Home /News /technology /

சாஃப்ட்வேர் டெவலப்மென்ட்டில் API மற்றும் DevOps-ன் பங்கு என்ன.? தேவையான தகுதிகள் மற்றும் அடிப்படை திறன்கள் என்னென்ன.!

சாஃப்ட்வேர் டெவலப்மென்ட்டில் API மற்றும் DevOps-ன் பங்கு என்ன.? தேவையான தகுதிகள் மற்றும் அடிப்படை திறன்கள் என்னென்ன.!

மாதிரி படம்

மாதிரி படம்

Software Development | கிளவுட் சர்வர்களில் சாஃப்ட்வேரை பிளக்-இன் செய்ய, ஒருங்கிணைக்க அல்லது நிர்வகிக்க தேவையான திறன்கள் API (Application Programming Interface) மற்றும் DevOps (software development (Dev) and IT operations (Ops) )என அழைக்கப்படுகின்றன.

மேலும் படிக்கவும் ...
சாஃப்ட்வேர் டெவலப்மென்ட் என்பது சாஃப்ட்வேரை கிரியேட், டிசைன் செய்வது மற்றும் சப்போர்ட் ப்ராசஸ்கென்று அர்ப்பணிக்கப்பட்ட கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆக்டிவிட்டிஸின் தொகுப்பாகும். ஒரு அழகான மாளிகை ஒன்றை உருவாக்குவதை கற்பனை செய்து பாருங்கள்.

அழகான மாளிகையை எந்த ஒரு சாலைகள் அல்லது பிற உள்கட்டமைப்புகளுடன் இணைக்கவில்லை என்றால் அது எப்படி இருக்கும்? அதை பயன்படுத்துவது எப்படி? சாஃப்ட்வேர் டெவலப்மென்ட்லும் இதே நிலை தான். எந்த டெவலப்ட் சாஃப்ட்வேரும் அதன் திறனை அதிகரிக்க, சீரான செயல்பாட்டை உறுதிப்படுத்த வேறு சில இணக்கமான சாஃப்ட்வேருடன் இன்டெக்ரேடட் அதாவது ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

கிளவுட் சர்வர்களில் சாஃப்ட்வேரை பிளக்-இன் செய்ய, ஒருங்கிணைக்க அல்லது நிர்வகிக்க தேவையான திறன்கள் API (Application Programming Interface) மற்றும் DevOps (software development (Dev) and IT operations (Ops) )என அழைக்கப்படுகின்றன. இந்த திறன்கள் புதிய சாஃப்ட்வேரை உருவாக்குவதில் பணிபுரியும் ஒருவருக்கு தேவையான மிக அடிப்படையான மற்றும் அத்தியாவசியமான திறன் தொகுப்புகளில் ஒன்று. சாஃப்ட்வேர் டெவலப்மென்டில் API மற்றும் DevOps-ன் பங்கு பற்றி தற்போது பார்க்கலாம்.



DevOps என்றால் என்ன?

டெவலப்மென்ட் மற்றும் ஆபரேஷன் என்ற 2 வார்த்தைகளின் கலவை தான் DevOps. எந்தவொரு நிறுவனத்தின் அப்ளிகேஷன் டெவலப்மென்ட் மற்றும் IT செயல்பாட்டுக் குழுவால் பணிகளைச் செய்வதற்கான கூட்டுப் பிரதிநிதித்துவம் மற்றும் பகிரப்பட்ட அணுகுமுறை என்பது இதன் பொருள். நிறுவனத்தில் உள்ள பல குழுக்களிடையே தொடர்பு, ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் தன்னியக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு அணுகுமுறையாக இருக்கிறது DevOps. இதன் அடிப்படை நோக்கம் தொடர்ச்சியான வொர்க்ஃப்ளோசை (workflows) வழங்குவதன் மூலம் சாஃப்ட்வேரின் வேகம், தரத்தை மேம்படுத்துவது.

டெவலப்பர்கள் மற்றும் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்களுக்கு இடையே நம்பிக்கை மற்றும் ஒருங்கிணைப்பை உருவாக்குவதன் மூலம், தொழில்நுட்பத் திட்டங்களை வணிகத் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்குவதன் மூலமும் ஒரு DevOps டீம், தகுந்த மாற்றங்களை கொண்டு வருகிறது. டெவலப்பர்கள் உற்பத்தி உள்கட்டமைப்பின் கட்டுப்பாட்டை மேம்படுத்த, உற்பத்தி சூழலை புரிந்து கொள்ள கவனம் செலுத்த உதவுகிறது DevOps டீம்.

Also Read : Blockchain Technology என்றால் என்ன? இதில் டெவலப்பராவதற்கு தேவையான திறன்கள் என்ன?

API என்றால் என்ன?

அப்ளிகேஷன் ப்ரோகிராமிங் இன்டர்ஃபேஸ் (API) என்பது ப்ரோகிராமிங் கோட் அல்லது சாஃப்ட்வேர் இன்டர்மீடியேட்டரியின் தொகுப்பாகும். இது 2 அப்ளிகேஷன்கள்ஒன்றையொன்று தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது மற்றும் 2 சாஃப்ட்வேர் தயாரிப்புகளுக்கு இடையில் தரவு பரிமாற்றத்தை செயல்படுத்துகிறது. நீங்கள் விரும்பும் எதையும் ஆர்டர் செய்ய கூடிய உணவகத்தில் API-ஐ ஒரு மெனு என்று வைத்து கொள்ளுங்கள். மெனுவில் உள்ள உணவுகள் தரவுகளாகவும், சமையலறை ஆர்டரை பின்பற்றும் அமைப்பின் ஒரு பகுதியாகவும் செயல்படுகின்றன. இப்போது API என்பது மெசஞ்சருக்கும் கிச்சனுக்கும் இடையே ஒரு இணைப்பை உருவாக்கி, மெனுவிலிருந்து கோரிக்கை அல்லது ஆர்டரை எடுத்து சமையலறைக்கு தயார் செய்ய சொல்லும் மிடில் மேன் ஆகும்.

API ஆனது ஆப்ரேஷன்ஸ் மற்றும் டிஸ்கிரிப்ஷன்ஸ் பட்டியலை கொண்டுள்ளது. இது எவ்வாறு செய்யப்படுகிறது என்பது தெரியாமல் டெவலப்பர்கள் பயன்படுத்த முடியும். கூகுள், அமேசான் போன்ற பல பெரிய நிறுவனங்கள் தங்கள் அம்சங்களையும் செயல்பாடுகளையும் (features and functions) உருவாக்கி, அவர்களுக்காக ஒரு API-ஐ உருவாக்கி, அதை பயன்படுத்த மற்றவர்களுக்கு விற்கின்றன. இதிலிருந்து அவற்றுக்கு வருவாய் கிடைக்கிறது.



DevOps-ல் API-ன் முக்கியத்துவம்?

API மற்றும் DevOps ஆகிய இரண்டும் கைகோர்த்து செல்கின்றன. DevOps ப்ராசஸ்களில் API-க்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் DevOps ப்ராசஸ்கள் API மேனேஜ்மென்டை மேம்படுத்த உதவுகின்றன. அதே போல . பல ப்ராஜக்ட்களில் API-க்களை மீண்டும் பயன்படுத்தும் திறன், நிலைத்தன்மையையும் புதுமையையும் அனுமதித்து நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும்.

மனிதர்கள் செய்யும் பிழைகளை நீக்க ஆட்டோமேஷனை கடைப்பிடிப்பதன் மூலம் நிறுவனங்களின் செயல்பாட்டுத் திறனை அடைய இவை உதவுகின்றன. எந்த ஒரு பணியையும் ஒவ்வொரு முறையும் அதே நிலைத்தன்மையுடன் செய்ய API அனுமதிக்கிறது. இதன் மூலம் செயல்பாட்டு நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துகிறது. நிறுவனங்கள் தங்கள் ஆப்ஸ்களால் உருவாக்கப்பட்ட தரவுகளின் ஒரு பெரிய தொகுப்பைச் செயலாக்கக்கூடிய மற்றும் நிகழ்நேர அறிக்கைகளை உருவாக்கக்கூடிய அமைப்புகளை உருவாக்க API-க்களை பயன்படுத்தலாம்.

Also Read : வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் கவனத்திற்கு... வெளியானது புதிய எச்சரிக்கை.!

சம்பளம்...

கோடிங் முதல் அப்டேட்ஸ் வரை ஒரு DevOps இன்ஜினியர் சாஃப்ட்வேர் டெவலப்மென்ட் சைக்கிள் முழுவதும் தேவைகளை சமநிலைப்படுத்த தேவையான செயல்முறைகள், கருவிகள் மற்றும் வழிமுறைகளை செய்ய பொறுப்பானவர் ஆவார். ஒரு அப்ளிகேஷனை விரைவாக்க தேவையான செயல்களுக்கும் அதை நம்பகமானதாக வைத்திருக்க தேவையான பணிகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதன் மூலம் செயல்முறைகளை எளிதாக்குகிறார்கள்.

IT ஆப்ரேஷன் டீம்ஸ் மற்றும் டெவலப்மென்ட்ஸ் டீம்ஸ் பல நோக்கங்களையும் தேவைகளையும் கொண்டிருக்கும் என்பதால், இது செயல்முறைகளை எளிதாக்கும். இந்தியாவில் 2+ வருட அனுபவமுள்ள DevOps இன்ஜினியரின் சராசரி சேலரி பேக்கேஜ் ஆண்டுக்கு ஏழு லட்சம் மற்றும் 40-50 LPA வரை செல்கிறது. தனிநபரின் திறன்கள், அறிவு, நிபுணத்துவம் பொறுத்து சேலரி பேக்கேஜ் இருக்கும்.

Also Read : உங்கள் வாழ்வை எளிமையானதாக மாற்றும் கூகுள் அசிஸ்டெண்ட் வசதிகளை தவற விடாதீர்கள்.!

டெவலப்பர்ஸ் தெரிந்து கொள்ள வேண்டிய தகுதிகள் மற்றும் சில அடிப்படை DevOps திறன்கள்:

பெரும்பாலான என்ட்ரி-லெவல் DevOps ரோல்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது கோடிங், QA டெஸ்டிங் மற்றும் IT இன்ஃபிரா ஸ்ட்ரெக்ச்சர் மாடல்ஸ் பற்றிய ஆய்வுகளை உள்ளடக்கிய பிற தொடர்புடைய துறைகளில் டிகிரி தேவைப்படுகிறது. ஹை-லெவல் பொசிஷன்களுக்கு சிஸ்டம் ஆர்கிடெக்ச்சர் மற்றும் சாஃப்ட்வேர் டிசைனில் அட்வான்ஸ்டு டிகிரி தேவை.



ஒவ்வொரு DevOps இன்ஜினியரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை திறன்கள்..

* பல DevOps டூல்ஸ் மற்றும் டெக்னலாஜி பற்றிய அறிவு

* இன்டெக்ரேஷன் மற்றும் கன்டினியூயஸ் டெலிவரி பற்றிய அறிவு

* கிளவுட் சர்வர்கள், ஆட்டோமேஷன், செக்யூரிட்டி பற்றிய அறிவு மற்றும் புரிதல்

* பேசிக் சாஃப்ட் ஸ்கில்

* டெஸ்டிங் ஸ்கில்

* அனலைட்டிக்கல் மைண்ட்செட்

* கம்யூனிகேஷன் & கொலாப்ரேஷன்

* கஸ்டமர்-சென்ட்ரிக் மைண்ட்செட்

ஆக மொத்தத்தில் DevOps என்பது தொழில்நுட்பத்தைக் கையாளும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மிகவும் தேவைப்படும் தீர்வாக மாறியுள்ளது. அனைத்து நிறுவனங்களும் API மற்றும் DevOps தொழில்நுட்பங்களை ஏற்று கொண்டுள்ளன. எனவே DevOps இன்ஜினியர்களின் எதிர்காலம் நம்பிக்கைக்குரியதாக இருக்கிறது.
Published by:Selvi M
First published:

Tags: Technology

அடுத்த செய்தி