இந்தியர்களின் 30 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கம் - காரணம் என்ன?

Whatsapp

ஜூலை 16 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 30,27,000 வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
விதிமீறல் மற்றும் வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகளுக்கு புறம்பாக புழக்கத்தில் இருந்த 30 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளை கடந்த 45 நாட்களுக்குள் நீக்கியிருப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, சமூக ஊடகங்களுக்கான புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, 50 லட்சத்துக்கும் மேற்பட்ட யூசர்களைக் கொண்ட நிறுவனங்கள் 45 நாட்களுக்கு ஒருமுறை புகார்கள் மற்றும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை வெளியிட வேண்டும். மத்திய அரசின் இந்தக் கொள்கைகளுக்கு தயக்கம் தெரிவித்த வாட்ஸ் அப் நிறுவனம், பேச்சுவார்த்தைக்குப் பின்பு ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில், புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவலை வாட்ஸ்அப் நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. கோடிக்கணக்கான யூசர்களைக் கொண்ட வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், ஜூலை 16 ஆம் தேதி முதல் கடந்த 31 ஆம் தேதி வரை 30,27,000 வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள காலகட்டத்தில் 594 புகார்கள் வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு வந்ததாக கூறியுள்ளது. புகாரின் அடிப்படையில் 74 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய தொழில்நுட்ப விதிகள் அமலுக்கு வந்தபிறகு வாட்ஸ் அப் வெளியிடும் 2வது வெளிப்படையான அறிக்கை இதுவாகும். இது குறித்து பேசிய வாட்ஸ்அப் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், வாட்ஸ் அப் நிறுவனம் குற்றங்களை அல்லது தவறுகளை தடுப்பதில் முதல் இடத்தில் இருக்க விரும்புகிறது என கூறியுள்ளார்.

Also Read:  சாமியார் பேச்சைக்கேட்டு மனைவியை நிர்வானப்படுத்தி சாம்பல் பூஜை.. சிக்கிய கணவர் குடும்பத்தினர்..

தவறுகள் மற்றும் மோசடிகள் நடந்த பிறகு அதன்மீது நடவடிக்கை எடுப்பதைவிட, முன்னரே கண்டறிந்து, குற்றங்களை தடுக்க தீவிர கவனம் செலுத்தி வருகிறோம் என கூறியுள்ள அவர், யூசர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற தொழில்நுட்பங்கள், வல்லுநர்கள் கொண்ட குழுவை அமைத்து கண்காணித்து வருவதாகவும் வாட்ஸ் அப் செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

குற்றங்களை கண்டுபிடிக்கவும், மோசடிகளை தடுக்கவும் கவனம் செலுத்தும் வாட்ஸ் அப் நிறுவனம், யூசர்களின் பயன்பாட்டுக்காக புதிய அம்சங்களையும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், அண்மையில் வியூ ஒன்ஸ் (view once) என்ற புதிய அம்சத்தை வாட்ஸ் அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Also Read:   தாலிபான்களுக்கு அல்கொய்தா பாராட்டு: காஷ்மீர் விடுதலைக்காக தீவிரவாத அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தது!

புதிய அம்சத்தை ஆன் செய்துவிட்டால், நாம் அனுப்பும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பெறுநரால் ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். அதன்பிறகு காணாமல் போகும்(Disappearing).வியூ ஒன்ஸ் அம்சம் ஆன் செய்தபிறகு ரிசீவாகும் புகைப்படங்கள், ஒருமுறை பார்த்தவுடன் அது சாட்டில் இருந்து மறைந்து விடும். வியூ ஒன்ஸ் ஆன் செய்யப்பட்டிருந்தாலும், ஸ்கிரீன்ஷாட் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published: