HOME»NEWS»TECHNOLOGY»what jio has done in india is truly remarkable says zuckerberg to ambani mg

Facebook Fuel for India 2020: இந்தியாவில் ஜியோவின் பங்கு குறிப்பிடத்தக்கது.. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்..

Facebook Fuel for India 2020: இந்தியாவில் ஜியோவின் பங்கு குறிப்பிடத்தக்கது.. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்..
அம்பானி - ஜூக்கர்பெர்க்
  • Share this:

Facebook Fuel for India 2020. என்னும் நிகழ்வில் நிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியும், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கும் உரையாடியுள்ளனர். முதலில் பேசிய மார்க் ஜுக்கர்பெர்க், ஃபேஸ்புக்கின் புதிய அம்சங்களை உலகளாவிய அளவில் வெளியிடுவதற்கு முன்பாக, இந்தியாவில்தான் முதலில் பொருத்திப் பார்ப்பதாகத் தெரிவித்ததுடன், இந்தியா ஆஸ்திரேலிய லைவ் குறித்தும், பிரதமர் மோடியின் டிஜிட்டல் தொலைநோக்கு பார்வையைக் குறித்தும் பேசினார்.

தொடர்ந்து பேசிய ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி, ’டிஜிட்டல் மாற்றம் என்பது இந்திய இளைஞர்களின் வாழ்வை எந்த விதம் மாற்றியுள்ளது என்பதையும், இந்தியாவில் சுயதொழில் முனைவோருக்கு மார்க் ஜுக்கர்பெர்க் எத்தகைய ஊக்கமாக இருக்கிறார் என்பதையும் குறுத்து பெருமையடைவதாகக் கூறினார். மேலும் பேசிய அவர், ’உலகின் டிஜிட்டல் இணைப்புக்கான கட்டமைப்பாளர் என மார்க் ஜுக்கர்பெர்க்குக்கு புகழாரம் சூட்டியதுடன், இந்தியாவிலும், ஜியோவிலும் முதலீடு செய்வது குறித்து மார்க்கின் எண்ணங்களைக் கேட்டறிந்தார்.





டிசம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் நடக்கும், Facebook Fuel for India 2020 நிகழ்வில் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோர் கலந்து கொண்டு பேசியுள்ளனர். ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி (தலைமை நிர்வாக அதிகாரி) மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்) தலைவர் முகேஷ் அம்பானி ஆகியோர் Facebook Fuel for India 2020 நிகழ்வில் பேசியுள்ளனர்.

மேலும் படிக்க: Facebook Fuel for India 2020 நிகழ்வில் பங்கேற்கும் முகேஷ் அம்பானி, மார்க் ஜூக்கர்பெர்க்.. Facebook Fuel for India 2020 நிகழ்

இரண்டு நாள் நிகழ்வாக நடக்கவிருக்கும் டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும். ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஷெரில் சாண்ட்பெர்க் மற்றும் ஃபேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும் துணைத் தலைவருமான அஜித் மோகன் ஆகியோர் பேசியுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் தலைமை ஆடம் மொசெரி மற்றும் வாட்ஸ்-அப் தலைமை வில் காட்கார்ட் ஆகியோரும் இந்த நிகழ்வில் உரையாற்றினர். இந்த நிகழ்வில் ஜியோ நிறுவன இயக்குனர்களான ஆகாஷ் மற்றும் இஷா அம்பானி இந்திய தொழில்நுட்பம், தொலைதொடர்பு மற்றும் ஜியோவின் குறித்து பேசியுள்ளனர். பேச்சாளர்களின் பட்டியலில் தி மாம்ஸ் கோThe Moms Co  நிறுவனர் மாலிகா சதானி மற்றும் கண்டெண்ட் க்ரியேட்டர் குஷா கபிலா ஆகியோரும் அடங்குவர்.
Published by:Gunavathy
First published: