• HOME
 • »
 • NEWS
 • »
 • technology
 • »
 • ரூ.25000 க்கு கீழேயுள்ள ஸ்மார்ட்ஃபோன்களில் OPPO F11 Pro சிறந்த இடம் பிடித்துள்ளது எப்படி?

ரூ.25000 க்கு கீழேயுள்ள ஸ்மார்ட்ஃபோன்களில் OPPO F11 Pro சிறந்த இடம் பிடித்துள்ளது எப்படி?

ஓப்போ F11 Pro

ஓப்போ F11 Pro

சொகுசான உயர் தர அனுபவத்தை, எளிதான விலையில் பெறலாம்.

 • Last Updated :
 • Share this:
  அற்புதமான தரமுடைய கேமராவுடன், குறைவான ஒளியுடைய இடங்களில் சிறந்த புகைப்படம் எடுக்கவும் அதே நேரத்தில் பேட்டரி விஷயத்தில் உங்களைக் காலை வாராத ஒரு போன் வேண்டுமெனில், இந்த தொழிற்பிரிவில் சிறந்த இடத்தை பிடித்துள்ள ஒன்றை உங்களுக்கு நாங்கள் வழங்குகிறோம் - OPPO F11 Pro.

  இவை அனைத்தையும் ரூ. 25,000 க்கு குறைவான விலையில் நீங்கள் பெற முடியும் என்று நான் சொன்னால், நீங்கள் கண்டிப்பாக ஆச்சரியப்படுவீர்கள்! OPPO வின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்ஃபோனின் விலையான ரூ. 24,999 ஐ கேள்விப்பட்டு அனைவரும் வியப்படைகின்றனர். இதை நம்ப சிரமமாகத் தானே உள்ளது? OPPO F11 Pro வில் உள்ள அம்சங்களால் அது யூசர்களின் டாப் தேர்வில் உள்ள போனாக இருந்து வருகிறது.அந்த அம்சங்களை இங்கு பட்டியலிடுகிறோம்.

  1. கேமரா: இன்று, அனைவருமே ஒரு DSLR ஐ தங்களது பாக்கெட்டுக்குள் வைத்து செல்லுமிடம் எங்கும் கொண்டு செல்ல விரும்புகின்றனர். OPPO F11 Pro அதனை 48MP கேமராவின் மூலம் அந்த தேவையை நிறைவு செய்கிறது. தனித்துவமான மேப்பிங் கர்வ் மற்றும் பிக்சல்-கிரேட் கலர் மேப்பிங் அல்காரித்தம், யூசர்களுக்கு துல்லியமான மற்றும் தெளிவான படங்களைத் தருகிறது. OPPO வின் தனித்துவமான AI இஞ்சின் மற்றும் அல்ட்ரா-க்ளியர் இஞ்சின் ஏற்கனவே படத்தை பன்முகங்களில் அதனை ஆப்டிமைஸ் செய்து தெள்ளத்தெளிவான போர்ட்ரெயிட் எஃபெக்டில் தருகின்றது.

  ஓப்போ F11 Pro


  அதன் மோட்டரைஸ் செய்யப்பட்டு உயரும் கேமரா வேகமாக ஃபோக்கஸ் செய்கிறது மற்றும் படங்கள் பகல் அல்லது இரவு என எப்போது எடுக்கப்பட்டாலும் பளிச்சென்று தெளிவாக காட்சியளிக்கின்றன. போனின் ஸ்கிரீன் ஃப்ளாஷ் செயல்பாட்டின் மூலம் குறைவான ஒளியிலும் 16 MP சென்சர் கேமராவின் மோட்டரைஸ்ட் திறனால் உயர்த்தப்படும் கேமராவால் அற்புதமான படங்களை எடுக்க முடியும். உயர்த்தப்படக் கூடிய கேமரா நடுவில் அமையப்பட்டிருப்பதால் எந்த வித இடைஞ்சலும் இன்றி செல்பீக்களை இயல்பாக எடுக்க முடியும். முன்பக்க கேமரா ஒளி புகும் வகையில் வட்ட வளைவு வடிவமைப்பு கொண்டுள்ளதால், ஹேண்ட் செட் தன்னிகரற்ற வடிவில் காட்சியளிக்கின்றது. இந்த தொழிற்பிரிவிலேயே நேனோ பிரிண்டிங் தொழில் நுட்பம் கொண்ட முதல் போன் OPPO ஆகும். இது இங்க்-வாஷ் பெயிண்டிங் எஃபெக்ட் கொண்டதாகும்.

  அதிகம் பேசப்படும் போர்ட்ரெயிட் மோட் இதில் உள்ளதால், உங்களது படங்கள் புரோஃபெஷனல் டச் கொண்டிருக்கும். அது மட்டுமல்ல, உங்களது போனில் உள்ள பியூட்டி அம்சம் மூலம் படங்களை மேலும் அழகாக்கி, சமூக வலைத்தளங்களில் தூள் கிளப்பலாம்.

  2. பேட்டரி காலம்: இன்றைய வேகமான வாழ்வில், நீங்கள் நினைப்பதை எல்லாம் செய்து முடிக்க கால அவகாசம் குறைவு. இதில் உங்களது போனில் பேட்டரி வேறு தீர்ந்து விட்டால் நிலைமை இன்னும் மோசம். வேகமான டவுன்லோட் மற்றும் குறைவான சார்ஜிங் நேரம் கொண்ட OPPO F11 Pro ஸ்மார்ட்போன், உங்களுக்கு அதிக பொழுதுபோக்கு நேரத்தை தருகிறது. அது சிறந்த பேட்டரியை 4000 mAh திறனுடன் வேகமாக சார்ஜ் ஆகக் கூடிய VOOC 3.0 டெக்னாலஜியை கொண்டுள்ளது. கேமராவை பயன்படுத்தும் போதும் OPPO F11 Pro 15.5 மணி நேர பேட்டரி லைஃப் தருவதை நாங்கள் சோதித்து உணர்ந்துள்ளோம். அது மட்டுமன்றி 12 மணி நேர வீடியோ காட்சிகள், 5.5 மணி நேர கேம் பிளேயிங் மற்றும் 12 மணி நேர தடையற்ற இசை கேட்டல் ஆகியவற்றையும் நீங்கள் பெற்று மகிழலாம். இன்றைய ஸ்மார்ட் போன் தலைமுறையில் இது போன்ற அம்சங்களை வரங்கள் என்றே கூறினாலும் அது மிகையாகாது.

  ஓப்போ F11 Pro


  3. கேமிங் அனுபவம்: லேட்டஸ்டான ஆக்டா-கோர் Helio P70 கேமிங் சிப்செட் சிறந்த செட்டப்பை கேம் ரசிகர்களுக்கு தருகிறது. துல்லியமான விஷுவல் & கால தாமதமற்ற விளையாட்டு அனுபவம் ஆகியவற்றை ஹை-என்ட் கேம்களான PUBG போன்றவற்றை விளையாடுகையில் பெறலாம். ஹீட் மேனேஜ்மெண்ட் சிஸ்டமில் RAM 6 GB மற்றும் 64 GB ஸ்டோரேஜ் நீடித்த மற்றும் தத்ரூபமான கேமிங் செஷன்களை போனுக்கு எந்த இடையூறுமின்றி தருகிறது. நீண்ட நேரம் விளையாடுகையிலும் போன் சூடாகி விடாமல் பாதுகாக்கிறது.

  4. வடிவம்: 25000 க்கும் குறைவான விலையில், இந்த போன் ஆச்சர்யத்தக்க தோற்றம் மற்றும் உயர் தர ஃபினிஷ் கொண்டுள்ளது. போன் பார்க்க அழகாக இருப்பதுடன் உறுதியான பிடிமானம் கொண்டு நீடித்துழைக்கும் தன்மையையும் பெற்றுள்ளது. இனி தடிமனான போன் கேஸ்களுக்கு நீங்கள் விடை கொடுத்துவிடலாம். அது தனித்துவமான் இரண்டு வண்ணங்களில் கிடைக்கின்றது – ஔரோரா க்ரீன் மற்றும் தண்டர் பிளாக் இதன் அழகை மேலும் மெருகூட்டும் வகையில் உள்ளது.

