இன்றைய டிஜிட்டல் காலத்தில் நம்மில் பலரும் வருடத்திற்கு ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்குகிறோம். இதற்கு முக்கிய காரணம், மிக குறுகிய காலத்திலேயே ஸ்மார்ட்போன்களில் வரக்கூடிய மாற்றங்கள் தான். முன்பெல்லாம் 4ஜிபி RAM கொண்ட மொபைலே பெரிதாக கருதி வந்தனர். ஆனால், தற்போது 8 ஜிபி, 12 ஜிபி RAM உள்ள மொபைல் தான் வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர்.
இப்படி ஒவ்வொரு வசதிகளும் மாறி வர, புதிய மொபைலை வாங்கி விடுகிறோம். ஆனால், பழைய மொபைலில் இருந்து புது மொபைலுக்கு மாறும்போது சில விஷயங்களை நாம் கவனிப்பது கிடையாது. எனவே, நீங்கள் பழைய மொபைலில் இருந்து புது மொபைலுக்கு மாறும்போது என்னென்ன விஷயங்கள் செய்ய வேண்டும் என்பதை பற்றி இனி பார்ப்போம்.
டேட்டா பேக்அப் : பழைய மொபைலை ஃபேக்டரி செட்டிங்ஸ் செய்யாமல் தூக்கி போடுவது மிக தவறான விஷயமாகும். புதிய மொபைலுக்கு மாறுவதற்கு முன், உங்கள் பழைய மொபைலில் சிலவற்றை செய்தாக வேண்டும். இல்லையெனில், அதை எளிதாக ஹேக் செய்ய கூடும். எனவே ஃபேக்டரி செட்டிங்ஸ் செய்துவிட்டால் படங்கள், வீடியோக்கள் மற்றும் முக்கியமான ஆவணங்களின் வடிவத்தில் உங்கள் விலையுயர்ந்த நினைவுகள் உட்பட அனைத்து தகவல்களும் மறைந்துவிடும்.
ஆதலால், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது டேட்டா பேக்அப் தான். உங்களின் டேட்டாக்கள் அனைத்தையும் பேக்கப் எடுக்க, கூகுள் போட்டோஸ், ஐ-கிளவுடு, ஐ-கிளவுடு பேக் அப் போன்ற வசதிகள் உதவும். ஒரு வேளை இவற்றில் போதுமான ஸ்டோரேஜ் இல்லையென்றால் ஒன் டிரைவ்,டிராப் பாக்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.
Also Read : உங்க ஃபேஸ்புக் அக்கவுண்ட் 'ஹேக்' செய்து விட்டார்களா? உடனே Recover செய்வது எப்படி?
பாஸ்வேர்டுகள் : உங்கள் டேட்டாக்களை பாதுகாப்பாக மாற்றியதும் அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது உங்களின் பாஸ்வேர்டை நிர்வகிப்பது தான். கான்டெக்ட்ஸ் மற்றும் மெசேஞ் பெறுவதற்கான வழக்கமான அம்சங்களைத் தவிர, பல பயன்பாடுகளைப் பயன்படுத்தலாம். வாட்ஸ்ஆப், இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களின் பாஸ்வேர்டு முதல் பேடிஎம், கூகுள் பே போன்ற பேமெண்ட் ஆப்ஸ் வரை, நாம் பொதுவாகப் பயன்படுத்தும் பல ஆப்ஸ்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டு இருக்கும். இதற்கு பாஸ்வேர்டுகளை நிர்வகிக்க உதவும் LastPass மற்றும் ZohoVault ஆகிய வசதிகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
லாப் அவுட் : உங்கள் யூசர் பெயர்கள் மற்றும் பாஸ்வேடுகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்றவுடன், எல்லா பயன்பாடுகளிலிருந்தும் வெளியேறவும். அதாவது அவற்றை லாக் அவுட் செய்ய வேண்டும். முக்கியமாக உங்கள் ஜிமெயில் கணக்கிலிருந்து வெளியேற மறக்காதீர்கள்.
மற்ற சாதனங்களுடன் இணைக்கவும் : உங்கள் பழைய ஃபோனை அகற்றிவிட்ட பிறகு ஸ்பீக்கர், ஆப்பிள் வாட்சு போன்ற பிற சாதனங்களுடனும் அதை இணைக்க வேண்டும். உங்கள் பழைய மொபைலுக்கு விடை தரும் முன்னர், ஃபேக்டரி செட்டிங்ஸ் செய்ய வேண்டும். இதை பார்மட்டிங் அல்லது ஹார்டு ரீசெட் என்றும் கூறுவார்கள். இது படங்கள், வீடியோக்கள், ஆப்ஸ், டாக்ஸ் போன்ற உங்கள் மொபைலிலிருந்து எல்லாத் டேட்டாவையும் அழித்துவிடும். நீங்கள் அந்த மொபைலை வாங்கியபோது முன்பு இருந்தவை மட்டுமே அதில் இப்போது மீதம் இருக்கும்.
எனவே உங்கள் புதிய மொபைலைப் பயன்படுத்துவதற்கு முன் பழைய மொபைலில் உள்ளவற்றை அகற்றுவதற்கு மேலே உள்ள குறிப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.