தொடர் பேரிடர்களுக்கு ’சோலார் மினிமம்’ நிகழ்வு காரணமா?

கொரோனா பாதிப்புகளுக்கு இடையே இரண்டு புயல்கள், டெல்லியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் என பெரும் இடர்களை சந்தித்து வருகிறது இந்தியா. இதற்கு சோலார் மினிமம் காரணமாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

தொடர் பேரிடர்களுக்கு ’சோலார் மினிமம்’ நிகழ்வு காரணமா?
கோப்புப் படம்
  • Share this:
கடந்த ஒரு மாதத்தில் உம்பன், நிசர்கா இரண்டு புயல்களும் நாட்டின் இருவேறு பகுதிகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தின. டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 2 மாதங்களில் 10-க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்த ஏற்பட்ட இந்த இயற்கை பேரிடர்களுக்கு "சோலார் மினிமம்" என்னும் வானியல் நிகழ்வு காரணமாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சூரியனில் உள்ள "சன் ஸ்பாட்" எனப்படும் கரும்புள்ளிகளின் அளவை பொறுத்தே வெப்பநிலைக்கு மிக முக்கிய காரணியாக இருக்கும் வெப்பநிலைகளில் மாற்றம் ஏற்படும். இதன் அளவு அதிகரிக்கும் போது சோலார் மேக்சிமம் என்றும் குறையும் போது சோலார் மினிமம் என்றும் அழைக்கப்படுகிறது.

இது போன்ற சோலார் மினிமம் ஏற்படும் போது, பூமியில் குளிர் அதிகரிக்கும் என்றும், இதனால் விவசாயம் போன்ற பணிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.


அதே சமயம் சோலார் மினிமத்தால் சூரியனின் வெப்பநிலையில் மாற்றம் இருந்தாலும், நிலப்பகுதிக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும், நிலநடுக்கம் போன்ற பேரிடர்களுக்கும் சோலார் மினிமமுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது.

ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் ஏற்படும் இயற்கையான ஒரு மாற்றம்தான் சோலார் மினிமம், அது குறித்து பயப்பட தேவையில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க...கொரோனாவை நிறுத்து! அப்புறம் தேர்வை நடத்து! - எதிர்க்கட்சிகள் கூட்டாக வலியுறுத்தல் 
First published: June 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading