கடந்த ஓரிரு நாட்களாக, உலகம் முழுவதும் அதிகமாக சொல்லப்பட்ட வார்த்தை ‘மெட்டாவெர்ஸ்’ என்பதாகத் தான் இருக்கும். இணையத்தின் கைகோர்த்து தொழில்நுட்ப வளர்ச்சி தற்போது ஒரு புதிய மெயில்கல்லை அடைந்துள்ளது. இணைய உலகின் எதிர்காலம் என்றே இதைக் கூறலாம். ‘மெட்டாவெர்ஸ்’ என்றால் என்ன? ஏன் இவ்வளவு பரபரப்பாக பேசப்படுகிறது?
‘மெட்டாவெர்ஸ்’ என்றால் என்னவென்று சரியாகத் தெரிந்துகொள்ளாமல், பலரும் பலவிதமாகக் கூறி வருகின்றனர். ஃபேஸ்புக் தன்னுடைய பெயரை ‘மெட்டாவெர்ஸ்’ என்று மாற்றப்போகிறது என்றும், ‘மெட்டாவெர்ஸ்’ என்ற சொல்லை இணையவாசிகள் பகுப்பாய்வு செய்தும் வருகின்றனர். ஆனால், ‘மெட்டாவெர்ஸ்’ என்பது அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் வெளிப்பாடு என்று ஆணித்தரமாக கூறலாம்.
‘மெட்டாவெர்ஸ்’ என்பது ஒரு விர்ச்சுவல் ரியாலிட்டி(VR). ஆனால், VR என்பது 1970 களின் இறுதிகளிலேயே பேசப்பட்டு வந்த நவீனமான அம்சம் தான். ஆனால், பரவலாக காணப்படும், பயன்படுத்தப்படும் VR தொழில்நுட்பம் போல இல்லாமல், உண்மையிலேயே மெட்டாவெர்ஸ் மேம்பட்ட உருவாக்கம் தான். தற்போது VR சாதனங்கள், கேமிங், திரைப்படங்கள், போன்றவற்றுக்குத் தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நீங்கள் மெட்டாவெர்ஸ் பயன்படுத்தும் போது, கணினியின் முன் அமர்வது போல இல்லாமல், இந்த VR சாதனம் உங்களை ஒரு புது விதமான டிஜிட்டல் உலகுக்கு அழைத்துச் செல்லும். அதாவது, உங்களை நீங்களே ஒரு 3D வடிவில் உணரக்கூடும்.
Must Read | ஆதாரில் மொபைல் எண்ணை மாற்ற வேண்டுமா? ஆன்லைனில் அப்ளை செய்ய ஸ்டெப்ஸ் இதோ!
மெட்டாவெர்ஸ் என்பது கேமிங் அல்லது பொழுதுபோக்கு VR சாதனம் மட்டும் அல்ல. பணியிடம், சமூக வலைத்தளங்கள், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விர்ச்சுவலாக ஒவ்வொருவருக்கும் அவதார்களை உருவாக்கி பல்வேறு விதமாக பயன்படும் வகையில் உருவாகலாம் என்று கூறப்படுகிறது.
அதாவது உங்களிடம் மெட்டாவெர்ஸ் VR சாதனம் இருந்து, நீங்கள் உங்கள் அலுவலக மீட்டிங்கில் பயன்படுத்த வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் தோற்றத்தைப் போன்ற ஒரு அவதாரை உருவாக்கி, விர்ச்சுவலாகத் தோன்றலாம். திரைப்படங்களில், வெப் சீரிஸ்களில் காணப்பட்ட இந்த ஐடியாக்கள் தற்போது செயலாக்கப்படும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஆனால், இப்போது வரை இது ஒரு ’ஐடியா’ என்ற அளவிலேயே உள்ளது. எனவே, மெட்டாவெர்ஸ் என்றால் என்ன என்பதை துல்லியமாக இப்போது கூற முடியாது. மெட்டாவெர்ஸ் மற்றொரு VR தானே, அது ஏன் இவ்வளவு பரபரப்பாக பேசப்படுகிறது என்று நீங்கள் யோசிக்கலாம்! அதற்கான காரணம், இதை உருவாக்குவது, ஃபேஸ்புக் நிறுவனத் தலைவரான மார்க் ஜுக்கர்பெர்க். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் அடுத்து, மார்க் ஜுக்கர்பெர்க் தன்னுடைய கவனத்தை VR இன் மீது செலுத்தியுள்ளார்.
இதனை முழுமையாக வடிவமைத்து, உருவாக்குவதுடன், இதற்கான ஆப்ஸ்களையும் உருவாக்கும் பணியில் நடைபெற இருக்கிறது. போட்டி நிறுவனங்களை வாங்கி தனக்குச் சொந்தமாக்கிக் கொள்வதில் கை தேர்ந்த மார்க் ஜுக்கர்பெர்க், மெட்டாவெர்ஸ் உருவாக்கத்தில் அவ்வளவு அவசரம் காட்டமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Must Read | அச்சுறுத்தும் டெங்கு! பாதுகாப்பாக இருப்பது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்
மெட்டாவெர்ஸ் நிறுவனத்தில் 50 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. முழுமையாக இந்த ஐடியாவை செயல்படுத்தி நிறைவேற்ற குறைந்தது பத்து ஆண்டுகள் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஸ்புக் செயலி Facebook என்ற பெயரிலேயே இயங்கும். இதுவரை Facebook நிறுவனத்தின் கீழ் இயங்கி வந்த ஃபேஸ்புக், மெஸன்ஜர், இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்டவை Meta எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் என்றும் கூறப்படுகிறது.
அதிநவீன விர்ச்சுவல் ரியாலிட்டியை வளர்க்கும் முயற்சியில், இந்த நிறுவனத்துக்காக ஐரோப்பாவில் கிட்டத்தட்ட 10000 ஊழியர்களை பணியமர்த்த இருக்கிறார் மார்க் ஜுக்கர்பெர்க்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Facebook, Instagram, Mark zuckerberg, Technology