலாக, ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டால், அது அனுப்பியவருக்கு தெரியப்படுத்தாது. அது மட்டுமின்றி, புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் மறையும் முன்பு, அதனை மற்றொரு கேமராவில் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கலாம் என்றும் எச்சரிக்கிறது. ‘நீங்கள் அனுப்பிய பிறகு, என்கிரிப்டட் மீடியா வாட்சாப் சர்வர்களில் சில வாரங்கள் வரை சேமிக்கப்பட்டிருக்கும்’ என்று நிறுவனம் தெரிவித்தது.

Also read... இனி ஸ்மார்ட் ஃபோன் கேமரா மூலம் டிவி-யிலிருந்து வீடியோ கால் - ஜியோ ஃபைபர் யூஸர்கள் மகிழ்ச்சி!

‘வியூ ஒன்ஸ்’ மீடியா எப்படி அனுப்புவது

*வாட்ஸ்அப் திறந்து, அட்டச்மெண்ட் ஐகானை தட்டவும்

*கேலரியில் நீங்கள் அனுப்ப விரும்பும் புகைப்படம் அல்லது வீடியோவை தேர்வு செய்யவும்

*தேர்வு செய்த பின்னே, ‘கேப்ஷன் சேர்க்கவும்’ என்ற பகுதியில் தெரியும் கடிகார ஐகான் கிளிக் செய்து, ‘வியூ ஒன்ஸ்’ அம்சத்தை செயல்படுத்தவும். ‘போட்டோ செட் டு வியூ ஒன்ஸ்’ என்ற செய்தி

*உங்கள் திரையில் தோன்றும். நீங்கள் மறையும் மீடியாவை உங்கள் குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: