கூகுள் I/O என்றால் என்ன? தொழில்நுட்ப பிரியர்கள் ஏன் இதை கவனிக்க வேண்டும்?

2008-ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை இந்த Google I/O வருடாந்தர டெவலப்பர் மாநாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

news18
Updated: May 8, 2019, 12:30 PM IST
கூகுள் I/O என்றால் என்ன? தொழில்நுட்ப பிரியர்கள் ஏன் இதை கவனிக்க வேண்டும்?
கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை
news18
Updated: May 8, 2019, 12:30 PM IST
உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் ஒவ்வொரு ஆண்டும் Google I/O என்ற பெயரில் வருடாந்தர டெவலப்பர் மாநாட்டை நடத்துகிறது.

2008-ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை இந்த Google I/O வருடாந்தர டெவலப்பர் மாநாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Google I/O வருடாந்தர டெவலப்பர் மாநாட்டில் கூகுள் தங்களது புதிய தயாரிப்புகள் மற்றும் தங்களது சேவையில் சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சங்களைப் பற்றியெல்லாம் அறிவிக்கும்.

அதே போன்று 2019-ம் ஆண்டுக்கான Google I/O வருடாந்தர டெவலப்பர் மாநாடு மே 7-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Google I/O வருடாந்தர டெவலப்பர் மாநாடு 2019-ன் முதல் நாளான நேற்று கூகுள் பிக்சல் 3ஏ XL இந்திய விலை, புதிய ஆண்டிராய்ட் கியூ பதிப்பு போன்ற பல்வேறு அறிவிப்புகளைக் கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை வெளியிட்டார்.

கூகுள் Pixel 3a மற்றும் Pixel 3a XL ஸ்மார்ட்ஃபோன்கள் ரூ.39,999 மற்றும் ரூ.44,999 விலையில் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று கூகுள் அறிவித்துள்ளது.

மேலும் இந்த மாநாட்டில் கூகுள் மேப்பில் சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சங்கள், ஆஃப்லைன் கூகுள் அசிஸ்டண்ட் சேவை, ஆண்டிராய்டு டிரைவிங் மோட், கூகுள் வீட்டு சாதனங்கள், டியுப்லஸ் வெப் ஏபிஐ உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளைக் கூகுள் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க:
First published: May 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...