வாட்ஸ் ஆப்பில் நியூ அப்டேட்... நாம் அனுப்பிய மெசேஜ் 7 நாட்களில் மறைந்து விடும் வசதி விரைவில் அறிமுகம்
நமக்கு பிடித்தவர்கள் மெசேஜ் என வாட்ஸ் ஆப் மெசேஜ் பாக்சில் மீண்டும் மீண்டும் அனுப்பிய மெசேஜை பார்த்து கொண்டு இருந்தவர்களுக்கு செக் வைக்க வருகின்றது வாட்ஸ் ஆப்பின் நியூ அப்டேட்.

வாட்ஸ் ஆப்
- News18 Tamil
- Last Updated: November 3, 2020, 4:15 PM IST
வாட்ஸ் ஆப்பில் புதிதாக ஒரு வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. நாம் மற்றவர்களுக்கு அனுப்பும் மெசேஜ்கள் 7 நாட்களுக்கு பின்னர் தானாகவே டெலீட் செய்யப்படும் வசதியை வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்யவுள்ளது. இதனை பயன்படுத்த செட்டிங்ஸ்சில் கூடுதலாக ஒரு வசதி இணைக்கப்படுகிறது.
வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோர் வேண்டுமென்றால் செட்டிங்ஸ் சென்று இந்த வசதியை ஆன் செய்து கொள்ளலாம். வேண்டாம் என்றால் பயன்படுத்தத் தேவை இல்லை.
இதற்கு வாட்ஸ் ஆப்பில் Settings > Storage and Data > Manage Storage சென்று இந்த வசதியைப் பெற வேண்டும். இது தெடர்பான வீடியோ ஒன்றை வாட்ஸ் ஆப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
தற்போதைய நடைமுறையில் இந்த வசதி இல்லை எனினும் இந்த வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது எனவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோர் வேண்டுமென்றால் செட்டிங்ஸ் சென்று இந்த வசதியை ஆன் செய்து கொள்ளலாம். வேண்டாம் என்றால் பயன்படுத்தத் தேவை இல்லை.
We’ve made it easy to review, bulk delete items and free up space. This new storage management tool can be found in Settings > Storage and Data > Manage Storage. pic.twitter.com/eIMFZ1Oyzr
— WhatsApp Inc. (@WhatsApp) November 3, 2020