ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

வாட்ஸ் ஆப் முடக்கத்தால் உலகம் முழுவதும் எத்தனை கோடி பேர் பாதிக்கப்பட்டனர் தெரியுமா?

வாட்ஸ் ஆப் முடக்கத்தால் உலகம் முழுவதும் எத்தனை கோடி பேர் பாதிக்கப்பட்டனர் தெரியுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

WhatsApp Down : வாட்ஸ் ஆப் சேவை சுமார் 2 மணி நேரமாக முடங்கியுள்ளதால் உலகம் முழுவதும் பயனாளர்கள் கடும் அவதியடைந்தனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  முன் எப்போழுதும் இல்லாத அளவுக்கு உலகம் முழுவதும் இரண்டு மணிநேரம் வாட்ஸ் ஆப் சேவை முடங்கியுள்ளதால் பயனாளர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

  நம்முடைய அன்றாட வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக வாட்ஸ்அப் உருவெடுத்துள்ளது என்றால் அது மிகையல்ல. பெரும்பாலான அலுவலகச் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள், இப்போதெல்லாம் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகத்தான் பகிரப்படுகின்றன. தகவல்தொடர்பின் ராஜாவாக வாட்ஸ்அப் மாற்றியுள்ளது. ஆனால் தற்போது வாட்ஸ் ஆப் முடக்கத்தால் நெட்டிசன்கள் அனைவரும் டிவிட்டரில் படையெடுத்து வாட்ஸ் ஆப் முடக்கம் குறித்து கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.

  இந்த நிலையில் வாட்ஸ் ஆப் சேவை சில மணி நேரமாக  முடங்கியுள்ளதால் உலகம் முழுவதும் பயனாளர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வாட்ஸ் -ஆப் செயலியில் தகவல்களை அனுப்புவதிலும் பெறுவதிலும் சிக்கல் நிலவுகிறது.

  இணையத்துடன் வாட்ஸ் ஆப் செயலியை இணைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப் பயன்பட்டுக்கு வந்ததில் இருந்து முன் எப்போழுதும் இல்லாத அளவுக்கு வாட்ஸ் ஆப் முடக்கியுள்ளது. மதியம் 12.45 மணிக்கு வழங்கத்திற்கு மாறாகா வாட்ஸ் ஆப் செயலி வேலை செய்யவில்லை.

  இதனால் முழுவதும் தகவல் தொடர்பு பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் பலர் டெலிகிராம் உள்ளிட்ட செயலியை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் வாட்ஸ் ஆப் ஹாக்கர்கள் கைவரிசை காட்டியுள்ளதாக புகார்கள் அதிகளவில் வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு வந்த நிலையில், வாடிக்கையாளர்கள் அனைவரும் உடனடியாக வாட்ஸ் அப்பை அப்டேட் செய்ய வேண்டும் என அந்த நிறுவனம் கூறியது.

  இந்நிலையில் தற்போது உலகின் பல இடங்களில் வாட்ஸ் அப் செயலி திடீரென முடங்கியுள்ளதாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்தியாவிலும் சில நகரங்களில் இந்த சேவை குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் முக்கிய தகவல்கள் படங்கள் வீடியோக்களை லோட் செய்ய முடியவில்லை ஏற்கனவே வந்திருக்கும் தகவல்களையும் ஓபன் செய்து படிக்க முடியவில்லை என பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

  இதையும் படிங்க: சிறப்பானதையே செய்வார்... பிரிட்டன் பிரதமராகும் மருமகன் ரிஷி சுனக்கிற்கு மாமனார் இன்போசிஸ் நாராயண மூர்த்தி வாழ்த்து

  மேலும் வாட்ஸ் ஆப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்து வருவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் தகவல் தொடர்பு மற்றும் பணம் செலுத்துவதற்கு  வாட்ஸ் ஆப்பை நம்பியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: WhatsApp