WhatsApp Down: திடீரென முடங்கிய வாட்ஸ்அப் சேவை... தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியாமல் அவதி

வாட்ஸ் அப்

உலகம் முழுவதும் வாட்ஸ்அப் சேவை திடீரென முடங்கியதால் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியாமல் பயனாளர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

  • Share this:
    உலகின் பல்வேறு நாடுகளிலும் வாட்ஸ்அப் சேவை முடங்கியது. வாட்ஸ் அப் செயலி திடீரென முடங்கியதால், தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியாமல் பயனர்கள் தவித்தனர். வாட்ஸ் அப் செயலி முடங்கியது குறித்த தகவல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. அதேபோல் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளும் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியது.

    ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயலியான வாட்ஸ்அப்-பை இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 200 கோடிக்கும் அதிகமான மக்கள் நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் இந்திய நேரப்படி நேற்று இரவு 10:55 மணி அளவில் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் உள்ளிட்டவைகளின் சேவைகள் திடீரென முடங்கின. இதனால் பயனாளர்கள் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    இதனையடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு 11:42 மணிக்கு சேவை சீரானது. வாட்ஸ் அப் முடங்கியது தொடர்பாக அந்நிறுவனம் சார்பில் இதுவரை விளக்கம் ஏதும் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க... தேர்தல் களத்தில் வாரிசுகள்... வாரிசு அரசியலை ஆரம்பித்தது யார்?



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: