ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

முடங்கியது வாட்ஸ் அப்.. ட்விட்டரில் நடக்கும் அடிபிடி சண்டை! கலாய்த்து தள்ளும் இணையவாசிகள்!

முடங்கியது வாட்ஸ் அப்.. ட்விட்டரில் நடக்கும் அடிபிடி சண்டை! கலாய்த்து தள்ளும் இணையவாசிகள்!

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

WhatsApp Down : வாட்ஸ் ஆப் சேவை கடந்த ஒரு மணி நேரமாக முடங்கியுள்ளதால் உலகம் முழுவதும் பயனாளர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நம்முடைய அன்றாட வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக வாட்ஸ்அப் உருவெடுத்துள்ளது என்றால் அது மிகையல்ல. பெரும்பாலான அலுவலகச் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள், இப்போதெல்லாம் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகத்தான் பகிரப்படுகின்றன. தகவல்தொடர்பின் ராஜாவாக வாட்ஸ்அப் மாற்றியுள்ளது.

    இந்த நிலையில் வாட்ஸ் ஆப் சேவை கடந்த ஒரு மணி நேரமாக முடங்கியுள்ளதால் உலகம் முழுவதும் பயனாளர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வாட்ஸ் -ஆப் செயலியில் தகவல்களை அனுப்புவதிலும் பெறுவதிலும் சிக்கல் நிலவுகிறது. இணையத்துடன் வாட்ஸ் ஆப் செயலியை இணைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ட்விட்டரில் #whatsappdown என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது. பல்வேறு பயனர்கள் வாட்ஸ் அப்பை கலாய்த்தும், வாட்ஸ் அப் ஓனர் மார்க்கை கலாய்த்தும் ட்வீட் செய்து வருகின்றனர்.

    இப்படியாக ட்விட்டர் வாசிகள் வாட்ஸ் அப்பை கலாய்த்து ட்வீட் செய்து வருகின்றனர்

    Published by:Murugadoss C
    First published:

    Tags: Telegram, WhatsApp, Whatsapp Update