WhatsApp-ன் புதிய அப்டேட்: இனி iOS-லிருந்து சாம்சங் போன்களுக்கு சாட் பைல்களை ட்ரான்ஸ்ஃபர் செய்யலாம்: எப்படி?

வாட்ஸ் ஆப்

"Chat Migration Tool" என்று அழைக்கப்படும் இந்த அம்சம் கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

  • Share this:
புதிய மொபைல் வாங்கும் பலர் தங்கள் பழைய வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை புதிய மொபைலில் இன்ஸ்டால் செய்யும் போது பழைய சாட் ஹிஸ்டரியை இழந்துவிடுவர். இந்த நிலையில், ஆண்ட்ராய்டு மற்றும் iOS யூசர்கள் தங்களது வாட்ஸ்அப் சாட்களை ட்ரான்ஸ்ஃபர் செய்துகொள்ளும் அம்சம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும் சில மாதங்களாக செயல்பாட்டில் இருப்பதாகக் கூறப்பட்டது.

"Chat Migration Tool" என்று அழைக்கப்படும் இந்த அம்சம் கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ் ஆப் நிறுவனம் முன்பு தெரிவித்ததாவது, இந்த சாட்- ட்ரான்ஸ்ஃபர் வசதி சாம்சங் தொலைபேசிகளான சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 மற்றும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிலிப் 3 ஆகிய மாடல்களில் மட்டுமே பயன்பாட்டிற்கு வரும் என அறிவித்திருந்தது. ஆனால், பிற சாம்சங் தொலைபேசிகளிலும் இந்த அம்சம் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் ஆண்ட்ராய்டு 10-ல் இயங்கும் சாம்சங் தொலைபேசிகளில் மட்டுமே இந்த அம்சம் வேலை செய்யும் என்று நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல இந்த அம்சத்தின் மூலம் IOS இலிருந்து Android போன்களுக்கு ( அதாவது தற்போதைய நிலையில் சாம்சங் போன்கள்) சாட் பைல்களை எவ்வாறு மாற்றுவது என்பது குறித்த கூடுதல் விவரங்களை நிறுவனம் பகிர்ந்துள்ளது.

இதுதொடர்பாக ஒரு வலைப்பதிவில் வெளியான தகவலின்படி, யூசர்கள் தங்கள் பழைய போனில் இருந்த கணக்கை புதியபோனிற்கு மாற்றும் போது, முக்கியமாக புதிய செட்டிங்கை அமைக்கும் செயல்பாட்டின் போது அவர்களுக்கு "securely transfer" என்ற ஆப்ஷன் வழங்கப்படும் என்று வாட்ஸ்அப் கூறியுள்ளது. இந்த சாட் ட்ரான்ஸ்ஃபர் அம்சம் செயல்பட யூ.எஸ்.பி-சி முதல் லைட்னிங் கேபிள் வரை தேவைப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. அதுவே iPhone 12 ஆக இருந்தால் USB-C to USB-C இணைப்பு தேவை என்று கூறியுள்ளது.

Also Read: இந்த போன்களில் இனி வாட்ஸ் அப் பயன்படுத்த முடியாது – 2021 தான் கடைசி!

மற்ற அடிப்படை தேவைகளில் Samsung SmartSwitch ஆப் வெர்ஷன் 3.7.22.1 அல்லது அதற்கு மேற்பட்ட வெர்ஷனாக இருக்க வேண்டும். அதேபோல இந்த அம்சம் செயல்பட WhatsApp iOS வெர்ஷன் 2.21.160.17- ஆகவும், Android வெர்ஷன் 2.21.16.20-ஆகவும் மற்றும் புதிய தொலைபேசியில் அதே சிம் கார்டு அல்லது அதே எண் ஆகியவை இருக்க வேண்டும். சரி, தற்போது இந்த அம்சத்தின் மூலம் சாம்சங்கிலிருந்து ஐபோனுக்கு டேட்டாவை எப்படி ட்ரான்ஸ்பர் செயயலாம் என்பதை பார்ப்போம்.

* உங்கள் சாம்சங் போனை ஆன் செய்யவும் அது ஓபன் ஆகும் போது உங்கள் ஐபோனுடன் யூஎஸ்பி கேபிள் மூலம் இணைக்கவும்.

* இப்போது சாம்சங் ஸ்மார்ட் ஸ்விட்ச் அனுபவத்தைப் பின்பற்றவும்.

* அது ப்ராம்ப்ட் ஆகும் போது, ஐபோனின் கேமராவைப் பயன்படுத்தி புதிய சாம்சங் சாதனத்தில் காட்டப்படும் QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.

Also Read: டிடர்ஜெண்ட், குளியல் சோப் விலை உயர்வு – இல்லத்தரசிகள் ஷாக்!

* இப்போது உங்கள் ஐபோனில் ஸ்டார்ட் என்பதைத் கிளிக் செய்யவும். மேலும் செயல்முறை முடிவடையும் வரை காத்திருக்கவும்.

* உங்கள் புதிய சாம்சங் தொலைபேசியில் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் செய்வதை தொடங்குங்கள்.

* இப்போது நீங்கள் முகப்புத் திரையை அடைந்ததும், வாட்ஸ்அப்பைத் திறந்து உங்கள் பழைய சாதனத்தில் பயன்படுத்தப்பட்ட அதே தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.

* பிறகு ஆப் ப்ராம்ப்ட் ஆகும் போது இம்போர்ட் என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இந்த செயல்முறையை முடிக்க allow பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

Also Read: இலவச வைஃபைக்கான பாஸ்வோர்டை கண்டறிய உணவகம் வைத்த சவால்!

* உங்கள் புதிய சாதனத்தில் ஆப்பை அக்டிவேட் செய்யும் செயல்முறையை முடித்தவுடன், முகப்பு பக்கத்தில் உங்கள் பழைய போனில் இருந்த சாட் ஹிஸ்ட்ரிக்கள் இருப்பதை நீங்கள் காணலாம்.

இருப்பினும் வாட்ஸ்அப் கால் ஹிஸ்டரியை ஐபோன் சாதனத்திலிருந்து சாம்சங் சாதனத்திற்கு மாற்ற முடியாது. அதிகளவிலான ஆண்ட்ராய்டு போன்கள் விரைவில் இந்த அம்சத்தை பெறும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு சாம்சங் மற்றும் ஐபோன் யூசர்கள் வாட்ஸ்அப்பின் சமீபத்திய வெர்ஷனை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். சில யூசர்கள் இருக்கும் இருப்பிடத்தைப் பொறுத்து இந்த அம்சத்தைப் பெறலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published: