சியோமி எம்ஐ மிக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் இத்தனை சிறப்பம்சங்களா ?

சியோமி ஸ்மார்ட்போன்

ஒரு சூப்பரான ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்று ஆசைபடுகிறீர்களா ? அப்ப இதை படியுங்கள்..

  • Share this:
டிஸ்ப்ளே செல்பி கேமராவுடன் கிடைக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக சியோமி எம்ஐ மிக்ஸ் 4 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேமரா தொழில்நுட்பம், கேமரா சென்சார் இந்த ஸ்மார்ட்போனில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 20MP அண்டர்-டிஸ்ப்ளே செல்ஃபி கேமராவைத் தாண்டி, Mi Mix 4 6.67-inch full HD+ AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது 120Hz புதுப்பிப்பு வீதம், 480Hz touch sampling rate, சமீபத்திய கார்னிங் கொரில்லா கிளாஸ் மற்றும் HDR10+, 10-bit TrueColor மற்றும் டால்பி விஷன் சான்றிதழ் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் சிப்செட், ரேம் நான்கு மாடல்களில் கிடைக்கிறது. அதாவது 8 ஜிபி மற்றும் 128 ஜிபி, 8 ஜிபி மற்றும் 256 ஜிபி, 12 ஜிபி மற்றும் 256 ஜிபி, மற்றும் 12 ஜிபி மற்றும் 512 ஜிபி என நான்கு வேரியண்டுகள் உள்ளன. பிராசஸ்சாரை பொறுத்தவரை ஆக்டா கோர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. சியோமி எம்ஐ மிக்ஸ் 4 மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.உள்ளமைவு f/1.33 லென்ஸுடன் 108MP முதன்மை கேமரா , பெரிஸ்கோபிக் லென்ஸ் மற்றும் 50x கலப்பின ஜூம் கொண்ட 8MP டெலிஃபோட்டோ கேமரா மற்றும் f/2.2 வைட்-ஆங்கிள் லென்ஸுடன் 13MP அல்ட்ரா-வைட் கேமரா கொண்டுள்ளது.

மேலும் லி-பாலிமர் வகை பேட்டரியை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 4,500mAh பேட்டரியுடன் 120W வயர் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டையும் கொண்டுள்ளது. மேலும் இந்த போன் சூடாவதை தவிர்க்க குளிரூட்டும் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது, இது கேபிள் மூலம் சார்ஜ் செய்யப்படும்போது கூட அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பராமரிக்கும் என்று சியோமி கூறுகிறது.

Also Read : தடுப்பூசி போட்டு கொண்டால் Apple AirPods முற்றிலும் இலவசம் - புதிய அறிவிப்பால் டீனேஜர்ஸ் குஷி!

மேலும் 5G, Wi-Fi 6E, ப்ளூடூத் 5.2 மற்றும் GPS மற்றும் NavIC ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் இது NFC-யையும் கொண்டுள்ளது, மேலும் ஸ்மார்ட் சாதன இணைப்பிற்காக UWB சிப் வசதியும் உள்ளது. இதுமட்டுமின்றி இன்ஃப்ராரெட் சென்சார், கைரேகை சென்சார், ஹர்மன் கார்டனின் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், Hi-Res ஆடியோ சான்றிதழ், லைட் சென்சார், பிராக்ஸிமிட்டி சென்சார், ஆக்சிலரோமீட்டர், பாரோமீட்டர் , காம்பஸ், கய்ரோஸ்கோப் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. இதில் தூசி மற்றும் ஸ்பிளாஸை எதிர்க்கும் IP68 durability சான்றிதழையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

விலை விவரம் :

சியோமி எம்ஐ மிக்ஸ் 4 விலை 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட்டுக்கு CNY 4,999 (தோராயமாக ரூ. 57,500), 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டுக்கு CNY 5,299 (தோராயமாக ரூ. 61,000) , 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டுக்கு CNY 5,799 (தோராயமாக ரூ. 66,500) மற்றும் 12GB + 512GB வேரியண்ட்டுக்கு CNY 6,299 (தோராயமாக ரூ. 72,000) என நிர்ணயித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: