Home /News /technology /

கங்கண சூரியகிரகணம் : சிறப்புகள் என்ன? எந்த பகுதியில், எந்த நேரத்தில் தெரியும்?

கங்கண சூரியகிரகணம் : சிறப்புகள் என்ன? எந்த பகுதியில், எந்த நேரத்தில் தெரியும்?

மாதிரி படம்

மாதிரி படம்

அரிய வானியல் நிகழ்வான கங்கண சூரியகிரகணம் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட உள்ளது. தமிழகத்தில் 34 சதவிகிதம் மட்டுமே தெரியும் இந்த கங்கண சூரிய கிரகணத்தின் சிறப்புகள் என்ன, எந்தெந்த பகுதிகளில் எல்லாம் சூரிய கிரகணத்தை காண முடியும்?

    அரிய வானியல் நிகழ்வான கங்கண சூரியகிரகணம் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட உள்ளது. தமிழகத்தில் 34 சதவிகிதம் மட்டுமே தெரியும் இந்த கங்கண சூரிய கிரகணத்தின் சிறப்புகள் என்ன, எந்தெந்த பகுதிகளில் எல்லாம் சூரிய கிரகணத்தை காண முடியும்?

    சூரியன், பூமி, நிலா ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது ஏற்படுவது கிரகணம் ஆகும். இதில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும் நிகழ்வு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக அமாவாசை நாட்களில் தான் சூரிய கிரகணம் ஏற்படும்.

    அப்போது பகலிலேயே சூரிய ஒளி மறைந்து வானில் இருள் தோன்றும். இந்த நிகழ்விற்கு முழு சூரிய கிரகணம் என்று பெயர். சில நேரங்களில் நிலவால் மறைக்கப்பட்ட சூரியன் ஒரு வளையம் போல் வானில் காட்சி தரும். இது நெருப்பு வளைய சூரிய கிரகணம் அல்லது கங்கண சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

    இதுபோன்ற கங்கண சூரிய கிரகணம் முன்னதாக 2010 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் நாளிலும் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதியும் ஏற்பட்டது. அடுத்ததாக ஜூன் 20 கங்கண சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. மத்திய ஆப்ரிக்கா, காங்கோ, எத்தியோப்பியா, தெற்கு பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவில் இந்த சூரிய கிரகணம் தெரியும்.

    இந்தியாவை பொறுத்தவரை காலை 9:15 மணிக்கு தொடங்கி, மாலை 3:04 மணிக்கு முடிகிறது. முழு சூரிய கிரகணம் மதியம் 12:10 மணிக்கு தெரியும். ராஜஸ்தான், ஹரியானா, உத்தரகண்ட் மாநிலங்களில் முழுமையாக கிரகணத்தை பார்க்க முடியும்.

    இந்தப் பகுதி நேர, கங்கண சூரிய கிரகணம் டெல்லியில் கிரகணம் 94 சதவீதமும், கவுஹாத்தியில் 80 சதவீதமும், பாட்னாவில் 78 சதவீதமும் இருக்கும். சில்சாரில் 75 சதவீதம், கொல்கத்தாவில் 66 சதவீதம், மும்பையில் 62 சதவீதம், 37 சதவீதம் பெங்களூரில், சென்னையில் 34 சதவீதம், போர்ட் பிளேயரில் 28 சதவீதமும் தெரியும்.

    சென்னையில் காலை 10:21 தொடங்கும் சூரிய கிரகணம் பிற்பகல் 1:41 வரை நீடிக்கும். அதிகப்பட்ச கிரகணமானது நண்பகல் 12 மணிக்கு நிகழும். வெறும் கண்களாலோ, தொலைநோக்கியாலோ சூரிய கிரகணத்தை கட்டாயம் பார்க்கக்கூடாது என கூறும் பிர்லா கோலாரங்க இயக்குநர் சவுந்தர்ராஜன் அவ்வாறு பார்த்தால் கண்களின் விழித்திரையில் உள்ள செல்கள் பாதிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

    அடுத்த சூரிய கிரகணம் 2020 டிச., 14ல் தோன்றும். அதே நேரத்தில் கங்கண சூரிய கிரகணத்தை பொறுத்தவரை 2031 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி தான் இனி காண முடியும்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Solar eclipse

    அடுத்த செய்தி