வாட்ஸ்அப் தகவல்களை திருட வீடியோ வைரஸ்... பேஸ்புக் நிறுவனம் எச்சரிக்கை...!

Whatsapp | ஆன்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் மென்பொருளில் இயங்கும் செல்போன்களை இந்த வைரஸ் தாக்குதலின் இலக்காக உள்ளன.

வாட்ஸ்அப் தகவல்களை திருட வீடியோ வைரஸ்... பேஸ்புக் நிறுவனம் எச்சரிக்கை...!
Whatsapp | ஆன்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் மென்பொருளில் இயங்கும் செல்போன்களை இந்த வைரஸ் தாக்குதலின் இலக்காக உள்ளன.
  • Share this:
வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருபவர்களின் தகவல்கள் புதிய வைரஸ் வீடியோ மூலம் திருடப்படும் அபாயம் உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் எச்சரித்துள்ளது.

அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து எம்.பி.4 வகை வீடியோ பைல் அனுப்புவதன் மூலம் செல்போன் ஹேக் செய்யப்படக் கூடும் என அந்த நிறுவனத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் தகவல்கள் மட்டுமின்றி செல்போனில் உள்ள அனைத்து தகவலும் திருடப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது. ஆன்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் மென்பொருளில் இயங்கும் செல்போன்களை இந்த வைரஸ் தாக்குதலின் இலக்காக உள்ளன.


இதற்கு தற்காலிகத் தீர்வாக வாட்ஸ்அப் செயலியை கூகுள் பிளே சென்று அப்டேட் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே உலகம் முழுவதும் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் வாட்ஸ்அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
First published: November 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading