Home /News /technology /

உங்கள் தனி விவரங்கள் மற்றும் வங்கி விவரங்களை இந்த வாட்ஸ் அப் அக்கவுண்ட்கள் திருட கூடும் - ஜாக்கிரதை!

உங்கள் தனி விவரங்கள் மற்றும் வங்கி விவரங்களை இந்த வாட்ஸ் அப் அக்கவுண்ட்கள் திருட கூடும் - ஜாக்கிரதை!

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

Whatsapp Hacking | உங்களை ஏமாற்றுவதற்காக போலியான பேட்ஜ் (வெரிஃபைடு டிக்) ஒன்றை சிலர் பயன்படுத்துகிறார்கள்!

உங்கள் தனி விவரங்கள் மற்றும் வங்கி விவரங்களை திருட கூடிய வாட்ஸ் அப் ஸ்கேம் ஒன்று உலா வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. WABetalInfo நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, போலியான சப்போர்ட் அக்கவுண்ட்களை பயன்படுத்தி உங்கள் தனி விவரங்கள் மற்றும் வங்கி சார்ந்த விவரங்கள், அனைத்து கார்டு விவரங்கள் போன்றவற்றை மோசடியாளர்கள் திருடக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்-பில் சப்போர்ட் அக்கவுண்ட் ஸ்கேம் எப்படி நடைபெறுகிறது.

வாட்ஸ் அப் அக்கவுண்ட் போலவே தோற்றம் அளிக்கக் கூடிய போலி சப்போர்ட் அக்கவுண்ட் ஒன்றை மோசடியாளர்கள் முதலில் உருவாக்குகின்றனர். இதன் மீது உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக குறிப்பிட்ட புரொபைல் இமேஜ் பயன்படுத்தி வெரிஃபைடு பேட்ஜ் போல காண்பிக்கின்றனர்.

உங்கள் வாட்ஸ் அப் அக்கவுண்ட் நிறுத்தப்பட இருப்பதாகக் கூறி, அதை தடுப்பதற்கு சில சுய விவரங்களை தர வேண்டும் என்று உங்களை அணுகுவார்கள். உதாரணத்திற்கு உங்கள் வாட்ஸ் அப் அக்கவுண்ட் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்றால் உங்கள் வங்கி கார்டு விவரங்களை தர வேண்டும் என்று கேட்பார்கள். அதை நீங்கள் கொடுக்கும் பட்சத்தில், உங்கள் வாட்ஸ் அப் அக்கவுண்ட்-ஐ தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்றால் 6 இலக்க பின் நம்பரை தெரிவிக்க வேண்டும் என கேட்பார்கள். இப்படியாக மோசடியை அரங்கேற்றம் செய்கின்றனர்.

மோசடியில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

வாட்ஸ் அப் ஒருபோதும் உங்கள் வங்கி விவரங்களை கேட்காது என்பதை நீங்கள் மனதில் வைக்க வேண்டும். குறிப்பாக 6 இலக்க பின் நம்பர் அல்லது வேறெந்த சிறப்புத் தகவல்களையும் வாட்ஸ் அப் கேட்காது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒருவேளை இந்த விவரங்களை ஏதேனும் ஒரு வாட்ஸ் அப் அக்கவுண்ட் உங்களிடம் கேட்கிறது என்றால், அது போலியான அக்கவுண்ட் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ஒரிஜினல் பேட்ஜ் எப்படி இருக்கும் :

உங்களை ஏமாற்றுவதற்காக போலியான பேட்ஜ் (வெரிஃபைடு டிக்) ஒன்றை சிலர் பயன்படுத்துகிறார்கள் அல்லவா? அவர்களை எப்படி தெரிந்து கொள்வது? பொதுவாக பேட்ஜ் என்பது புரொபைல் பெயருக்கு அடுத்த படியாக இருக்கும். ஆனால், புரொபைல் படத்திலேயே பேட்ஜ் இருந்தால் அது போலியானதாகும்.

போலியான வாட்ஸ் அப் சப்போர்ட் அக்கவுண்ட் ஒன்றில் இருந்து உங்களுக்கு மெசேஜ் வந்தது என்றால், உடனடியாக அதுகுறித்து நீங்கள் சாட் இன்ஃபோ பிரிவுக்கு சென்று புகார் அளிக்க வேண்டும்.

இதை செய்யும்போது உங்கள் வாட்ஸ் அப்-பில் உள்ள கடைசி 5 சாட் விவரங்களை வாட்ஸ் அப் மாடரேஷன் டீம் எடுத்துக் கொள்ளும். அதில், மோசடியான விவாதங்கள் இருப்பது தெரிய வந்தால், அந்த அக்கவுண்ட்களை அவர்கள் நிறுத்தி வைத்து விடுவார்கள்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Technology, WhatsApp

அடுத்த செய்தி