மல்டி டிவைஸ் சப்போர்ட், வியூ ஒன்ஸ் மற்றும் disappearing message ஆகிய புதிய அப்டேட்டுகளை வாட்ஸ்அப் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் முன்னணி சாட்பாக்ஸாக இருக்கும்
வாட்ஸ் அப் நிறுவனம், வாடிக்கையாளர்களின் எண்ண ஓட்டத்துக்கு ஏற்ப புதிய அப்டேட்டுகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் விரைவில் 3 புதிய அப்டேட்டுகள் வாட்ஸ் ஆப்பில் மேற்கொள்ளப்படவுள்ளன. வாட்ஸ் அப் நிறுவனம் மேற்கொள்ளும் அப்டேட்டுகளை முன்கூட்டியே தெரிவிக்கும் WABetaInfo நிறுவனத்திடம் வாட்ஸ் அப் நிர்வாக இயக்குநர் காத்கார்ட் (Cathcart) பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெக் உறுதிசெய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மல்டி டிவைஸ் சப்போர்ட்டை பல ஆண்டுகளாக
வாட்ஸ் அப் நிறுவனத்திடம் யூசர்கள் கேட்டு வருகின்றனர். ஸ்மார்ட்போனில் இருக்கும் வாட்ஸ்அப்பின் முதன்மை செயலியை பயன்படுத்தாமல் கம்யூட்டர், லேப்டாப், டேப்லெட் ஆகியவற்றில் வாட்ஸ் அப்- ஐ ஒபன் செய்யலாம். தற்போது, லேப்டாப் அல்லது டேப்லெட்டில் வாட்ஸ் அப் செயலியை ஓபன் செய்ய வேண்டும் என்றால் வாட்ஸ் ஆப் வெப் கனக்டிவிட்டி மூலம் ஸ்மார்ட்போனில் இருக்கும் வாட்ஸ் ஆப் செயலி இணைக்கப்படுகிறது. இதனை மாற்ற வேண்டும் என யூசர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மல்டி டிவைஸ் சப்போர்டை வாட்ஸ் அப் நிறுவனம் மேம்படுத்தி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வாட்ஸ் அப் நிர்வாக இயக்குநர் காத்கார்ட்டும் இதனை உறுதி செய்துள்ளார். ஐ பேட்டிலும் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தலாம் எனவும், ஐ.ஓ.எஸ் யூசர்களுக்கான வசதி விரைவாக உருவாக்கப்படும் என்றும் வாட்ஸ் அப் நிறுவனம் கூறியுள்ளது. Disappearing Messages என்ற வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த ஆப்சனை ஆன் செய்துவைக்கும்பட்சத்தில் (Enable) குரூப் அல்லது தனிநபர் அனுப்பும் மெசேஜ் மற்றும் மீயா பைல்களை 7 நாட்களில் அழிந்துவிடும். தனிநபர் மற்றும் குரூப் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக அந்த ஆப்சனை ஆன் செய்து வைத்திருந்தால் மட்டுமே மெசேஜ் மற்றும் மீடியா பைல்கள் அழியும். இந்நிலையில், Disappearing Messages அம்சத்தில் மேம்பட்ட வடிவம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
Also read... மிரர்லெஸ் கேமராக்களுக்காக 2 புதிய Z-mount லென்ஸ்களை அறிமுகப்படுத்திய நிக்கான்!
அடுத்தப்படியாக, வியூ ஒன்ஸ் (View Once) அம்சம் அறிமுக்கபடுத்தப்பட உள்ளது. தனிநபர் மற்றும் குரூப்களில் வரும் மெசேஜ் மற்றும் வீடியோ பைல்களை ஒருமுறை பார்த்தபிறகு, அவை அழிந்துவிடும். ஸ்நாப் சாட்டில் இருக்கும் இந்த அம்சத்தை அடிப்படையாக வைத்து வாட்ஸ்ஆப்பிலும் வியூ ஒன்ஸ் அம்சம் அறிமுகப்படுத்துகிறது. இந்த மூன்று அம்சமும் அறிமுகப்படுத்தபட்டால், வாட்ஸ் அப் யூசர்கள் வித்தியாசமான மற்றும் புதுமையான அனுபவத்தை பெறுவார்கள் என நம்பப்படுகிறது. மேலும், மொபைல் நம்பர்களை மாற்றும்போது, அந்த எண்ணுக்கு வந்திருக்ககூடிய வாட்ஸ் அப் மெசேஜ்களை முமுமையாக மாற்றிக்கொள்ளும் வசதியை அந்த நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.