புதிய தொழில்நுட்ப விதிகளுக்குட்பட்டு அறிக்கை சமர்பித்த வாட்ஸ்அப் நிறுவனம், ஆகஸ்ட் மாதத்தில் 2 மில்லியன் கணக்குகளை முடக்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் புதிய தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, சமூக வலைதள நிறுவனங்கள் இந்த விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டது. மத்திய அரசின் இந்த சட்டங்களை வாட்ஸ்அப் ஏற்றுக்கொள்ள முதலில் தயக்கம் காட்டினாலும், பின்னர் ஏற்றுக்கொண்டது. அதன்படி, யூசர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வெளிப்படைத்தன்மையுடன் அறிக்கையாக வாட்ஸ்அப் நிறுவனம், மத்திய அரசுக்கு கொடுத்துள்ளது.
இப்போது கொடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் விதிகளை மீறிய, சட்டவிரோத கன்டென்டுகளைக் கொண்ட 20,70,000 வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு அமல்படுத்திய புதிய தொழில்நுட்ப விதிகளுக்குப் பிறகு தங்கள் நிறுவனம் வெளியிடும் 3வது அறிக்கை எனக் கூறியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 420 புகார்கள் பெறப்பட்டதாக தெரிவித்துள்ள வாட்ஸ்அப் நிறுவனம், அவற்றில் 222 புகார்கள் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்க வேண்டும் என்ற கோரியதாக கூறியுள்ளது.
ALSO READ | உங்கள் மொபைலில் வாட்ஸ்அப் பேமெண்ட்டை ஆக்டிவேட் செய்வது எப்படி?
இந்த புகார்களின் மீது 41 அக்கவுண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ள வாட்ஸ்அப், உலகளவில் இதுவரை தடை செய்யப்பட்ட கணக்குகளில் 25 விழுக்காடு கணக்குகள் இந்தியாவைச் சேர்ந்தவை என்றும் கூறியுள்ளது. ஜூன் 16ம் தேதி முல் ஜூலை 31ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 3,027,000 அக்கவுண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளில், மே 15 முதல் ஜூன் 15 வரை 20 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்திருந்தது. இது குறித்து கொடுக்கப்பட்ட விளக்கத்தில், கணக்குகள் முடக்கம் தொடர்பாக மூன்று கட்டங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக விளக்கம் அளித்துள்ளது. அங்கீகாரம் பெறாமல் ஒரே நேரத்தில் பல மெசேஜ்களை அனுப்பக்கூடிய கணக்குகள், அவை சாதி, மத, இன மோதல்கள், வன்முறைச் சம்பவங்கள் ஏற்படுத்துபவையாக இருப்பதால், அந்தக் கணக்குகள் முடக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
ALSO READ | வாட்ஸ்அப் CHAT -க்கு டைமர் செட் பண்ணலாம் - வரப்போகும் அசத்தல் அப்டேட்!
"ஒருவரின் கணக்கு மூன்று கட்டங்களாக ஆராயப்படும். அதாவது பதிவு செய்தல், செய்தி அனுப்புதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு விதிமுறைகளை மீறும் பயனாளரின் கணக்குகள் முடக்கப்படும். பாதுகாப்பு சிக்கல் உள்பட பல வகைகளில் தீங்கு விளைவிக்கும் கணக்குகள் குறித்து 222 புகார்கள் இதுவரை வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு வந்துள்ளன. அதில், 41 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் பயனாளர்கள் அளிக்கும் புகார்கள் உடனடியாக பரீசிலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: News On Instagram, WhatsApp, Whatsapp Update