WhatsApp Down: உலகம் முழுவதும் வாட்ஸ்அப் சேவை முடங்கியது

WhatsApp Down: உலகம் முழுவதும் வாட்ஸ்அப் சேவை முடங்கியது
வாட்ஸ்அப்
  • Share this:
இந்தியா உட்பட உலக அளவில் வாட்ஸ்அப் சேவை சிறிது நேரம் முடங்கியது; இதனால் பயன்படுத்த முடியாமல் போனதாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மெசேஜ் அனுப்பப் பயன்படும் வாட்ஸ்அப் உலக அளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் ஆப்பாக இருந்துவருகிறது. செய்திகளைப் பகிர்வதில் இந்த ஆப்பின் பயன்பாடு மிக முக்கிய ஒன்றாக இருந்துவருகிறது.

வாட்ஸ்அப் செயல்பாடு பாதிக்கப்பட்டது குறித்து டவுன்டிடெக்டர் கணக்கீட்டின்படி, ‘நேற்று நள்ளிரவு 1.30 மணி முதல் வாட்ஸ்அப் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. 70 சதவீதத்துக்கும் அதிகமான பயனாளர்களால் செய்திகள், புகைப்படங்கள் எதையும் அனுப்ப மற்றும் பெற முடியாத சூழல் இருந்துள்ளது. உலகம் முழுவதும் 150 கோடி பயனாளர்களால் இந்த ஆப்பை ஓபன் செய்ய முடியாத சூழல் இருந்துள்ளது.


இருப்பினும், இந்த பாதிப்பின் காரணம் குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் எதுவும் விளக்கமளிக்கவில்லை.

வாட்ஸ்அப் செயல்பாடு முடங்கியதை அடுத்து நெட்டிசன்கள், ட்விட்டரில் #whatsappdown என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட தொடங்கினர்.  சிறிது நேர பாதிப்புக்கு பிறகு வாட்ஸ்அப் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading