உஷார்... டிசம்பர் 31-க்கு பிறகு இந்தப் போனில் எல்லாம் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது!

வாட்ஸ்ஆப் செயலியை ஜியோபோன் 2 போன்று கைஓஎஸ் இயங்குதளப் பியூச்சர் போன்களிலும் பயன்படுத்த முடியும். ஆனால் விரைவில் இந்த வாட்ஸ்ஆப் செயலியை பல போன்களில் பயன்படுத்த முடியாது என்பதும் வருத்தமான செய்தி தான்.

Web Desk | news18
Updated: December 26, 2018, 1:28 PM IST
உஷார்... டிசம்பர் 31-க்கு பிறகு இந்தப் போனில் எல்லாம் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது!
கோப்புப் படம்
Web Desk | news18
Updated: December 26, 2018, 1:28 PM IST
இன்ஸ்டண்ட் தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்ஆப் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒன்று. உலகம் முழுவதும் இந்தச் செயலியை 100  கோடிக்கும் மேற்பட்டவர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

2018-ம் ஆண்டு வாட்ஸ்ஆப் மூலம் போலி செய்திகள் பரவப்படுகிறது, எனவே அதைத் தடை செய்ய வேண்டும் என்று எல்லாம் எதிர்ப்புகள் கிளம்பியது. அதைத் தடுக்க வாட்ஸ்ஆப் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்தும் இன்னும் மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

அது மட்டும் இல்லாமல் இந்தியாவில் வாட்ஸ்ஆப் செயலி வழியாகப் பணப் பரிமாற்றம் சேவையை அளிப்பதற்கான பணிகள் நிறைவடைந்தது. ஆனால் பணப் பரிமாற்ற தரவுகளை இந்தியாவிலேயே சேமிக்க வேண்டும் என்ற உத்தரவை அடுத்து, புதிய அலுவலகம் திறக்க முடிவு செய்தது மட்டும் இல்லாமல் இந்தியாவிற்கான தலைமை நிர்வாக அதிகாரியையும் தேர்வு செய்துள்ளனர். விரைவில் வாட்ஸ்ஆப் மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் வழங்கப்பட உள்ளது.

வாட்ஸ்ஆப் செயலியை ஜியோபோன் போன்ற கைஓஎஸ் இயங்குதளப் பியூச்சர் போன்களிலும் பயன்படுத்த முடியும். ஆனால் விரைவில் இந்த வாட்ஸ்ஆப் செயலியை பல போன்களில் பயன்படுத்த முடியாது என்பதுதான் வருத்தமான செய்தி.

நோக்கியா S40 போனில் 2018 டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு வாட்ஸ்ஆப் செயலி இயங்காது. மேலும் 2020 பிப்ரவரி 1-ம் தேதிக்குப் பிறகு ஐபோன் 7 மற்றும் ஆண்டிராய்டு 2.3.7 இயங்குதளப் போன்களிலும் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது.

சென்ற ஆண்டு 2017-டிசம்பர் 31 முதல் விண்டோஸ் போன் 8.0, பிளாக்பெரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெரி 10 போன்ற போன்களுக்கான ஆதரவையும் வாட்ஸ்ஆப் நிறுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: நாட்டின் மிக நீளமான இரண்டடுக்கு பாலம் திறப்பு
Loading...
First published: December 26, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...