ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் அறிமுகமாகும் வாட்ஸ்அப் கம்யூனிட்டிஸ்!

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் அறிமுகமாகும் வாட்ஸ்அப் கம்யூனிட்டிஸ்!

வாட்ஸ்அப் குரூப்

வாட்ஸ்அப் குரூப்

உருவாக்க விரும்பும் கம்யூனிட்டியின் பெயர், அதன் நோக்கம், மற்றும் ப்ரோபைல் போட்டோ

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தனது புதிய அப்டேடான வாட்ஸ் அப் கம்யூனிட்டிஸ் என்ற வசதியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளத்திற்கு அறிமுகப்படுத்தப் போவதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. மேலும் வாட்ஸ்அப் வெப் யூசர்களுக்கும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

  சில வாரங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட இந்த புதிய அப்டேட் ஆனது தற்போது தான் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது. இது ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு மற்றும் வாட்ஸ்அப் வெப் யூசர்களுக்கும் கிடைக்கும் என்றும், யூசர்களை அவர்கள் விரும்பும் பல்வேறு வித குழுக்களில் இணைந்து தங்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளவும், தங்களுக்குள் விவாதம் செய்யவும் இது மிகச்சிறந்த ஒரு தளமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த கம்யூனிட்டிஸ் பற்றி மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் கூறுகையில் “வாட்ஸ் அப்பின் புதிய வசதியான கம்யூனிட்டிஸை அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். 2009-ல் வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, பல்வேறு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

  அந்த வகையில் வாட்ஸ்அப் கம்யூனிட்டி எனப்படும் இந்த புதிய வசதி மூலம், ஒரு தனிப்பட்ட நபர் ஒரு குழுவாகவும் அல்லது குழுவில் விவாதிக்கப்படும் தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும். மேலும் வாட்ஸ் அப் கம்யுனிட்டிஸ் பயன்படுத்தும் நபர்களிடமும் அதன் ஒருங்கிணைப்பாளர்களிடமும் நாங்கள் தொடர்பில் இருப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

  இந்தியாவில் விஎல்சி வீடியோ பிளேயருக்கு தடை நீக்கம்… மத்திய அரசு அறிவிப்பு

  அது என்ன வாட்ஸ் அப் கம்யூனிட்டி (Whatsapp community)?

  இது சாதாரணமாக வாட்ஸ் அப்பில் இருக்கும் குழுக்களைப் போல் அல்லாமல், ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக ஒரு குழுவில் அதிகப்படியான யூசர்கள் இணைந்து, ஒரு குறிப்பிட்ட தலைப்பு அல்லது சம்பவத்தை பற்றி தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும், மற்றவர் கருத்துக்களை தெரிந்து கொள்வதற்கும் ஒரு தளமாக இருக்கும். இதன் மூலம் உங்களது பள்ளி அலுவலகம் உள்ளூர் என பலவித தளங்களில் நீங்கள் இயங்க முடியும்.

  ஐஓஎஸ் யூசர்களுக்கு இந்த கம்யூனிட்டி வசதியை பயன்படுத்துவதற்கு செட்டிங்ஸில் வாட்ஸ் அப் வெப் பட்டனுக்கு அடுத்ததாக இருக்கும்  பட்டனை அழுத்தி இதை இயக்கமுடியும்.

  எப்படி ஒரு கம்யூனிட்டியை உண்டாக்குவது:

  வாட்ஸ்அப் செயலியில் கம்யூனிட்டி டேப் என்ற பட்டனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

  உருவாக்க விரும்பும் கம்யூனிட்டியின் பெயர், அதன் நோக்கம், மற்றும் ப்ரோபைல் போட்டோ ஆகியவற்றை என்டர் செய்ய வேண்டும். நீங்கள் உருவாக்க இருக்கும் கம்யூனிட்டியின் பெயரானது 24 எழுத்துக்களுக்கு மேல் செல்லக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

  அதன்பின் பச்சை நிற அம்புக்குறியை அழுத்தி புதிய குழுவை உண்டாக்கவும் அல்லது ஏற்கனவே இருக்கும் குழுக்களை இணைத்துக் கொள்ளவும் முடியும்.

  தேவையான குழுக்களை சேர்த்த செய்த பிறகு பச்சை நிற டிக் பட்டனை அழுத்த வேண்டும்.ஒரு யூசர் ஒரு கம்யூனிட்டியில் 50 குழுக்களுக்கு மேல் இணைக்க முடியாது என்பதையும் அதிகப்பட்சம் ஐந்தாயிரம் நபர்கள் வரை மட்டுமே இணைய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  மிக்ஸ்டு-ரியாலிட்டி ஹெட்செட்... வேகமெடுக்கும் ஆப்பிள்.... சிறப்பம்சம் என்ன?

  மேலும் அந்தந்த கம்யூனிட்டிகளை நிர்வகிக்கும் அட்மின்கள் தன் குழு உறுப்பினர்களுக்கு மொத்தமாக ஒரு அறிவிப்பை அனுப்பவும், அவர்களுடன் தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் முடியும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: WhatsApp, Whatsapp Update