Home /News /technology /

இந்தியர்களின் 1.32 கோடி வாட்ஸ்அப் கணக்குகள் 6 மாதங்களில் நீக்கம்

இந்தியர்களின் 1.32 கோடி வாட்ஸ்அப் கணக்குகள் 6 மாதங்களில் நீக்கம்

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப் நிறுவனம்  கடந்த டிசம்பர் மாதத்தில்  20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை நீக்கம் செய்துள்ளது. இதனுடன் சேர்த்து கடந்த 6 மாதங்களில் இந்தியர்களின் 1.32 கோடி கணக்குகளை வாட்ஸ் அப் நீக்கம் செய்துள்ளது.

இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக ஊடகமாக வாட்ஸ் அப் திகழ்கிறது. பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். அதேவேளையில், வாட்ஸ் அப் மூலம் பொய் செய்திகள், வெறுப்பு செய்திகள் போன்றவை அதிகளவில் பகிரப்படுகிறது.  இதனை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, சமூக ஊடகங்களுக்கான புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

அதன்படி, 50 லட்சத்துக்கும் மேற்பட்ட யூசர்களைக் கொண்ட நிறுவனங்கள் 45 நாட்களுக்கு ஒருமுறை புகார்கள் மற்றும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை வெளியிட வேண்டும். கடந்த மே 15-ம் தேதி முதல் இந்த நடவடிக்கை செயல்பாட்டுக்கு வந்தது.

டிசம்பர் மாதத்திற்கான அறிக்கையை வாட்ஸ் அப் வெளியிட்டுள்ளது. அதன்படி,  இந்தியர்களின் 20,79,000 வாட்ஸ் அப் கணக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கை அமலுக்கு வந்த 6 மாதங்களில் 1.32 கோடிக்கும் அதிகமான வாட்ஸ் அப் கணக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.  அதிகபட்சமாக 16 ஜூன் 2021- 31 ஜூலை 2021 ஆகிய காலகட்டங்களில் 30.27 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் நீக்கம் செய்யப்பட்டன.

மெசேஜ்களை படிக்காமல் கணக்குகளை நீக்கம் செய்வது எப்படி?

வாட்ஸ் அப் End To End என்கிரிப்ஷன் முறையில் இயங்குகிறது. இதன் மூலம் நீங்கள் அனுப்பும் தகவலை யாருக்கு அனுப்புகிறீர்களோ அவர்கள் மட்டுமே படிக்க முடியும். நடுவில் ஹேக் செய்து யாரும் படிக்க முடியாது. வாட்ஸ் அப் நிறுவனத்தில் கூட இரு கணக்குகளுக்கு இடையேயான மெசேஜ், புகைப்படம், கால் பரிமாற்றங்களை படிக்க முடியாது.  அப்படி இருக்கும்போது எந்த அடிப்படையில் கணக்குகளை வாட்ஸ் அப் நிறுவனம் நீக்கம் செய்கிறது?

இதையும் படிங்கள்: முதன்முறையாக யூசர்சை இழக்கும் ஃபேஸ்புக்... பங்குச்சந்தையில் குறையும் மதிப்பு


இதற்கு வாட்ஸ் அப் கூறும் பதில், தாங்கள், அவதூறு கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாகவும் இதில், 3 கட்டங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கிறது. குறிப்பிட்ட கணக்கு எப்போது தொடங்கப்பட்டது, அதில் இருந்து எத்தனை மேசேஜ்கள் அனுப்பப்பட்டுள்ளன,  எத்தனை பேர் அந்த கணக்கை ரிபோர்ட் அல்லது பிளாக் செய்துள்ளனர் என்பதை கணக்கில்கொண்டு கணக்குகள் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
Published by:Murugesh M
First published:

Tags: India, WhatsApp

அடுத்த செய்தி