• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • வாட்ஸ்அப்பில் புதிய அசத்தல் அப்டேட் அறிமுகம்..!

வாட்ஸ்அப்பில் புதிய அசத்தல் அப்டேட் அறிமுகம்..!

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

டெஸ்க்டாப் App-ற்காக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சத்தை வாட்ஸ்அப் தற்போது சேர்த்துள்ளது. வாட்ஸ்அப் தனது டெஸ்க்டாப் App-ல் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதிகளை புதிதாக சேர்த்துள்ளது. இந்த புதிய வீடியோ கால் அம்சம் போர்ட்ரைட் மற்றும் லேண்ட்ஸ்கேப் என இரு நிலைகளையும் சப்போர்ட் செய்யும் என்றும் வாட்ஸ்அப் குறிப்பிட்டுள்ளது.

  • Share this:
டெஸ்க்டாப் App-ற்காக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சத்தை வாட்ஸ்அப் தற்போது சேர்த்துள்ளது. வாட்ஸ்அப் தனது டெஸ்க்டாப் App-ல் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதிகளை புதிதாக சேர்த்துள்ளது. இந்த புதிய வீடியோ கால் அம்சம் போர்ட்ரைட் மற்றும் லேண்ட்ஸ்கேப் என இரு நிலைகளையும் சப்போர்ட் செய்யும் என்றும் வாட்ஸ்அப் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் விண்டோஸ் பிசி மற்றும் ஆப்பிளின் மேக்கிற்கான டெஸ்க்டாப் பயன்பாட்டில் வீடியோ மற்றும் வாய்ஸ் அழைப்புகளுக்கான சப்போர்ட்டை வாட்ஸ்அப் தற்போது அதிகாரப்பூர்வமாக சேர்த்துள்ளது.

வாட்ஸ்அப் செய்துள்ள இந்த புதிய அப்டேட் மூலம் ஒவ்வொரு முறையும் தங்கள் வாட்ஸ்அப்பிற்கு கால் வரும் நேரத்தில், கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்திருக்கும் எண்ணற்ற மக்களுக்கு ஓடி சென்று மொபைலை எடுக்க வேண்டிய நிர்பந்தத்தை தடுத்துள்ளது. ஆனால் இந்த புதிய வசதியானது குரூப் கால்களுக்கு தரப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/WhatsApp/status/1367385075881443336

மொபைல் App-களில் வழங்கியுள்ளதை போலவே டெஸ்க்டாப் App-களுக்கான வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களின் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்த எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷன்(end-to-end encryption) பாதுகாப்பு வழங்குவதாக கூறியுள்ளது நிறுவனம். போர்ட்ரைட் மற்றும் லேண்ட்ஸ்கேப் என இரண்டிலுமே வீடியோ அழைப்புகள் தடையின்றி செயல்படும். மேலும் டெஸ்க்டாப் கிளையன்ட் எப்போதும் மேலே இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.

எனவே நீங்கள் பிரவுசரில் பிசியாக இருந்தாலும் உங்கள் வீடியோ அரட்டைகளை ஒருபோதும் இழக்க மாட்டீர்கள் என்று கூறி உள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். டெஸ்க்டாப் மூலம் பெரிய ஸ்கிரீனில் வீடியோ கால் பேசுவது என்பது சக ஊழியர்களுடன் நீங்கள் வேலை பார்ப்பதையும், குடும்ப உறுப்பினர்களை தெளிவாக பார்த்து மகிழவும், பேசும்போது உங்கள் கைகளுக்கு ஓய்வு கொடுக்கவும் உதவுகிறது என்று வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது.

புதிய அம்சத்தை கடந்த ஆண்டின் பிற்பகுதியில் டெஸ்க்டாப்பில் ஒரு சிறிய யூசர் குரூப்களை தேர்வு செய்து சோதிக்க தொடங்கிய வாட்ஸ்அப் நிறுவனம், சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது இந்த புதிய அப்டேட்டை டெஸ்க்டாப் App யூசர்களுக்காக அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப்பின் டெஸ்க்டாப் கிளையண்டைப் பயன்படுத்தும் மில்லியன் கணக்கான மக்களுக்கு பெரிதும் கைகொடுக்கும். இதனால் டெஸ்க்டாப் பயன்படுத்தும் ஒருவர் மற்றொருவருடன் வீடியோ கால் பேச இனி ஜூம் அல்லது கூகுள் மீட்டை நாட வேண்டிய அவசியம் இல்லை.

புதிய வீடியோ அழைப்பு அம்சத்தைப் பயன்படுத்த, யூசர்கள் மேக் அல்லது பிசிகளில் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் App-ஐ நிறுவ வேண்டும், இதற்கு நீங்கள் ஏற்கனவே மொபைலில் வாட்ஸ்அப் யூசராக இருக்க வேண்டும். வாட்ஸ்அப் வலைத்தளத்திலிருந்து டெஸ்க்டாப் App-ஐ நிறுவிய பின், யூசர்கள் உள்நுழைய QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். மேலும் இந்த புதிய வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சம் வாட்ஸ்அப் வெப்பிற்கு அறிமுகப்படுத்தப்படவில்லை என்பதையும் அந்நிறுவனம் தெளிவுபடுத்தி உள்ளது. முன்னதாக ஃபேஸ்புக் கடந்த ஆண்டு தனது மெசஞ்சர் சேவைக்காக பிரத்யேக டெஸ்க்டாப் App-ஐ அறிமுகப்படுத்தியது. இது குரூப் வீடியோ கால்களை சப்போர்ட் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ram Sankar
First published: