• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள 'ஃபாஸ்ட் பிளேபேக்' அம்சம்: இதன் பயன் என்ன?

வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள 'ஃபாஸ்ட் பிளேபேக்' அம்சம்: இதன் பயன் என்ன?

நீண்ட செய்திகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியை பெறுவதற்கும் பெரிய செய்திகளைத் தவிர்ப்பதற்கும் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம்.

  • Share this:
ஃபாஸ்ட் பிளேபேக் எனும் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆடியோ ஃபைலை இயக்கும்போது பல பின்னணி வேகங்களின் அடிப்படையில் இயக்க பயனாளர்களை அனுமதிக்கிறது. இந்த புதிய அம்சங்கள் நீண்ட வாய்ஸ் மெசேஜ்களை எளிதாகக் கேட்க உங்களை அனுமதிக்கின்றன. மேலும், நீண்ட செய்திகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியை பெறுவதற்கும் பெரிய செய்திகளைத் தவிர்ப்பதற்கும் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம்.

இந்த புதிய அம்சத்தில் வாய்ஸ் மெசேஜ்களை விரைவுபடுத்துவதன் மூலம் நீண்ட வாய்ஸ் செய்திகளைக் கேட்க எடுக்கும் நேரத்தைக் குறைக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் மிக நீண்ட வாய்ஸ் மெசேஜ்களை பெரும்பாலும் மக்கள் முழுவதுமாக கேட்பதில்லை. ஆனால் இந்த புதிய அம்சம் அதனை எளிதாக்குகிறது. அண்ட்ராய்டு மற்றும் iOSக்கான சமீபத்திய வாட்ஸ்அப் அப்டேட் புதிய ஃபாஸ்ட் பிளேபேக் வேகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த அம்சத்தில் இரண்டு புதிய பின்னணி வேகங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி மொத்தம் இயக்கக்கூடிய வேகங்களின் எண்ணிக்கை மூன்றாக இருக்கிறது. அவை 1x, 1.5x மற்றும் 2x ஆகும். இதில் 1x சாதாரணமாக இயக்கப்படும் டிஃபால்ட் ஆப்ஷனாகும். அதாவது வாய்ஸ் மெசேஜ்களின் அசல் பின்னணி வேகம் இதுதான். இதையடுத்து தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 1.5x மற்றும் 2x ஆகியவை ஆடியோ ஃபைல்களை 5% அல்லது 100% வேகத்தில் இயக்க அனுமதிக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டு புதிய வேகங்களையும் எவ்வாறு பயன்படுத்தலாம்?

அண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிலும் வாட்ஸ்அப் செயலியின் சமீபத்திய பதிப்பில் ‘ஃபாஸ்ட் பிளேபேக்’ அம்சம் கிடைக்கிறது. எனவே, பயனாளர்கள் இந்த அம்சத்தைப் பயன்படுத்த முயற்சிக்கும் முன், வாட்ஸ்அப்பின் சமீபத்திய வெர்ஷனான 2.21.101- க்கு உங்கள் செயலியை அப்டேட் செய்திருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். மேலும் பயனாளர்கள் இந்த அம்சத்தை வாட்ஸ்அப் வெப்பிலும் பயன்படுத்தலாம்.

இதையடுத்து வாட்ஸ்அப் செயலியை திறந்து, ஏதேனும் வாய்ஸ் செய்திக்குச் (Voice Message) செல்வதன் மூலம் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம். அதாவது உங்களுக்கு வரும் வாய்ஸ் மெசேஜ்களை தொடர்ந்து பின்னணி வேகத்திற்கான ஆப்சனும் கிடைக்கும். அதனை கிளிக் செய்வதன் மூலம் உங்களுக்கு தேவையான வேகத்தில் இயக்கலாம். சாதாரணமாக அதில் ‘1x’ இருக்கும். அதை நீங்கள் கிளிக் செய்வதன் மூலம் வேகத்தை ‘1.5x’ஆக மாற்றலாம். மீண்டும் கிளிக் செய்தால் '2x' என்ற வேகத்திற்கு செல்லும். ஏற்கனவே 2x வேகத்தில் இருக்கும்போது, பயனர்கள் பிளேபேக்கை இயல்புநிலை 1x வேகத்திற்கு மாற்ற 2x பட்டனை மீண்டும் கிளிக் செய்ய வேண்டும். இந்த அம்சம் இப்போது அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் கிடைக்கிறது மற்றும் ஆண்ட்ராய்டு மற்றும் iOS-ன் சமீபத்திய அப்டேட்கள் இந்த புதிய அம்சத்தை உறுதிப்படுத்துகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: