• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • தனியுரிமை கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.. Whatsapp நிறுவனம் அறிவிப்பு..

தனியுரிமை கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.. Whatsapp நிறுவனம் அறிவிப்பு..

கோப்புப் படம்

கோப்புப் படம்

உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த நுகர்வோர் ஆப்பில் தரவு பாதுகாப்பு மற்றும் தகவல்தொடர்பு தனியுரிமையை எந்த வகையிலும் சமரசம் செய்யப்படவில்லை என்று வாட்ஸ் அப் நிறுவனம் நிறுவனம் யூசர்களிடம் தெரிவித்துள்ளது.

  • Share this:
வாட்ஸ்அப் அதன் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை குறித்து பயனர்களுக்கு தெரிவிக்க புதிய இன்-ஆப் பேனரைச் சேர்க்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனம் அதன் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வாட்ஸ்அப் தனது தனியுரிமைக் கொள்கையை அதனை பயன்படுத்துபவர்களுக்கு எவ்வாறு சிறப்பாக வெளிப்படுத்தியிருக்க முடியும் என்பதை இந்த அம்சம் பிரதிபலிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. அதாவது இன்-ஆப் பேனர் மூலம் வாட்ஸ்அப் யூசர்களுக்கு அதன் தனியுரிமை கொள்கைகளை இன்னும் தெளிவாகக் காண்பிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. 

வாட்ஸ்அப் அதன் தனியுரிமைக் கொள்கைகள் மற்றும் சொந்த நிறுவனமான பேஸ்புக்குடன் தரவைப் பகிரும் தனது நிலைப்பாடு குறித்த தனது விளக்கம் அளித்துள்ளது. மேலும் உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த நுகர்வோர் சாட் செயலியில் தரவு பாதுகாப்பு மற்றும் தகவல்தொடர்பு தனியுரிமையை எந்த வகையிலும் சமரசம் செய்யப்படவில்லை என்று வாட்ஸ் அப் நிறுவனம் நிறுவனம் யூசர்களிடம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து அந்த பதிவில், ``தனியுரிமை கொள்கை குறித்த அப்டேட்டை வெளியிட்ட பிறகு அதனை மக்கள் தவறாக புரிந்து கொண்டதற்கான விளைவுகளை நாங்கள் சந்தித்தோம். மேலும் யூசர்களின் எந்தவொரு குழப்பத்தையும் தீர்க்க நாங்கள் தொடர்ந்து கடுமையாக உழைக்கிறோம். குறிப்பாக வாட்ஸ்அப்பில் ஒரு வணிகத்துடன் சாட் செய்ய அல்லது ஷாப்பிங் செய்வதற்கான புதிய வழிகளை நாங்கள் உருவாக்குகிறோம் என்பதை உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்திறோம். அவை முற்றிலும் விருப்பமானவை.  குறிப்பாக உங்கள் தனிப்பட்ட செய்திகள் எப்போதுமே எண்டு-டு-எண்டு என்க்ரிப்ஷன் செய்யப்படும் என்பதால் வாட்ஸ்அப்பால் அவற்றைப் படிக்கவோ கேட்கவோ முடியாது" என விளக்கம் அளித்துள்ளது.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் புதிய இன்-ஆப் பேனரை அதன் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையை யூசர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான வழிகளாகப் பயன்படுத்துவதோடு கவலைகளைத் தீர்க்கவும், தீர்வு காணவும் கூடுதல் தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், எந்த வகையிலும் தரவு சேகரிப்பிலிருந்து விலகுவதற்கான விருப்பத்தை யூசர்களுக்கு இந்த அப்டேட் வழங்கவில்லை. தெளிவாக கூற வேண்டுமானால், நீங்கள் தொடர்ந்து வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த விரும்பும் பட்சத்தில், மே 15 என்ற புதிய காலக்கெடுவிற்குள் நீங்கள் அதன் சேவை விதிமுறைகளையும், தனியுரிமைக் கொள்கையையும் ஏற்க வேண்டும். வாட்ஸ்அப் வழங்கும் அடிப்படை தகவல் என்னவென்றால், அதன் தனியுரிமைக் கொள்கை எந்த வகையிலும் தரவு பாதுகாப்பை சமரசம் செய்யாது என்பது தான். 

வாட்ஸ்அப் யூசர்கள் மற்றும் செயலியின் தரவு சேகரிப்பு நடைமுறைகள் பெரும்பாலானவை வணிகங்களுக்கு பொருந்தும். மேலும் வணிக நடவடிக்கைகளை சிறந்ததாகவும், ஒத்திசைவானதாகவும் மாற்றுவதற்காக புதிய அம்சம் இயக்கப்படுகிறது. மேலும் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, “ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்கள் ஒரு வணிகத்துடன் வாட்ஸ்அப் சாட்டை தொடங்குகிறார்கள். ஏனெனில் வணிகம் தொடர்பான தொலைபேசி அழைப்பு அல்லது மின்னஞ்சல்களைப் பரிமாறிக் கொள்வதை விட இது மிகவும் எளிதான வழி. வாட்ஸ்அப்பில் வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்க வணிகங்களிடம் இருந்து நாங்கள் வசூலிக்கிறோம். 

மக்களிடம் இருந்து அல்ல. அதிலும் சில ஷாப்பிங் அம்சங்கள் பேஸ்புக்கை உள்ளடக்கியது. இதனால் வணிகங்கள் செயலி முழுவதும் தங்கள் சரக்குகளை நிர்வகிக்க முடியும். இதுதவிர நாங்கள் கூடுதல் தகவல்களை நேரடியாக வாட்ஸ்அப்பில் காண்பிப்போம். எனவே மக்கள் வணிகங்களுடன் ஈடுபட விரும்புகிறார்களா இல்லையா என்பதை தேர்வு செய்துக் கொள்ளலாம், ”என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கிற்குச் சொந்தமான சேவை மற்றும் அதன் புதிய தனியுரிமைக் கொள்கைக்காக உலகெங்கிலும் சில சிக்கலை எதிர்கொண்டதால், கடந்த சில வாரங்களாக முக்கியத்துவம் வாய்ந்த பிற போட்டி செய்தியிடல் செயலிகளை வாட்ஸ்அப் சிறிதளவு ஆராயத் தொடங்கியது. 

அனைத்து சாட்களிலும் இயல்புநிலை அல்லது நிலையான அம்சமாக எண்டு-டு-எண்டு என்க்ரிப்ஷனை வழங்காததால், மற்ற செயலிகளை விட டெலிகிராமை அதிகம் ஆராய்ந்தது. மேலும் இது குறித்து தனது பதிவில் வாட்ஸ்அப் குறிப்பிட்டதாவது, "எங்கள் போட்டியாளர்களில் சிலர் மக்கள் செய்திகளைப் பார்க்க முடியாது என்று கூறி தப்பிக்க முயற்சிப்பதை நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். ஒரு ஆப் இயல்பாகவே எண்டு-டு-எண்டு என்க்ரிப்ஷனை வழங்கவில்லை என்றால், அவர்கள் உங்கள் செய்திகளைப் படிக்க முடியும் என்று அர்த்தம்," என கூறியிருந்தது. நம்பகத்தன்மைக்கான வர்த்தக பரிமாற்றத்திற்கு யூசர்கள் “சில வரையறுக்கப்பட்ட தரவை” பகிர்வதில் சரி என்று நம்புவதாகவும் தெரிகிறது என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் தனியுரிமை கொள்கை தொடர்பான வழக்கில், இந்தியாவுடன் ஒப்பிடுகையில் அதன் பொருந்தக்கூடிய தனியுரிமைக் கொள்கை ஐரோப்பாவில் ஏன் வேறுபட்டது என்பதை விளக்க வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவில் வாட்ஸ்அப்பின் சட்ட பிரதிநிதி உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார். அதில், ஐரோப்பிய பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை (IDPR) பிராந்தியத்தில் வாட்ஸ்அப் அதன் கொள்கையைப் பயன்படுத்துவதைத் தடுத்தது. 

அதேபோல இந்தியாவின் தரவு பாதுகாப்பு மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டால், வாட்ஸ்அப் அதற்கு கட்டுப்பட்டு  அதனுடன் இணங்கும் என வழக்கறிஞர் கபில் சிபல் நீதிமன்றத்தில் வாதிட்டார். எவ்வாறாயினும், அவரின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், நான்கு வாரங்களுக்குள் ஒரு பதிலை வெளியிடுமாறு நிறுவனத்தை கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. உலகெங்கிலும் பின்னடைவை எதிர்கொண்ட பின்னர், புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடுவை பிப்ரவரி 8-ல் இருந்து மே 15-க்கு வாட்ஸ்அப் ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து தற்போது நடைமுறையில் உள்ள தரவு சேகரிப்புக் கொள்கையிலிருந்து வாட்ஸ்அப் விலகாது என்பதை தெளிவுபடுத்துகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ram Sankar
First published: