Home /News /technology /

கூகுள் டிரைவில் வாட்ஸ்அப் சாட் மெசேஜ்களை பேக்அப் செய்வது எப்படி?

கூகுள் டிரைவில் வாட்ஸ்அப் சாட் மெசேஜ்களை பேக்அப் செய்வது எப்படி?

WhatsApp

WhatsApp

Whatsapp Chat Backup | பாஸ்வேர்டு 6 கேரக்டர்கள் மற்றும் 1 எழுத்தைப் பயன்படுத்தி உருவாக்கலாம் அல்லது 64 டிஜிட் என்க்ரிப்ஷன் கீ-யை உருவாக்கி, அதை எங்காவது சேமிக்கலாம்,

வாட்ஸ்அப் சாட் பேக்அப் என்பது ஆண்ட்ராய்டு மற்றும் iOS யூஸர்களுக்கு மிகவும் பயனுள்ள அம்சமாகவும். டெலீட் செய்த வாட்ஸ்அப் சாட் மெசேஜ்களை திரும்ப எடுக்க கூகுள் டிரைவ் பேக்அப் மற்றும் ஐகிளவுட் பதிவுசெய்யப்பட்ட அக்கவுண்டை பயன்படுத்தலாம். இந்த அம்சம் நீண்ட காலமாக உள்ளது, ஆனால் வாட்ஸ்அப் எப்போதும் கிளவுட்டில் சேமிக்கப்படும் எந்த சாட்/செய்திகளும் என்க்ரிப்ட் செய்யப்படவில்லை என்று கூறுகிறது. சாட் மெசேஜ்களை பேக்அப் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்ய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, இந்த அம்சம் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் உங்கள் முக்கியமான வாட்ஸ்அப் சாட் மெசேஜ் பேக்அப்பை பாதுகாப்பது என்படி என்பது பற்றிய பாதுகாப்பான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வாட்ஸ்அப் சாட் பேக்அப் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை ஆக்டிவேட் செய்வது எப்படி?

முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் பேக்அப் சேவையை எப்படி ஆக்டிவேட் செய்வது என்று பார்க்கலாம்.

1. வாட்ஸ் அப்பில் வலது மூலையில் உள்ள 3 புள்ளிகளை க்ளிக் செய்து, அதில் செட்டிங்ஸ் (Settings) ஓபன் செய்யுங்கள்.

2. சாட்ஸ் (Chats) கிளிக் செய்யுங்கள்.

3. சாட் பேக்அப்(Chat backup) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

4. அதற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள பேக்அப் என்ற பச்சை நிற பட்டனை தட்டுங்கள். அதன் பின்னர் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் ஓபன் ஆகும். அதில் ஆஃப் என்ற ஆப்ஷன் தேர்வாகியிருக்கும்.

5. இந்த அம்சத்தை கிளிக் செய்யும் போது, ​​வாட்ஸ்அப் சாட் பேக்அப் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை இயக்குவது பற்றி பேசும் புதிய திரை காண்பிக்கப்படும். அதில், “கூகுள் அல்லது வாட்ஸ்அப் முதற்கொண்டு யாரும் இதனை அணுக முடியாது” என்ற டைலாக் பாக்ஸ் தோன்று.

6.வாட்ஸ்அப் சாட் பேக்அப் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை இயக்க, ஆன் பொத்தானைக் கிளிக் செய்யவும்.

7. அடுத்த கட்டத்தில், பாஸ்வேர்டு அல்லது 64 டிஜிட் என்க்ரிப்ஷன் கீ-யை பயன்படுத்தி எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட சாட் பேக்அப் பிரதிகளை பாதுகாக வாட்ஸ்அப் அறிவுறுத்துகிறது.

Also read... வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களில் பயன்படுத்தும் அம்சம் அறிமுகம்!

பாஸ்வேர்டு 6 கேரக்டர்கள் மற்றும் 1 எழுத்தைப் பயன்படுத்தி உருவாக்கலாம் அல்லது 64 டிஜிட் என்க்ரிப்ஷன் கீ-யை உருவாக்கி, அதை எங்காவது சேமிக்கலாம், ஏனெனில் வாட்ஸ்அப்பில் அதன் நகல் இல்லை. உங்கள் வாட்ஸ்அப் சாட் பேக்அப் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை இயக்க, தொடரவும் என்பதை அழுத்தவும்.

இந்த செயல்முறையை நீங்கள் பின்பற்றுவதன் மூலமாக எதிர்பாராத விதமாக உங்களுடைய வாட்ஸ்அப் சாட் அழிந்துவிட்டால், கூகுள் டிரைவ் பேக்அப் மற்றும் ஐகிளவுட் சேவையை பயன்படுத்தி, ண்ட்ராய்டு போன் மற்றும் iOS போன்களில் எளிதாக ரீஸ்டோர் செய்து கொள்ளலாம். இந்த சேவைகளை உங்கள் வாட்ஸ் ஆப்-பில் நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் நிச்சயம் டெலீட் செய்த சாட்களை திரும்பப் பெற முடியாது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Google, WhatsApp

அடுத்த செய்தி