  OPPO F11 Pro, 6.5 இன்ச் டிஸ்பிளேவில் 90.9% பாடி டூ ஸ்கிரீன் விகிதத்தில் தேவைப்படும் போது உயரக்கூடிய கேமராவினால் ஃபுல் HD+ பார்வை கோண அனுபவம் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள IPS LCD பேனல் தனது காட்சிகளை 1,080 x 2,340 பிக்சல்கள் ரெசல்யூஷனில் தருகிறது.

  ஓப்போ F11 Pro


  5. AI & அம்சங்கள்: பவர்ஃபுல் கிளவுட் சர்வீஸ் பேக்கேஜ், டிராவர் மோட், எளிமையான நேவிகேஷன் சிக்னல்கள், ஸ்மார்ட் ரைடிங் மோட், மற்றும் திறமை வாய்ந்த ஸ்மார்ட் அசிஸ்டன்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ள OPPO F11 Pro வில் பில்ட்-இன் AI உள்ளது. இது பின்னணியில் உள்ள ஆப் ஐ உறையச் செய்து மெமரி மேனேஜ்மெண்டை அதிகரிக்கிறது. கூடுதல் கிளவுட் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இருப்பதால் யூசர்கள் தங்களது கான்டாக்ட்ஸ் மற்றும் போட்டோக்களை டெலீட் செய்ய வேண்டியிப்பதில்லை.

  கவனிக்கத்தக்க இதர கிளவுட் சேவைகள் போட்டோ சிங்க், வீடியோ சிங்க், ஆல்பம் ஷேரிங், புக்மார்க் சிங்க், நியூஸ் சிங்க் (இந்தியா மாட்டும்), கால் ரெக்கார்டிங் சிங்க், வைஃபை கீ சிங்க், SMS பேக்கப் மற்றும் ரீஸ்டோர், ஜெனரல் சிஸ்டம் செட்டிங்ஸ் பேக்கப் மற்றும் ரீஸ்டோர், கால் ஹிஸ்டரி பேக்கப் மற்றும் ரீஸ்டோர்.

  யூசர்கள் தேவையற்ற பிரமோஷன் அல்லது விளம்பரங்களைக் காணாமல் இருக்க, OPPO F11 Pro OPUSH ஆக்சஸ் விதிகள் மற்றும் ஆன்ட்ராய்ட் நேட்டிவ் நோட்டிஃபிகேஷன் முன்னுரிமைகளை வகுத்துள்ளது. இதனால் குறைவான முன்னுரிமை நோட்டிஃபிகேஷன்கள் தென்படாது.

  ஓப்போ F11 Pro


  OPPO F11 Pro வின் ஸ்மார்ட் டூயல் நெட்வொர்க் ‘மோசமான சிக்னல்’ பிரச்சினைகளைத் தனது ஸ்மார்ட் ஆன்டனா அல்காரித்தம் மூலம் (மேலிருந்து கீழ் மாற்றுதல், இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் மாற்றுதல், லேண்ட்ஸ்கேப் இல் இருந்து போர்ட்ரெயிட்டுக்கு மாற்றுதல் ஆகியவை) தடையற்ற நெட்வொர்க்கை வழங்குகிறது.

  6. வாங்க எளிதான விலை: OPPO, வாங்கும் திறனுக்கேற்ற தரம்’ என்ற எண்ணத்தை ஸ்மார்ட் போன் தொழிற்பிரிவில் இருந்து மாற்றியுள்ளது. தனது நிகரற்ற ஹெட்செட்டை ரூ. 25,000 க்கு குறைவான விலையில் அது வழங்குகிறது. பிரீமியம் டிசைன், 48 MP கேமரா, மோட்டரைஸ் செய்யப்பட்டு உயரக்கூடிய கேமரா அற்புதமான பேட்டரி லைஃப் ஆகியவற்றைக் கொண்ட OPPO F11 Pro, 25,000 க்கும் குறைவான விலையில் வாங்கக்கூடிய சிறந்த ஸ்மார்ட்போன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  ஓப்போ F11 Pro


  சொகுசான உயர் தர அனுபவத்தை, வாங்க எளிதான விலையில் பெறலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Tamilarasu J
  First published: