• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • வாட்ஸ் அப் சாட்டில் ₹ குறியீடு அறிமுகம்.. பணம் அனுப்ப ஷார்ட் கட்

வாட்ஸ் அப் சாட்டில் ₹ குறியீடு அறிமுகம்.. பணம் அனுப்ப ஷார்ட் கட்

வாட்ஸ் அப் ₹ குறியீடு

வாட்ஸ் அப் ₹ குறியீடு

வாட்ஸ் அப் கேமரா மூலம் கியூ ஆர்  கோட் களை(QR Code)  பயனாளர்கள் ஸ்கேன் செய்ய முடியும் என்றும் வாட்ஸ் அப் அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள 2 கோடிக்கும் அதிகமான கடைகளில் பயனாளர்கள் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.

  • Share this:
    பிரபல சமூக ஊடகமான வாட்ஸ் அப் தனது பயனர்களுக்கு பணபரிவர்த்தனையை எளிதாக்கும் விதமாக  ரூபாய் குறியீடான ₹ -யை தனது குறுஞ்செய்தி சேவையில் இணைத்துள்ளது.

    சர்வதேச அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ் அப் உள்ளது.  கடந்த 2009ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளிவந்த இந்த செயலியை 2014ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் கையக்கப்படுத்தியது. தற்போது 200 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

    குறுஞ்செய்தி சேவை என்பதை தாண்டி பணபரிவர்த்தனை சேவையையும் வாட்ஸ் அப் தொடங்கியுள்ளது.  அந்த வகையில் இந்தியாவில் உள்ள பயனர்கள் வாட்ஸ் அப் மூலம் பண பரிவர்த்தனையை எளிதாக மேற்கொள்ளும் விதமாக இந்தியாவின் ரூபாய் சின்னமான  ₹ என்பதை குறுஞ்செய்தி சேவையில் வாட்ஸ் அப் இணைத்துள்ளது.


    இதேபோல், வாட்ஸ் அப் கேமரா மூலம் கியூ ஆர்  கோட் களை(QR Code)  பயனாளர்கள் ஸ்கேன் செய்ய முடியும் என்றும் வாட்ஸ் அப் அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள 2 கோடிக்கும் அதிகமான கடைகளில் பயனாளர்கள் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.

    இந்த புதிய அப்டேட்கள் மூலம் வாட்ஸ்அப்பில் பணம் செலுத்துவது மிகவும் எளிதாக மாறியுள்ளது.   விரைவில் இந்தியாவில் உள்ள அனைத்து வாட்ஸ் அப் பயனாளர்களும்   ₹ குறியீடு மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும் என்று வாட்ஸ் அப் அறிவித்துள்ளது.

    சர்வதேச ஃபின்டெக் விழாவில் இந்தியாவுக்கான வாட்ஸ் அப் பணப் பரிவர்த்தனை பிரிவின் இயக்குநர் மனேஷ் மகாத்மே இது தொடர்பாக பேசுகையில்,  தங்கள் தொலைபேசியின் வழியே  பணம் செலுத்தும் முறையை வாடிக்கையாளர்கள் மாற்ற வேண்டிய அவசியமில்லாமல் இருப்பதே உண்மையான சேர்க்கை என்று நாங்கள் நம்புகிறோம். ஒவ்வொரு நாளும் மில்லியன் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் செய்திகளை அனுப்புகிறார்கள். வாட்ஸ்அப்பில் பல நிமிடங்களை  செலவிடுகிறார்கள்.  படங்களை எடுத்து  அனுப்பவும் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகிறார்கள். ஒரு செய்தியை அனுப்புவது போல  பணம் அனுப்புவதை  எளிமை ஆக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.

    டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் முன்னேறும் இந்தியா:

    இந்தியாவுக்கான டிஜிட்டல் பண பரிவர்த்தனை குறித்து பேசிய அவர், “கடந்த தசாப்தத்தின் ஸ்மார்ட்போன்கள், தரவு மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் ஆகியவை  இந்திய நிதிதொழில்நுட்ப ( fintech) புரட்சியின்  அடித்தள பங்களிப்பாளர்கள். இந்தியாவின் தனது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பயணத்தின் தொடக்கத்தில் உள்ளது.  80 சதவீதத்திற்கும் அதிகமான நுகர்வோர்கள் தங்களது செலவீனத்தை பணமாகவே மேற்கொள்கின்றனர்.

    இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்கு இன்னும் கிராமமாகவே உள்ளன. வருங்காலத்தில் டிஜிட்டல்  கண்டுபிடிப்புகளின் நன்மைகளை அவை காணும். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை பொறுத்தவரை கிராமப்புற மற்றும் நகர்ப்புற பயனர்களுக்கு ஒரே மாதிரியான, தொடர்புபடுத்தக்கூடிய மற்றும் எளிதாக அணுகக்கூடிய தீர்வே இந்தியாவுக்கு தேவை. வாட்ஸ் அப் போன்ற அவர்கள் நம்பக் கூடிய செயலிகள், அவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: