Home » News » Technology » WHAT IS EFFECT FROM WHATSAPP NEW POLICIES VJR

வாட்ஸ் அப்பின் புதிய தனியுரிமை கொள்கை என்ன? அதனால் வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

வாட்ஸ்ஆப்பின் இத்தகைய தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள் பிப்ரவரி 8 முதல் நடைமுறைக்கு வரும்.

வாட்ஸ் அப்பின் புதிய தனியுரிமை கொள்கை என்ன? அதனால் வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?
வாட்ஸப்
  • Share this:
பயனர்களின் தகவல்கள் பிற நிறுவனங்களுக்கும் பகிரப்படும் என வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்துள்ளதால், அதற்கு பதிலாக டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளுக்கு பெரும்பாலானோர் மாறி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாட்ஸ் ஆப்பை வாங்கிய ஃபேஸ்புக் நிறுவனம், தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. இருந்தாலும், பயன்படுத்துவதற்கு எளிதானது என்பதால், பெரும்பாலானோர் வாட்ஸ் ஆப்பை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பணப் பரிவர்த்தனை செய்யும் வசதியும் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், தனது புதிய தனியுரிமைக் கொள்கையை வாட்ஸ் ஆப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, பயனாளர்களுக்கு கடந்த புதன்கிழமை அனுப்பிய அறிவிப்பில், பயனர்களின் தொலைபேசி எண், தொடர்பு எண்கள், இருப்பிட விவரம் உள்ளிட்ட சுயவிவரங்களை ஃபேஸ் புக் உள்ளிட்ட தங்கள் நிறுவன தளங்களில் பகிர ஒப்புதல் கேட்டு வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, பயனர்கள் தங்கள் வாட்ஸ்ஆப் தகவல்களை பேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்பதை விருப்பத் தேர்வு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது.


ஆனால் இந்த முறை கட்டாயமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பும் தனிப்பட்ட மெசேஜ், நீங்கள் நடத்தும் விவாதத்தின் உள்ளடக்கம், Whatsapp Pay மூலம் வாங்கும் பொருட்கள் மற்றும் பணப்பரிவர்த்தனை, பயன்படுத்தும் சிம் கார்டு, செல்போன் மாடல், பேட்டரியின் அளவு, சிக்னலின் தரம், பயன்படுத்தும் ஓ.எஸ். மற்றும் பிரவுசர், ஐபி முகவரி உள்ளிட்ட பல விவரங்களை தனது சர்வரில் சேகரித்து கொள்ளும் வாட்ஸ் ஆப் நிறுவனம், அதை பேஸ்புக் நிறுவனம் மற்றும் அதனுடன் ஒப்பந்தம் வைத்துள்ள பிற நிறுவனங்களுக்கும் விற்பனை செய்து கொள்ளும்.

இந்நிலையில், பல செயலிகள் தற்போதும் இதுபோன்று தகவல்களை விற்று வருவதாக சைபர் க்ரைம் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, வாட்ஸ்ஆப்பின் இத்தகைய தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள் பிப்ரவரி 8 முதல் நடைமுறைக்கு வரும் என்றும், பயனர்கள் புதிய மாற்றங்களை ஏற்கவில்லை என்றால், அவர்கள் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தமுடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், கடும் அதிர்ச்சி அடைந்துள்ள பயனாளர்கள் பலர், வாட்ஸ் ஆப்புக்கு மாற்றாக இயங்கி வரும் டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளுக்கு மாறி வருகின்றனர். இதனிடையே, டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க்கும் வாட்ஸ் ஆப்பை தவிர்த்து, பிற செயலிகளை பயன்படுத்துமாறு பரிந்துரை செய்துள்ளார்.
First published: January 10, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading