Home /News /technology /

வாட்ஸ்அப்பில் வருகிறது புதிய அப்டேட்.. என்னென்னு பாருங்க...

வாட்ஸ்அப்பில் வருகிறது புதிய அப்டேட்.. என்னென்னு பாருங்க...

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

WhatsApp New Feature | ஸ்டேட்டஸ் அப்டேட்களில் உங்கள் லிங்க் ஷேரிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் செய்து வருகிறது. 

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான யூஸர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்அப், அவ்வப்போது புதுப்புது மாற்றங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் வாட்ஸ்அப் மூலம் 2 ஜிபி வரையிலான கோப்புகளை அனுப்பவும், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போல் மெசேஜ்களுக்கு இமோஜிக்கள் மூலமாக எதிர்வினை ஆற்றும் வசதியையும், காலில் 30 பேர் வரை இணைத்து பேசக்கூடிய வசதியையும் வழங்கியது. இத்துடன் குழு அட்மின்களுக்கு குழுவில் பகிரப்படும் எந்த ஒரு செய்தியையும் நீக்கும் சிறப்பு அதிகாரமும் வழங்கப்பட்டது.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் ஏற்கனவே இணையதளம், யூ-டியூப் போன்றவற்றின் இணைப்புகளை (Link) இணைக்கும் வசதி இடம் பெற்றுள்ளது. இதனை மேலும் பயனுள்ளதாக மாற்றும் விதமாக கடந்த மாதம் வாட்ஸ்அப் நிறுவனம் இணைப்பு முன்னோட்ட (PreView) விருப்பத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் வாட்ஸ்அப் யூஸர்கள் ஸ்டேட்டஸ் பிரிவில் உள்ள இணைப்பின் முன்னோட்டத்தை காணமுடியும்.

இந்த அம்சம் வாட்ஸ்அப் இன் iOS பதிப்பில் வெளியான நிலையில், எதிர்காலத்தில் ஆண்ட்ராய்டு மற்றும் டெஸ்க்டாப் பதிப்புகளுக்கு வெளியிடப்படும் எனக் கூறப்பட்டது. தற்போது வாட்ஸ்அப் அப்டேட் டிராக்கரான WaBetaInfo வெளியிட்டுள்ள தகவலின் படி, iOS இயங்குதளத்தில் சோதனை செய்யப்பட்ட இணைப்பு முன்னோட்ட (PreView) வசதியை அனைத்து ஆண்ட்ராய்டு யூஸர்களுக்கும் விரைவில் வாட்ஸ்அப் நிறுவனம் நீட்டிக்க உள்ளது.



WaBetaInfo வெளியிட்டுள்ள தகவலில், “வாட்ஸ்அப் இப்போது ஸ்டேட்டஸ் அப்டேட்டிற்கான சில மேம்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, உங்கள் நிலைப் புதுப்பிப்புக்கான (Status) லிங்கை பகிரும் போது, ​​சிறந்த இணைப்பு முன்னோட்டங்களை (Preview) உருவாக்கும் திறனை நிறுவனம் வளர்த்து வருவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது.

Also Read : மீண்டும் 18 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்..!

இருப்பினும், ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டாவில் டெக்ஸ்ட் வடிவ ஸ்டேட்டஸை பகிரும் போது, அதில் உள்ள இணைப்பை (Link) இணைப்பு முன்னோட்டத்தை காண முடியும் என்றாலும், அது சிறப்பான முன்னோட்டமாக இல்லாமல் இருந்து வந்தது. இந்த புதிய அப்டேட் மூலம் ஸ்டேட்டஸ் வியூ அனுபவம் சிறப்பாக அமைய வேண்டுமென வாட்ஸ்அப் நிறுவனம் முயற்சித்து வருகிறது.

Also Read : இரண்டு ஃபோன்களில் உங்கள் வாட்ஸ் அப் அக்கவுண்ட் -ஐ பயன்படுத்த ஆசையா இருக்கா - உங்களுக்கான தகவல் இது

வாட்ஸ்அப் ரிச் லிங்க் பிரிவ்யூ என்றால் என்ன?

ஸ்டேட்டஸ் அப்டேட்களில் வாட்ஸ்அப் இணைப்பு (link) பகிர்வு யூஸர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. இதில் லிங்கை தட்டினால் தவிர, அவற்றைப் பற்றிய தகவலைக் கண்டறிய முடியாது. தற்போது வாட்ஸ் அப் இதனை அப்டேட் செய்வதன் மூலம், வாட்ஸ்அப் இணைப்பு பகிர்வு (Link) இனி சுலபமான வேலையாக மாற உள்ளது. ஏனெனியில் இனி சென்டர் - ரிசீவர் இருவருமே இணைப்பை கிளிக்கை செய்யாமலேயே முன்னோட்டம் (Preview) மூலமாக அதில் உள்ள தகவல்களை காணமுடியும். தற்போது ஐபோனில் மட்டுமே உள்ள இந்த வசதி, வரும் காலத்தில் ஆண்ட்ராய்டு மற்றும் டெஸ்க்டாப்பிற்கான வாட்ஸ்அப் பீட்டாவிற்கு இதே அம்சம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also Read : பழைய போனை கொடுத்தால் புது ஸ்மார்ட்போன்... ஜியோவின் சூப்பர் எக்ஸ்சேன்ஜ் சலுகை

WaBetaInfo ஒரு ஸ்கிரீன்ஷாட்டையும் பகிர்ந்துள்ளது, அதில் தற்போதுள்ள உரை நிலை (Text Status) புதுப்பிப்புக்கும் எதிர்காலத்தில் வர உள்ள இணைப்பு முன்னோட்ட (PreView) விருப்பத்திற்கும் இடையிலான மிகப்பெரிய வித்தியாசம் காட்டப்பட்டுள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Android, Technology, Whatsapp Update

அடுத்த செய்தி