இந்தியாவில் வீழும் வாட்ஸ்அப்... மாற்று ’ஆப்’ தேடிச் செல்லும் பயனாளர்கள்..!

ஸ்பைவேர் தாக்குதல் குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்திடம் விளக்கம் கோரியுள்ளது இந்திய அரசு.

இந்தியாவில் வீழும் வாட்ஸ்அப்... மாற்று ’ஆப்’ தேடிச் செல்லும் பயனாளர்கள்..!
வாட்ஸ் அப்
  • News18
  • Last Updated: November 6, 2019, 2:02 PM IST
  • Share this:
ஸ்பைவேர் தாக்குதல் குற்றச்சாட்டால் இந்தியாவில் வாட்ஸ்அப் செயலிக்கு மவுசு குறைந்துவருகிறது.

இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை டவுன்லோடு செய்வது 80 சதவிகிதம் குறைந்துள்ளதாம். அதாவது அக்டோபர் 26-ம் தேதி முதல் நவம்பர் 3-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 1.3 மில்லியன் டவுன்லோடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுகுறித்த ஆய்வை சென்சார் டவர் டேட்டா மேற்கொண்டது.


ஆனால், அக்டோபர் 17-ம் தேதி முதல் 25-ம் தேதி இடையிலான காலகட்டத்தில் 8.9 மில்லியன் டவுன்லோடுகள் இருந்துள்ளன. இதேகாலகட்டத்தில் மாற்று சாட்டிங் செயலிகளான டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகள் வளர்ச்சி பெற்றுள்ளன.

வாட்ஸ்அப் வீழ்ந்த அதே காலகட்டத்தில் டெலிகிராம் 9,20,000 புதிய டவுன்லோடுகளைப் பெற்றுள்ளது.

ஸ்பைவேர் தாக்குதல் குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்திடம் விளக்கம் கோரியுள்ளது இந்திய அரசு. இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், “இந்திய மக்களின் ப்ரைவஸியை வாட்ஸ்அப் நிறுவனம் அத்துமீறி கண்காணித்துள்ளது. அத்துமீறல் தொடர்பான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்திய மக்களின் ப்ரைவஸியைப் பாதுகாக்க வாட்ஸ்அப் என்ன செய்ய உள்ளது என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளோம்” என்றார்.மேலும் பார்க்க: 108 மெகாபிக்சல் உடனான பென்டா கேமிரா... வருகிறது Mi நோட் 10..!
First published: November 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading