இனி வாட்ஸ்அப்பில் ஒரே நேரத்தில் முப்பது ஆடியோ அனுப்பலாம்!

வாட்ஸ் அப் தனது புது அம்சங்கள் மூலம் தவறான தகவல் பரிமாற்றங்களைக் குறைத்துள்ளது.

இனி வாட்ஸ்அப்பில் ஒரே நேரத்தில் முப்பது ஆடியோ அனுப்பலாம்!
வாட்ஸ் அப்
  • News18
  • Last Updated: April 11, 2019, 3:53 PM IST
  • Share this:
வாட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் ஒரு ஆடியோ மட்டும்தான் இதுவரை அனுப்ப முடியும். ஆனால் தற்போது புது அம்சமாக ஒரே நேரத்தில் முப்பது ஆடியோவை அனுப்ப முடியும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.


வாட்ஸ் அப் தனது அப்ளிகேஷன் அம்சங்களில் புது புது மாற்றங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் ஒன்றாக நேற்று இந்தப் ஆடியோ தகவல் பரிமாற்றம் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கான முன்னோட்டத்தைக் கடந்த ஜனவரி மாதமே வாட்ஸ்அப் தொடங்கியது. தற்போதுதான் அதன் சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்து அறிமுகம் செய்துள்ளது.

அதேபோல் நீங்கள் ஆடியோ அனுப்புவதற்கு முன் அதைச் சோதித்துப்பார்க்க 'Audio Picker' அம்சத்தை இணைத்துள்ளது.  இந்த அம்சமானது வாட்ஸ்அப்-ன் 2.19.89 பீட்டா அப்டேட்டுடன் உருவாக்கப்பட்டுள்ளது.


வாட்ஸ்ஆப்பின் இந்த புதிய அப்டேட் ஐபாடிலும் கிடைக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.


வாட்ஸ்அப் அன்மையில் வெளியிட்ட புது அம்சம் மூலமாக தவறான தகவல் பரிமாற்றங்களைக் குறைத்துள்ளது. ஒரு தகவல்அதிகமாகவோ, அடிக்கடியோ பரிமாற்றம் செய்யப்பட்டால் அதன் பயனர்களால் அந்தச் செய்தி எத்தனை முறை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அதை வைத்து பயனர் அந்தத் தகவலின் நம்பகத் தன்மையைக் கேள்வி கேட்க முடியும்.


இதற்கு முன் வாட்ஸ் அப்பில் ஒரு Forward message-யை எத்தனை நபர்களுக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம் என்ற அம்சம் இருந்தது. தற்போது இந்தியாவில் அதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஒரு மெசேஜை ஐந்து முறை மட்டுமே அனுப்ப முடியும் என நடைமுறைப்படுத்தியது.

மேலும் பார்க்க:
First published: April 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்