Home /News /technology /

வாட்ஸ்அப்-ன் டிஸ்ஸப்பியரிங் மெசேஜ் அம்சம் இனி எல்லா புதிய சாட்களுக்கு டிஃபால்ட்டாக மாறலாம்!!

வாட்ஸ்அப்-ன் டிஸ்ஸப்பியரிங் மெசேஜ் அம்சம் இனி எல்லா புதிய சாட்களுக்கு டிஃபால்ட்டாக மாறலாம்!!

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

WhatsApp இப்போது அதன் மறைந்து போகும் செய்திகள் அம்சத்தில் ஒரு புதிய செயல்பாட்டைச் சேர்த்துள்ளது. இந்த புதிய அப்டேட் மூலம் யூசர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தானாகவே செய்திகளை நீக்கும் வசதியை ஆக்டிவேட் செய்ய முடியும்.

மெட்டாவுக்கு சொந்தமான உடனடி செய்தியிடல் செயலியான வாட்ஸ்அப்பில் செய்திகள் மறைந்துபோகும் அம்சம் (disappearing messages) உள்ளது. இந்த அம்சத்தை சாட்டில் ஆக்ட்டிவ் செய்யும் போது அதில் உள்ள செய்திகள் ஏழு நாட்களுக்குப் பிறகு தானாகவே மறைந்துவிடும். இந்த நிலையில் WhatsApp இப்போது அதன் மறைந்து போகும் செய்திகள் அம்சத்தில் ஒரு புதிய செயல்பாட்டைச் சேர்த்துள்ளது. இந்த புதிய அப்டேட் மூலம் யூசர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தானாகவே செய்திகளை நீக்கும் வசதியை ஆக்டிவேட் செய்ய முடியும்.

அதேபோல யூசர்கள் தங்கள் புதிய சாட்கள் அனைத்திற்கும் டிஸ்ஸப்பியரிங் மெசேஜ் அம்சத்தை டிஃபால்ட்டாக ஆக்டிவேட் செய்யும் முடியும் என்றும் WhatsApp நிறுவனம் கூறியுள்ளது. வாட்ஸ்அப் தனது யூசர்களுக்கு ஒரு செய்தியை எவ்வளவு காலத்திற்கு முன்பு நீக்க வேண்டும் என்று தேர்வு செய்யும் கூடுதல் விருப்பங்களை வழங்குகிறது. இந்த டிஸ்ஸப்பியரிங் மெசேஜ் அம்சம் கடந்த ஆண்டு நவம்பரில் முதன்முதலில் தொடங்கப்பட்டது.

மேலும் அதில், ஏழு நாட்களுக்குப் பிறகு செய்திகள் மறைந்துவிடும் விருப்பம் மட்டுமே இருந்தது. எந்த சாட் உள்ள செய்திகள் மறைய வேண்டும் என்று விரும்புகிறோமோ அந்த சாட்டில் இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்தால் போதும். இருப்பினும், இப்போது 24 மணிநேரம் அல்லது 90 நாட்களுக்குப் பிறகு செய்திகளை நீக்குவதற்கான விருப்பமும் இந்த அம்சத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், மறைந்துபோகும் செய்திகளை எல்லா புதிய சாட்டிற்கும் டிஃபால்ட்டாக மாற்றுவது ஏற்கனவே உள்ள சாட்களை பாதிக்காது என்றும் நிறுவனம் கூறுகிறது.

ALSO READ |  பிரபலமான 3 iPad மாடல்களை 2022-ல் புதுப்பிக்க திட்டமிட்டுள்ள ஆப்பிள் நிறுவனம்

அதன்படி யூசர்கள் ஒரு புதிய சாட்டை தொடங்கும் போது, ​​மறைந்து போகும் செய்திகள் அம்சம் இயக்கத்தில் உள்ளது என்று ஒரு ப்ராம்ப்ட்டைப் பெறுவார்கள். மேலும் அது இயல்பாகவே இயக்கத்தில் உள்ளது எனக் கூறும் குறிப்பும் அதில் இடம்பெற்றுருக்கும். ஒவ்வொரு தனிப்பட்ட சாட்டுக்கும் மறைந்து போகும் செய்திகள் அதாவது டிஸ்ஸப்பியரிங் மெசேஜ் அம்சத்தை முடக்கும் விருப்பமும் கொடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய டிஃபால்ட் அமைப்பு குரூப் சாட்களை பாதிக்காது என்றாலும், புதிய குரூப்-ஐ உருவாக்கும் போது இந்த புதிய விருப்பத்தைச் சேர்த்துள்ளதாக WhatsApp நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதில் அட்மின் இந்த அம்சத்தை இயக்க அனுமதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. புதிய அம்சங்கள் தற்போது அனைத்து தளங்களிலும் கிடைக்கும் என்று WhatsApp கூறியுள்ளது.அதேபோல வாட்ஸ்அப் மற்றொரு அம்சத்தையும் சோதனை செய்து வருகிறது. பொதுவாக யூசர்கள் சாட்டிங் செய்யும் போது, சாட்டிங்கை சுவாரஸ்யமானதாக மாற்ற ஸ்மைலி மற்றும் ஸ்டிக்கர்களை பயன்படுத்துகின்றனர்.

ALSO READ | வேலையை விடப்போவதாக எலான் மஸ்க் அதிரடி முடிவு...!

வாட்ஸ் அப் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னாள் வாட்ஸ் அப் ஸ்டிக்கர் சேவையை அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து பல விதமான ஸ்டிக்கர் பேக்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பலர் உருவாக்கிய ஸ்டிக்கர் பேக்களும் டவுன்லோடு செய்ய முடிந்தது. இந்த நிலையில் வாட்ஸ்அப் அதன் யூசர்களுக்கு தங்களுக்கு தேவையான ஸ்டிக்கர்களை தாங்களே உருவாக்கிக் கொள்ளும் அம்சத்திலும் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: WhatsApp

அடுத்த செய்தி