ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

வாட்ஸ்அப்பிற்கு மூடு விழா நடத்திய இந்தியர்கள் - தீபாவளி தான் காரணமாம்!

வாட்ஸ்அப்பிற்கு மூடு விழா நடத்திய இந்தியர்கள் - தீபாவளி தான் காரணமாம்!

இந்தியாவில் முடங்கிய வாட்ஸ்அப்

இந்தியாவில் முடங்கிய வாட்ஸ்அப்

WhatsApp Outage : தீபாவளிக்கு அடுத்த நாள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக முடங்கிப்போன வாட்ஸ்ஆப் செயலியால் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதில் மக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் நேற்றுமுன்தினம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேல் வாட்ஸ்அப் செயலின் சேவையானது முழுவதுமாக முடங்கிப் போனதால், மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள புதிய செயலிகளை இன்ஸ்டால் செய்து மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தன்னுடைய யூசர்களுக்கு செய்திகள், ஆடியோ வீடியோ மற்றும் பல்வேறு சேவைகளை இலவசமாக அளித்து வரும் வாட்ஸ் அப் செயலியானது உலகம் முழுவதும் பல கோடிக் கணக்கான மக்களின் ஃபேவரைட் செயலியாக இருந்து வருகிறது. அதிலும் இந்தியாவில் மட்டுமே 390 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். மெட்டா நிறுவனத்தின் மிக முக்கிய மார்க்கெட்டாக இந்தியா இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேல் வாட்ஸ்அப் சேவையானது முடங்கிப் போனது. இதனால் வழக்கமாக வாட்ஸ்அப் மூலம் தகவல் பரிமாறிக் கொள்ளும் மக்கள் அவதிக்குள்ளாயினர்.

இதனால் பல்வேறு மக்களும் அவசரக் காலத்தில் தொடர்பு கொள்வதற்கு வேறு பல செயலிகளை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் திங்கட்கிழமை இந்தியாவில் தீபாவளி பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையின் போது பல்வேறு மக்களும் தங்களது நண்பர்கள் உறவினர்கள் மற்றும் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்குத் தீபாவளி வாழ்த்துக்களையும் படம் மற்றும் வீடியோக்கள் அடங்கிய வாழ்த்துச் செய்திகளையும் பரிமாறிக் கொண்டனர்.

Also Read: 'புதுசு கண்ணா புதுசு'.. சூப்பரான அப்டேட்களை அள்ளி வீசியுள்ள வாட்ஸ்அப்!

மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி அனைவரும் தங்கள் எவ்வாறு தீபாவளி பண்டிகை கொண்டாடினோம் என்பதை ஸ்டேட்டஸ் வைத்து மகிழ்ந்தனர். திடீரென்று இவ்வளவு பெரிய தரவுகளைக் கையாள முடியாமல் வாட்ஸ் அப் செயலியினை கையாளும் சர்வர்கள் முடங்கிப் போனதாக தெரிகிறது. அக்டோபர் 25ஆம் தேதி மதியம் 12 மணிக்கு முடங்கிய வாட்ஸ் அப் செயலி மீண்டும் சரியாவதற்கு, 2 மணிக்கு மேல் ஆனது. கிட்டத்தட்ட மதியம் 2:15 மணிக்குத் தான் வாட்ஸ்அப் செயலி சரி செய்யப்பட்டு வழக்கம் போலச் செயல்படத் தொடங்கியது.

வாட்ஸ்அப் செயலிழந்து போனதைத் தெரிந்து கொண்ட உடனே நெட்டிசன்கள் தன்னுடைய வேலையைத் தொடங்கி விட்டனர். டிவிட்டரில் வாட்ஸ் அப் முடங்கியதை வைத்து பல்வேறு மீம்களை உருவாக்கி வாட்ஸ்அப்பை கலாய்த்துக் கொண்டிருந்தனர்.

இதற்கு முன் பல்வேறு நேரங்களில் வாட்ஸ்அப் இதுபோல முடங்கியுள்ளது. ஆனாலும் பத்து நிமிடம் அல்லது அதிகபட்சம் அரை மணி நேரத்திற்குள் மீண்டும் வழக்கம் போலச் செயல்படும்படி சரி செய்து விடுவார்கள். ஆனால் இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக வாட்ஸ்அப் செயலிழந்து போனது இதுவே முதல் முறை.

Also Read : அக்டோபர் மாதம் என்றாலே வாட்ஸ்அப்பிற்கு பிரச்சனை தான்.!

ஏற்கனவே மெட்டா நிறுவனத்திற்கு எதிராக, பல்வேறு நிறுவனங்களின் சிஇஓ-க்கள் போர்க்கொடி தூக்கி வரும் நிலையில், தற்போது வாட்ஸ்அப்பில் ஏற்பட்ட இந்த கோளாறானது அதிக விமர்சனங்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே டெலிகிராமின் சிஇஓ வாட்ஸ் அப்பை பாதுகாப்பற்ற செயலி எனவும், அதற்குப் பதிலாகச் சந்தையில் வேறு பல நல்ல பாதுகாப்புடைய, புதிய அம்சங்களுடைய செயலிகள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்துங்கள் என அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தீபாவளி பண்டிகையினால் இவ்வளவு பெரிய பிரச்னை வரும் என்று மெட்டா நிறுவனத்தின் நிறுவனர் மார்க் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்.

Published by:Janvi
First published:

Tags: Deepavali, Diwali, India, WhatsApp